பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டைமுடி சண்டை...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: ரொம்ப நேரமா நல்லா தானே பேசிக்கிட்டு இருந்தாங்க ஆனா திடீர்னு பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த செயல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைக்கிறது.
தாமரைச்செல்வி ஐக்கி தலை முடியை பின்னி எடுத்து விட்டார்.
இது எத்தனை நாள் கோபமோ தெரியவில்லை என ரசிகர்கள் கலாய்ப்பு.

கொண்டை முடி சண்டை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அபிஷேக் வெளியேறிவிட்டால் நிகழ்ச்சி ஜாலியாக இருக்கும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு நேற்றைய எபிசோட் கொஞ்சம் அதிர்ச்சிதான் கொடுத்திருக்கிறது. நிகழ்ச்சி ஜாலியாக இருக்கும் போட்டியாளர்கள் அவர்களாக தன்னிச்சையாக விளையாடுவார்கள் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு எதிர்மறையாக நேற்றைய கொண்டை மூடி சண்டை பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. என்ன இப்படி கிளம்பி விட்டார்கள் என்று பலர் புலம்பி வருகின்றனர்.

மிரட்டிய தாமரை
இது வரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் அதிகமான பெண் போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். அதனால் ஆரம்பத்தில் பெண் போட்டியாளர்களுக்குள் தான் பிரச்சனைகள் ஏற்படும் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அப்படி ஒன்றும் நடைபெறுவது போல இல்லை என அனைவரும் நினைத்து வந்தனர். இந்நிலையில் நேற்று பெண் போட்டியாளர்கள் செய்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

விளையாட்டைத் தொடங்கியது தாமரை
வெள்ளந்தியான பேச்சால் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருந்த தாமரைச்செல்வி விளையாடாமல் ஒதுங்கி இருக்கிறார் என்று ரசிகர்கள் கூறிவந்த நிலையில், என்ன...சொல்கிறீர்கள் நான் விளையாட நினைத்தால் வேற மாதிரி இருக்கும் என்று இப்போது நிரூபித்து விட்டார், என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். போட்டியாளர்கள் நேரம் போக வேண்டும் என்பதற்காக ஜாலியாக சண்டை போடும் விளையாட்டை தொடங்கி இருக்கின்றனர்.

மாட்டிக்கொண்ட ஐக்கி
ஆரம்பத்தில் ராஜுவும், நிரூப்பும் விளையாட்டு சண்டை போட்டுக் கொண்டு இருந்ததை பார்த்து தாமரைச்செல்வி இந்தா நானும் வாரேன் என்று கிளம்பி விட்டார். அவர் பிரியங்காவிடம் சண்டையைத் தொடங்கி பிரியங்காவை பெட்டில் தூக்கி போட்டு விட்டார். அடுத்ததாக அவரிடமிருந்து மாட்டிக்கொண்டார். வாலண்டரியாக நான் வருகிறேன் விளையாட என்று இவர் போனதும் இவருடைய முடியை பிடித்து தாமரை ஆட்டியதை பார்த்து சக போட்டியாளர்களும் பயந்து போய் விட்டனர். அப்பாடா இவரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று ஐக்கி பெர்ரி தலைதெறிக்க ஓடி விட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications