Thenmozhi BA Serial: நெற்றியில் பட்டை... கையில கவசம்... ஆளே மாறிட்டியே தேனு!
சென்னை: விஜய் டிவியின் தேன்மொழி பிஏ சீரியலில் விளையாட்டுத் தனமா இருந்த தேன்மொழி...இப்போ புகை மண்டலம் சூழ நெற்றியில் விபூதி பட்டை.. கையில் கந்தர் சஷ்டி கவசம் என்று ஆளே மாறி என்ன ஒரு பக்தி மயம்.
ஹீரோ சார் ஹீரோ சார் என்று புருஷன் அருள் மயக்கத்தில் திரிந்தது என்ன... சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அருளை பார்த்து மெய் மறந்து நின்றது என்ன என்று தேன்மொழி படு குஷியான வாழ்க்கையில் இருந்தாள்.
திடீர்னு பார்த்தால் அருள் கூட ஒரே ரூமில்தான் இருக்கிறாள். ஐயையோ.. நீங்க நினைக்கற மாதிரி இல்லை ரொம்ப கட்டுப்பாடு.. ஆசையே துன்பத்துக்கு காரணம்னு சொல்றான்னா பாருங்களேன்..

புறத்தாண்ட வீடு
தேன்மொழி ஊராட்சி மன்றத் தலைவரா இருந்தும், காந்தி நகர்க்காரி என்று புகுந்த வீட்டில் அவளை புறத்தாண்ட வீடு என்று சொல்லப்படும் கொல்லைப் புற வீட்டில்தான் தங்க வைக்கப்பட்டு இருக்கிறாள். இதை கண்டு ஊர்க்காரர்கள் கொந்தளிச்சு போறாங்க. அதோடு, தேனு வீட்டு வேலை செய்வதை பார்த்தும் நொந்து போகிறார்கள்.
Recommended Video

கூட்டமாக வந்து
அப்பத்தா ஏற்பாட்டின் படி மக்கள் திரண்டு வந்து. என்னது எங்கள் ஊராட்சி மன்றத் தலைவரை வீட்டு வேலை எல்லாம் செய்ய சொல்றீங்க..வீட்டில் சேர்த்துக்காமா தனியா தங்க வச்சு இருக்கீங்க.இதெல்லாம் என்ன நியாயம்.. எங்க தலைவருக்கு அநியாயம் நடக்குதுன்னு கேட்க வைக்கறாங்க.

உங்க வீட்டில் எப்படி
வீட்டு வேலைதானே செய்யறேன்.. ஊராட்சி மன்றத் தலைவரா இருந்தால் வீட்டு வேலை செய்யக் கூடாதா? உங்க வீட்டில் எல்லாம் பெண்கள் வேலை செய்யறது இல்லையான்னு மதர் இன் லாவுக்கு ஆதரவா தேன்மொழி பேசுகிறாள். ஊர் மக்கள் வாயடைச்சு நிக்கறாங்க. இதுதான் சாக்கு என்று அப்பத்தா அருளு.. தேனை உன் ரூமுக்குள்ளே அழைச்சுட்டு போடான்னு உத்தரவு போடறாங்க.

வீட்டுக்குள் தேனு
தேனு ஒரு வழியாக வீட்டுக்குள் சென்றுவிட்டாள். ஒரே ரூமில்..ஒரே படுக்கை இருக்க. வழக்கமா எல்லாரும் செய்யற மாதிரி தேனு பாயை விரித்து கீழே போட்டு படுத்துக் கொள்கிறாள். அது மட்டுமா.. நெற்றியில் விபூதி பட்டை போட்டுக்கொண்டு, கையில் கந்தர் சஷ்டி கவசத்தை வைத்து படித்துக்கொண்டு இருக்கிறாள்.

அருள் ஷாக்
இதை பார்த்த அருள் ஷாக்காகி பெட்டில் உட்காருகிறான். கடவுளே அழகு, இளமை.. ஆசை ..விருப்பம் இதெல்லாம் வெறும் மாயை.. ஆசையே துன்பத்துக்கு காரணம். கட்டுப்பாடுதான் உன்னை உயர்த்தும் அருளு என்று அருள் வாக்கு சொல்ல ஷாக் மேல ஷாக்காகிறான் அருள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications