வைரலாகும் சர்வைவர் மேக்கிங்... அம்மாடி.. எல்லாமே தீயால இருக்கு
சென்னை: சர்வைவர் நிகழ்ச்சியின் மேக்கிங் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.
டாஸ்க் தான் வேற லெவலில் இருக்கிறது என்றால் நிகழ்ச்சிக்கான மேக்கிங் கூட வேற லெவல் தான்.
பறந்து பறந்து வீடியோ எடுக்கும் கலைஞர்களின் திறமை அபாரம் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ரசிகர்கள் மற்றும் சர்வைவர்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோவான சர்வைவர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வழக்கமாக இருக்கும் ரியாலிட்டி ஷோ போன்று அல்லாமல் இது தில்லான ரியாலிட்டி ஷோவாக இருந்து வருகிறது. இந்த ஷோவில் ஜெயிக்கும் போட்டியாளர்களுக்கு ஒரு கோடி பரிசு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பரிசுக்காக ஒருசில போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும், தங்களுடைய திறமையை வெளிக்காட்டி தங்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். போட்டியாளர்கள் நினைத்தது போலவே இதில் கலந்து கொண்ட அனைவரும் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலம் அடைந்து விட்டனர்.

கலக்கலான அர்ஜுன் என்ட்ரி
ரசிகர்களின் பேர் ஆதரவினால் இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் டிஆர்பி யில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. ரியாலிட்டி ஷோ என்றால் இதுதான் என்று சொல்லும் அளவிற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பையும், இடத்தையும் பிடித்து விட்டது. இது எந்த ஷோவை போன்றும் சாயலிலும் இல்லை. இது ஒரு தனித்துவமான நிகழ்ச்சி என்று இதற்கு ரசிகர்கள் சர்டிபிகேட் கொடுத்து கொண்டிருக்கும் போது நிகழ்ச்சியில் நடக்கும் காட்சிகள் எல்லாமே பார்க்கும் போதே கண்களில் தீப்பொறி பறக்கிறது.

மிரட்டும் போட்டியாளர்கள்
முதல் நாள் எபிசோட்டில் அர்ஜுன் ஹெலிகாப்டரில் பறந்து வந்து போட்டியாளர்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது எடுத்த மேக்கிங் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் கடல் நடுவே இருக்கும் குட்டித் தீவில் போட்டியாளர்கள் அனைவரும் அர்ஜுனுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கும்போது, ஸ்டைலாகவும் மாஸாகவும் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய இவரை பல கேமராக்களும், வல்லுனர்களும் சூழ்ந்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் இருக்கிறார்கள்.

வேற லெவல் டாஸ்க்
ஆக்ரோஷமான அலைகளுக்கு நடுவே கப்பலில் சென்று கொண்டிருக்கும் போட்டியாளர்களை பார்த்து இவ்வளவு ரிஸ்க் எடுக்கிறார்கள் என யோசித்துக் கொண்டிருக்கும் போதே, அடுத்ததாக டாஸ்க்கில் இவர்கள் செய்யும் வேற லெவல் விளையாட்டுகளை பார்த்து அடடா என்று பலர் வாய்பிளந்து இருக்கின்றனர். அந்த அளவிருக்கு டாஸ்க்கு எல்லாமே ஒரிஜினலாக போட்டியாளர்கள் விளையாடி இருக்கிறார்கள். அதில் எந்த எடிட்டிங்கும் செய்யாமல் பல கேமராக்கள் சுற்றிசுற்றி இவர்கள் செய்யும் டாஸ்க்களை படம் எடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கம்ப்யூட்டர் முதல் நவீன தொழில்நுட்ப கருவிகள் வரை அத்தனையும் பயன்படுத்தும் வல்லுநர்கள் அதிகமாக வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான் இருக்கின்றனர். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை மலைபோல குவித்து வருகின்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications