சின்னப்பொண்ணு பாட..ராஜூ மியூசிக் போட... ஆட்டம் போட்ட கிராமத்து அணியினர்
சென்னை: அழுகாச்சி சீன்களை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அன்சீன் பார்த்து மனதை தேற்றியிருக்கிறார்கள்.
அன்சீனில் மட்டும் ஜாலியாக ஆட்டம் பாட்டத்தோடு கலக்கி வருகிறார்கள் போட்டியாளர்கள்.
சண்டை சீன்கள் மட்டும் இந்தப் பக்கம் ஆட்டம் பாட்டம் அந்தப் பக்கமா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கலக்கும் அன் சீன் ப்ரமோ
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் எடுக்கும் வீடியோக்களை ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பல எடிட்டிங் வேலைகள் நடந்து சுவாரஸ்யமான செய்திகளை மட்டும் ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு சுவாரசியமான சீன்களையும் அன்சீனில் காட்டி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி விஜய் மியூசிக்கில் இரவு 11 மணிக்கும் அடுத்த நாள் காலை 11 மணிக்கும் ஒளிபரப்பாகி வருகிறது.

எல்லாம் எடிட்டர் வேலை
பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருவது போலவே அன்சீன் பலருடைய ஃபேவரைட்டாக இருந்து வருகிறது. தற்போது இந்த வாரம் முழுக்கவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ரமோக்கள் அனைத்திலும் சண்டை காட்சிகள் தான் அதிகமாக இருந்து வருகிறது. இதை பார்த்து, ஆர்வமாக நிகழ்ச்சியை பார்த்து வரும் ரசிகர்கள் ப்ரமோவில் இருப்பது ஒன்றுமே எபிசோட்டில் இல்லையே என்று புலம்பி வருகின்றனர். ப்ரமோவை வைரலாக்க எடிட்டர்கள் செய்யும் தரமான செய்கையால் தான் பலரும் இந்த நிகழ்ச்சிக்கு அடிமைகளாக மாறியிருக்கிறார்கள்.

வைரலாகும் அன்சீன்
தற்போது எபிசோட் சீன்களில் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கிடைக்காததால் அன்சீனில் ஏதாவது கிடைக்குமா என்று பலர் அந்த எபிசோடுகளையும் பார்த்து வருகின்றனர். தற்போது அன்சீன் ப்ரமோ வைரலாக பரவி வருகிறது. சண்டை போட்டுக் கொண்டு ஒவ்வொரு போட்டியாளர்களும் முகத்தை திருப்பிக் கொண்டு இருக்கும்போது அன்சீனில் கலக்கலாக ஆட்டம் போட்டு ரசிகர்களுக்கு எனர்ஜி கொடுத்திருக்கின்றனர். அதுவும் கிராமத்து அணியினர் போட்ட ஆட்டம் தான் ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறது.

ஆகா. ..வேற லெவல் ஆட்டம்
நேற்றைய ஆட்டத்தில் போட்டியாளர்கள் அனைவரும் இரண்டு அணியாக பிரிந்து பட்டிக்காடா??பட்டணமா ??என்னும் தலைப்பில் இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். அதில் இரண்டு அணியும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டி போட்டு தங்களுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் போது, கிராமத்து அணியில் இசை அமைக்க சின்னப்பொண்ணு பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். அதற்கு அக்ஷரா, தாமரைச்செல்வி, ஐக்கி இவர்கள் போட்ட ஆட்டத்தை பார்த்து ரசிகர்கள் கமெண்ட்டுகளை கொட்டி வருகின்றனர். அதுவும் தாமரை செல்வியின் ஆட்டம் வேற லெவல் என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications