Thenmozhi BA Serial: தேன்மொழி பிஏ சீரியரில் ஜாக்குலின் நடிப்பு அபாரம்!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியல் ஜாக்குலின் நடிப்பு பிரமாதம் என்று சீரியல் விரும்பிகள் ரசிக்கும் அளவுக்கு சீரியல் நன்றாக இருக்கிறது.
ஜாக்குலின் குரலே இங்கு அவருக்கு பிளஸாக இருந்து யதார்த்தமான நடிப்புக்கு பெரும் உதவியாக இருக்கிறது. கதாபாத்திரத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார் ஜாக்குலின்.
தனக்கு யார் புருஷனா வரப்போறவன் என்று கிராமத்தில் மிக ஆர்வக் கோளாறில் இருக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தை ஜாக்குலின் பிரதிபலிக்கிறார்.

பஞ்சாயத்து தேர்தல்
ஊரில் பஞ்சாயத்து தலைவர் எலெக்ஷன் நடக்க இருக்கிறது.இந்த தேர்தலில் ஊரின் பெரும் பணக்காரரின் மகன் அருள்வேல் போட்டியிடப் போவதாக போஸ்டர்கள் ஒட்டி இருக்காங்க. அருள் வேல் ஜெயிக்க வேண்டும் என்றால் மக்கள் விரும்பி வாக்கு போட வேண்டும். மக்களின் விருப்பத்துக்கு மாறாக நடந்தால் வாக்கு கிடைக்காது என்று நினைக்கிறான்.

அடிக்கு பதில் பணம்
கோயிலில் திருவிழா கூட்டம் நடந்து கொண்டு இருக்கும்போது, ஒரு பெண்ணின் கையை பிடிச்சு கலாட்டா செய்தான் என்று ஒருத்தனை அருள் வேலின் ஆள் அடிச்சு போட்டுவிடுகிறான். இப்படி நடந்தால் எப்படி ஓட்டு கிடைக்கும் என்று, அடி வாங்கினவன் போலீசுக்கு போவதற்குள் பணம் கொடுத்துட்டு வந்துடணும்னு அருள் கிளம்பறான்.

பணம் கொடுத்து
தேன்மொழியும் அந்த பையனை பார்த்துட்டு வரப்போகிறாள். அப்போது அருள் வேல் வந்து அடிபட்டவனின் தாயிடம் பணம் கொடுக்க.. பாருடா இவர்தான் ஹீரோ.அடியும் கொடுக்கிறார் பணமும் கொடுக்கிறார் பாருன்னு வியந்து போயி பார்க்கிறாள் தேன்மொழி. பணம் குடுக்கறதுக்கு முன்னால அடி கொடுத்ததை மறந்துட்டியான்னு நண்பன் கேட்க, அடி கொடுத்துட்டு பணம் குடுக்கறாரே.. நீ குடுப்பியா? உன்னால முடியுமா? அதுதாண்டா ஹீரோன்னு சொல்றா.

அத்தை வராங்க
தேன்மொழி அத்தை போன் பண்ணினாங்கன்னு அப்பா சொல்ல, யாரு அந்த கோணக்கால் கோகிலாவா? அப்பா அத்தை ராசி சரியில்லைப்பான்னு சொல்றா. விளையாடாதேம்மா அத்தை உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்கன்னு அப்பா சொல்றார். மாப்பிள்ளை பய சிக்கிட்டான்னு தேன்மொழி சொல்லிகிட்டே குஷியாகி குதிக்கிறாள்.நாளைக்கு அவளை பெண் பார்க்க வர்ராங்களாம்!
இப்படி காமெடி கலந்த வெகுளித் தனமாக இருக்கும் பெண்ணாக ஜாக்குலின் நன்றாக நடிச்சு இருக்கார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications