சிறகடிக்க ஆசை சீரியலின் சாதனை.. ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன விஜய் டிவி.. அப்போ இனி கதை மாற்றமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று 500 ஆவது எபிசோடு ஒளிபரப்பாகிறது. இதற்கு விஜய் டிவி தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே நேரத்தில் இதுவரைக்கும் இந்த சீரியலில் ரோகிணி மாட்டாமல் இருந்த நிலையில் இனி அவர் மாட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பியில் முதல் இடத்தை சிறகடிக்க ஆசை சீரியல் தான் பிடித்து வருகிறது. இந்த சீரியல் சன் டிவி சீரியல்களுக்கும் டப் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் வெற்றிகரமாக 500 எபிசோடு முடிவடைந்துவிட்டது. இதற்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களும் தங்களுடைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். அதே நேரத்தில் விஜய் டிவியின் அதிகாரப்பூர்வமான இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இந்த சீரியலுக்கு வாழ்த்துக்களும் போஸ்ட் போட்டு இருக்கிறார்கள். ஆனாலும் இதுவரைக்கும் இந்த சீரியலில் ரோகிணி ஒரு இடத்தில் கூட மாட்டாமல் தப்பித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை ரகசியமாக வைத்துக் கொண்டிருக்கும் ரோகிணி எப்போதும் மாட்டுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதுபோல ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலில் கதாநாயகனான முத்து மற்றும் மீனாவிற்கு தான் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. மனோஜ் என்னதான் வில்லத்தனம் செய்து கொண்டிருந்தாலும் அவர் செய்யும் திருட்டுத்தனம் உடனே வீட்டிற்கு தெரிய வருகிறது. ஆனால் ரோகிணி ஒவ்வொரு இடத்திலும் தப்பிப்பதை ரசிகர்கள் விரும்பவில்லை. இப்போது கூட கதையின்படி மனோஜை ரோகிணியின் பழைய பிஏ தினேஷ் மிரட்டிக்கொண்டிருக்கும் விஷயம் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் ரோகிணி மீது முத்துவிற்கும் சந்தேகம் இருக்கிறது. அதே நேரத்தில் மனோஜை யார் மிரட்டுவது என்ற உண்மையை நான் கண்டுபிடித்து இருக்கிறேன் என்று அடுத்த வாரத்திற்கான ப்ரோமோவில் முத்து சொல்லி இருக்கிறார். இதனால் இனி கதை மாறப்போகிறதா என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ரோகிணியின் வாயால் உண்மையை தெரிய வேண்டும் என்பதற்காக முத்து நான் மனோஜை மிரட்டுறவனை கண்டுபிடித்து விட்டேன் என்று சொல்கிறாரா? அல்லது உண்மையில் கண்டுபிடித்து இருக்கிறாரா? என்பது அடுத்த வாரம் தான் தெரிய வரும்.

அதே நேரத்தில் தினேஷை முத்து கண்டுபிடித்து விட்டால் அவர் ரோகிணி பற்றிய பழைய கதைகளை சொல்லப் போகிறாரா? அல்லது அதற்கு முன்பு முத்து ஃபோனில் இருக்கும் சத்யா வீடியோவை ரோகிணி சோசியல் மீடியாவில் போடப்போகிறாரா? என்று எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. அதனால் அடுத்த வாரத்தில் பரபரப்பாக காட்சிகள் செல்லும்.

இந்த பஞ்சாயத்துக்கு இடையே இன்றைய எபிசோடில் முத்து தன்னுடைய பிளாஷ்பேக் கதையை மீண்டும் பட்டும் படாமல் பேசுகிறார். அதனால் அந்த கதை எப்போதுதான் வெளியே வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்போடு நொந்து கொள்கிறார்கள். எப்படியோ சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டு இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
-
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் அப்டேட்: முத்துவேல் பற்றி தெரிய வந்த பெரிய உண்மை.. அதிர்ச்சியில் கதிர்! உடையும் குடும்பம் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு!












Click it and Unblock the Notifications