Thazhampoo Serial: பாம்பைப் பாருங்க.. என்ஜாய் பண்ணுங்க.. ஆனா எல்லாமே கற்பனைதான்!
சென்னை: கற்பனைக்கும் எட்டாத சில கதைகளை இப்போதைய தொலைகாட்சி சீரியல்களில் நன்றாகவே கண்டு மகிழலாம். அப்படித்தான் இருக்கிறது விஜய் டிவியின் தாழம்பூ சீரியல்.
பூலோகம், நாகலோகம் என்று இரு உலகத்தின் முக்கியஸ்தர்களிடையே நடக்கும் போட்டி இது.அதாவது நாக உலகத்தில் பூஜை செய்துகொண்டு இருந்த நாக லிங்கம் பூலோகத்துக்கு எப்படியோ வந்துவிட்டது.
அதை மீண்டும் நாக லோகத்துக்கே கொண்டு வந்து நாகர்குல தலைவர் அதை பூஜை செய்ய வேண்டும். அதை கொண்டு வர பூலோகத்துக்கு நாகர் குலத்தை சேர்ந்த ஒருவர் செல்ல வேண்டும்.

தாழம்பூ சீரியல்
விஜய் டிவியின் தாழம்பூ சீரியலில் நாகலோகத்தில் இருக்கும் நாகர்குல மனிதர்கள் பாதி மனித உருவமாகவும், பாதி பாம்பு உடலாகவும் இருக்கின்றனர்.அங்கும் கதாநாயகன் கதாநாயகி என்று இருவர் உண்டு. இதில் வயதானவர் அந்த நாயகன் பூலோகம் செல்லும் காலம் நெருங்கி வருவதாக சொல்கிறார்.

ரேவதி பூலோகத்தில்
ரேவதி வீட்டில் இந்த நாகலிங்கம் இருக்கிறது.இதை பூஜை செய்ய ரேவதிக்கு மட்டுமே அனுமதி உள்ளது. ரேவதி வீட்டில் தாத்தா முதற்கொண்டு பலரும் இருந்தாலும் அவர்களுக்கு நாகலிங்கத்தை பூஜை செய்ய அனுமதி இல்லை.அதனால், ரேவதியை கல்யாணம் செய்துகொடுத்து வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள்.

ராஜகுமாரன் வருவான்
ரேவதிக்கு வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளைகளைப் பிடிக்கலை.தனக்கென்று ஒரு ராஜகுமாரன் வருவான் என்று தோழியிடம் கூறுகிறாள். அப்படித்தான் நாக லோகத்தில் இருந்து அழகிய ஒருவன் வந்து இவளை பின் தொடருகிறான். இவனுக்கு நாகலோகத்திலும் ஒரு காதலி இருக்கிறாள்.

கதையின் போக்கு
கதையின் போக்கு இப்படி நம்ப முடியாத அளவுக்கு இருப்பதால், சீரியலின் ஆரம்பத்தில் ஒரு ஸ்லைட் இதில் வரும் கதாபாத்திரங்கள் வெறும் கற்பனையே ..கதையும் கற்பனையில் பின்னப்பட்டதே என்று.அதே போல முதல் விளம்பர இடைவெளியின் போதும் பண்டைய காலத்தில் இருந்தே இது போன்ற கற்பனைக்கு கதைகள் விரும்பி பெரியவர்காளால் சொல்லப்பட்டு வருகின்றது. அந்த கற்பனையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முழுக்க முழுக்க கற்பனையான கதையே இது என்று ஸ்லைட் போட்டு காண்பிக்கிறார்கள்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications