மாற்றம் என்று சொல்வதில் பிரயோஜனம் இல்லை.. அரசியலுக்கு போக மாட்டேன்! ஆனால், சூர்யா பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யா எப்போது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி அவருடைய ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் வட்டாரத்திலும் அடிக்கடி எழுந்து வருகிறது. அதற்கு காரணம் அவர் நடிப்பை தாண்டி கல்விக்காக செய்து வரும் வேலைகள் தான். அகரம் அறக்கட்டளை மூலம் ஏராளமான மாணவர்களின் உயர்கல்விக்கு உதவி செய்து வரும் சூர்யா இளைஞர்கள் மத்தியிலும் தனக்கென ஒரு நல்ல அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த நிலையில் தனது அரசியல் வருகை பற்றி அவர் பேசியது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் சூர்யா பேட்டி

ஏற்கனவே நடிகர் விஜய் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து இப்போ முதல்வரானதும் பலர் அடுத்ததாக அரசியலுக்கு வருவதற்காக அடிபோட்டு கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் தனுஷ், ராகவா லாரன்ஸ், சிவகார்த்திகேயன் என பலர் தங்களது ரசிகர் மன்றங்களை ரசிகர்கள் நற்பணி மன்றமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது ஏற்கனவே பல வருஷங்களாக கல்வி சேவை செய்து வரும் சூர்யாவும் அடுத்து அரசியலுக்கு வரப்போகிறாரா? என்ற பேச்சு ஓடிக்கொண்டு இருக்கிறது.

Suriya Vijay Agaram Foundation Tamil Cinema

அரசியல் வருகை

இந்த நிலையில் தான் சூர்யா சமீபத்தில் கொடுத்த பேட்டியில், வழி தெரியாமல் கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் போய் விடமாட்டேன். என் மனசுக்கு பிடித்த விஷயங்களை செய்வேன். அதற்காக நான் அரசியலுக்கு போக மாட்டேன் என்று சொல்வதால் அரசியலை வெறுப்பதாக அர்த்தம் இல்லை. இனிமே மௌனமாக உன்னிப்பாக அரசியலை கவனித்துக் கொண்டிருக்கிறேன். அரசியலில் ஈடுபட விரும்பும் இளைஞர்கள் அதன் முழுமையான தன்மையும் அதில் இருக்கும் கஷ்டங்களையும் புரிந்துகொண்டு வளர வேண்டும். வெறுமனே ஆர்வம் இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்து விடக்கூடாது, முழுமையாக அர்ப்பணிப்பு உணர்வு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Suriya Vijay Agaram Foundation Tamil Cinema

மாற்றம் பிரயோஜனம் இல்லை

மேலும், கல்விதான் எல்லாவற்றுக்கும் மாற்றம். வெறுமனே மாற்றம் மாற்றம் என்று சொல்வதில் பிரயோஜனம் இல்லை. மாற்றத்தை விரும்புபவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் பேசி இருக்கிறார். இதுதான் இப்போ விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே மக்கள் நடிகர் விஜய்யை முதல்வர் விஜய் ஆக மாற்றியதற்கு முக்கிய காரணம் இதே மாற்றம் என்ற விஷயம் தான். இத்தனை வருடங்களாக ஆட்சி செய்து வந்த கட்சிகளுக்கு மாற்றாகவும் தமிழகத்தில் ஒரு புரட்சி நடக்கும் என்று நம்பி மக்கள் விஜய்யை முதல்வராக்கி இருக்கிறார்கள். அதை வைத்து இதுபோல மறைமுகமாக விமர்சிக்கிறாரா என்ற கேள்வி இப்போ வந்துவிட்டது. ஒரு சிலர் சூர்யாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார்கள், இன்னும் சிலர் முதல்வர் விஜய்க்கு சப்போட்டாக பேசுகிறார்கள். இதனால் இப்போ மாற்றம் என்ற வார்த்தையை வைத்து சோசியல் மீடியாவில் பஞ்சாயத்து போய்க்கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+