அமீர் தனக்கு விட்டு தரவில்லை.. அன்று நடந்த கதையே வேறு.. தாமரையின் கருத்து
சென்னை: கயிறு டாஸ்க்கில் அமீர் தனக்கு விட்டு தரவில்லை ஆனால், அங்கு நடந்தது வேறு என்று தாமரை கூறியுள்ளார்.
தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு தாமரைச் செல்வியின் பதில் குழப்பத்தை கொடுத்துள்ளது.

லைவ்வில் பேசிய தாமரை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் இன்னும் முடிவடைய ஒரு சில நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தாமரைச்செல்வி தன்னுடைய ரசிகர்களிடம் லைவில் பேசிக்கொண்டிருக்கிறார். தாமரைச்செல்விக்கு ஆரம்பத்தில் இருந்து இப்ப வரைக்கும் அதிகமான ரசிகர்கள் சப்போர்ட் கொடுத்து கொண்டு வருகின்றனர். என்னதான் இவர் கிராமத்துப் பின்னணியில் இருந்து வந்தாலும் பல பிரபலங்கள் ஆக இருக்கும் பலரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இவர் ஒவ்வொரு வாரமும் முன்னேறிக் கொண்டிருந்தார்.

ரசிகர்களை கவர்ந்த தாமரைச்செல்வி
இப்ப வரைக்கும் பல ரசிகர்கள் தாமரைச் செல்வியின் வெளியேற்றம் சரியானது அல்ல என்று சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இவர் தான் ஜெயிக்க வேண்டும் என்று இவருக்கு ஆரம்பத்தில் இருந்து பலர் ஓட்டு அளித்து வந்தனர். எந்த ஒரு பின்னணியிலும் இல்லாமல் இவர் இவ்வளவு நாட்கள் தாக்குப் பிடித்து இருப்பது இது பெரிய அதிசயம் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவருடைய விளையாட்டு பலரையும் கவர்ந்துள்ளது.

நடந்தது இதுதானா?
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தாமரைச்செல்வி அந்த நிகழ்ச்சியில் நடந்த ஒரு சில செயல்களை பற்றி ரசிகர்கள் கேட்டு தெளிவு ஏற்படுத்திக் கொண்டனர். அப்போது ஒரு ரசிகர் அமீர் உங்களுக்கு கயிறு விட்டுக் கொடுத்து தானே நீங்கள் ஜெயித்தீர்கள் என்று கேள்வி கேட்டிருக்கிறார் .அதற்கு அவர் அப்படியெல்லாம் இல்லை நான் எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டேன் என்று கெட்டியாக தான் இருந்தேன். அவசரமாக பாத்ரூம் செல்லும் நிலை வந்தால் கூட நான் அதற்கும் போகமாட்டேன் என்று முடிவாக கூறிக் கொண்டு இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.

இதில் எது உண்மை
தாமரைச் செல்வியின் இந்த ஒரு பதில் பலரையும் குழப்பமடைய செய்திருக்கிறது. ஏற்கனவே எபிசோடில் அமீர் மனதை பேசியே இவர் மாற்றியதால் தான் அமீர் கயிற்றை இவருக்கு விட்டு கொடுத்தார். ஆனால் தாமரைச்செல்வி இப்படி பேசுகிறாரே?? அப்படி என்றால் கண்ணால் பார்த்தது பொய்யா!!??அல்லது இவர் சொல்வது பொய்யா??என்று ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். தான் இதற்கு முன்பு ஒரு வாரம் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் தலைவராக இருந்ததாகவும், அப்போது தனக்கு சரியான இந்த விளையாட்டை பற்றி புரிதல் இல்லாததால் தன்னால் சரியாக செயல்பட முடியவில்லை. அதனால் இந்த வாய்ப்பு வேண்டுமென்று தாமரைச்செல்வி அமீரிடம் பேசிக்கொண்டிருந்தது தெளிவாக காட்டப்பட்டது. ஆனால் தாமரைச்செல்வி, அமீர் தான் விட்டு விட்டு சென்றார். எனக்காக விட்டுக் கொடுக்கவில்லை என்று கூறியிருப்பது பார்த்து இரு தரப்பட்ட கருத்துகளை ரசிகர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications