போயஸ் கார்டனில் வாழ்ந்த நடிகர்.. இப்போ மாத்திரை வாங்க கூட காசு இல்லாத நிலை! ரஜினி செய்ததை மறக்க முடியாது! உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா உலகம் வெளியில் இருந்து பார்க்கும்போது எல்லாமே பிரம்மாண்டமாகத்தான் தெரியும். சினிமாக்காரர்களின் பெரிய வீடுகள்.. கார்கள், புகழ், ரசிகர்கள் என எல்லாமே வியப்பாக தோன்றும் ஆனால் அந்த வெளிச்சத்துக்கு பின்னால் எத்தனையோ கலைஞர்களின் வாழ்க்கை அமைதியாக சிதைந்து போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வேதனையாக கதையாகத்தான் தற்போது மூத்த நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் சர்மாவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

கடந்த சில நாட்களாக அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் பரவி வந்த நிலையில் அவர் தற்போது பேசிய பேட்டி இணையத்தில் பலரையும் பீல் பண்ண வைத்திருக்கிறது. அதில் அவர் பேசும்போது, ஒரு காலத்தில் நான் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் நல்ல நிலையில் இருந்தேன். அப்போது போயஸ் கார்டனில் ஜெயலலிதா அம்மா வீட்டு பக்கத்து வீடு தான் என்னுடைய வீடு.

Mohan Sharma Rajinikanth

ஆதரவற்றோர் இல்லத்தில்

ஆனால் இன்று மருந்து வாங்குவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. அதனால் தான் வேறு வழி இல்லாமல் கும்மிடிப்பூண்டி அருகே இருக்கும் இலவச முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறேன். இங்கதான் எனக்கு சாப்பாடும், தங்க இடமும் கிடைக்கிறது என்று உருக்கமாக பேசி இருக்கிறார். அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஒரு மனிதன் இன்று வாழ்க்கையுடன் போராடும் வேதனையை வெளிப்படுத்துகிறது.

விருது வாங்கிய படம்

சினிமாவில் இவர் இயக்கி தயாரித்த நம்ம கிராமம் திரைப்படம் பல விருதுகளையும் வாங்கி இருந்தது. அப்படி இருந்தும் தனக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனைகளால் சொத்துக்கள் கரைந்து போய் உடல் நலமும் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று முதியோர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கும் நிலையில் மகனும் வெளிநாட்டில் குடும்பத்துடன் செட்டில் ஆகி இருக்கிறாராம். அதனால் வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று யாராலும் தணிக்க முடியாது என்று அவர் சொல்லியிருக்கிறார்.

ரஜினி செய்த உதவி

தனக்கு ரஜினிகாந்த் செய்த உதவியை மறக்கவே முடியாது என்று சொல்லி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு தான் ரொம்ப கஷ்டத்தில் இருந்தபோது தன்னுடைய நிலையை அறிந்து ரஜினி ஃபோன் பண்ணி பேசினாரு. அப்போ உங்களுடைய அக்கவுண்ட் டீடைல்ஸ் அனுப்புங்க சர்மா என்று சொன்னாரு. நானும் அனுப்பினேன் உடனே எனக்கு ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்தார். ரஜினி பலருக்கு செய்த உதவிகள் வெளியே தெரியாது. அது போல தான் அவர் எனக்கு செஞ்சதும் வெளியே தெரியாது.

நடிகை லட்சுமியின் முன்னாள் கணவர்

ஆனால் அவர் நான் கஷ்டத்தில் இருந்தபோது செய்த உதவியை மறக்கவே முடியாது என்று கண்கலங்கி பேசி இருந்தார். 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்ததோடு அதில் இரண்டு படத்தை அவரே இயக்கியும் இருக்கிறார். ஒரு காலத்தில் பெரிய தயாரிப்பாளராக இருந்த அவர் நடிகை லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சட்டக்காரி படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது காதல் மலர்ந்தது பிறகு திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அந்த திருமணம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை சுமார் 5 வருஷத்துக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு பேரும் பிரிந்து விட்டனர்.

அதற்கு பிறகு இருவரும் தங்களது வாழ்க்கையில் தனித்தனி பாதையில் பயணிதனர். இந்த நிலையில் இப்போது சர்மாவின் உடல்நிலை மற்றும் அவர் ஆதரவற்றோர் இல்லத்தில் யாரும் இல்லாமல் தனியாக தவிப்பதை பார்த்து ரசிகர்களும் பீல் பண்ணி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+