அழுத்தமா ராத்திரிக்கு தரேன்...அப்டியா .. சரி ராத்திரி எப்போ வரும்.. அது வரப்போ வரும்...!
Recommended Video

சென்னை:சன் டிவியில் சந்திரலேகா சீரியல் மதிய நேர சீரியலில் முக்கியமான ஒரு சீரியல். பெண்கள் மிகவும் விரும்பி பார்க்கும் சீரியல் இது.
சந்திரா, லேகா, நிலா இன்னும் சிலரை சுத்தி கதை பின்னப்பட்டு இந்த சீரியல் ஜோரா போயிகிட்டு இருக்கு. பார்க்கப்போனா சந்திரா, லேகா இருவரின் கதைதான் மிக முக்கியம்.
சந்திராவா நடிக்கறவங்க டபுள் வேஷம்ன்றதால இப்போ புதுசா நிலா கேரக்டர் என்ட்ரி. இவளுக்கும், திருவுக்கும்தான் இப்போ புதுசா கல்யாணம் ஆகி இருக்கு. திரு பெரிய பணக்காரன். அவனை அவனின் அம்மா சம்மதத்தோடு அஞ்சலி காதலிச்சா.. கல்யாணம் ஆகியும் இப்போதும் திருவுக்கு அலையறா.

சாப்பிட்டதையும்
ஒரு வாய் தோசைக்கு ஒரு முத்தம்னு நிலா புருஷனுக்கு ஊட்டிவிட, அங்கு திருவை காதலிக்கும் அஞ்சலி வர்றா.. திரு என்ன சின்ன குழந்தையா, சாப்பாடு ஊட்டி விடறேன்னு கேட்கறா... என் புருஷன் சாப்பிட ஊட்டியும் விடுவேன். நான் சாப்பிட்டதையும் குடுப்பேன்.. உனக்கு என்னடின்னு கேட்கறா நிலா.

கல்யாணம் ஆனவங்க
புதுசா கல்யாணம் ஆனவங்க ரூமுக்குள்ள வர கூடாதுன்னு தெரியாது உனக்குன்னு அஞ்சலியைத் திட்டறா. நீங்க பகலில் கொஞ்சம் அடக்கி வாசிங்கன்னு சொல்ல. நாங்க ஏன் அடக்கி வாசிக்கணும்... எங்க ரூமுக்கு நீ வந்தது தப்புன்னு மறுபடியும் மிரட்டறா. நான் ஒண்ணும் சும்மா வரலை.. ஆஃபீஸ் விஷயம்னு அஞ்சலி சொல்வதற்குள், அதெல்லாம் அங்கேயே பேசி முடிச்சுருங்க.. இங்கே எல்லாம் ஒண்ணும் பேசக் கூடாதுன்னு சொல்றா.

என்ன சொன்னே?
நிலா ஊட்டியும் விடுவேன்னு சொல்லிட்டு வேற என்னவோ சொன்னியே அது என்னன்னு கேட்கறான் திரு. நான் சாப்பிட்டதையும் தருவேன்னு சொன்னேன்னு சொல்றா. எப்போன்னு அவன் கேட்க, நைட்டு டின்னருக்கு தரேங்க.. இப்போ அஞ்சலியை அழுத்தமா ஏதாவது சொல்லி வெளிய அனுப்புங்க.. அழுத்தமா ஒண்ணு தரேன்னு சொல்றா நிலா.

நீ வெளியே போ
திருவும், அஞ்சலி நீ வெளியில போன்னு சொல்றான். அஞ்சலி அவமானம் தாங்காமல் வெளியில போறா. இப்போ குடுன்னு சொல்றான். இருங்க கதவை சாத்திட்டு வரேன்னு சொல்லிட்டு அஞ்சலியை இனிமே இப்படி என் புருஷன் கிட்ட வந்து ரூம்ல பேசிகிட்டு நிக்காதேன்னு சொல்லிட்டு வர்றா.

தரேன் ராத்திரி
அழுத்தமா தரேன்னு சொன்னியே நிலான்னு கேட்கறான் திரு. ராத்திரிக்கு தரேங்கன்னு சொல்றா. அப்டீன்னா ராத்திரி எப்போ வரும்னு இவன் கேட்க..ம்..ம்.. அது வரப்போ வரும்னு சொல்றா.கீழே வந்து பார்த்தா அஞ்சலி திருவோட காரில் கிளம்ப தயாரா இருக்கா.

அஞ்சலிக்கு திரு அம்மா
திருவின் அம்மாவும் அஞ்சலியை காரில் ஆஃபீஸுக்கு அழைச்சுக்கிட்டு போன்னு சப்போர்ட் பண்ண , என்ன அத்தே நீங்க முன்னாடி கல்யாணம் ஆகலை, அவர் பக்கத்துல அஞ்சலி உட்கார்ந்து போனா.. இப்போ போனா யாராவது தப்பா பேச மாட்டாங்க..அவ நல்லதுக்குத்தான் அத்தே சொன்னேன்னு சொல்றா.

ஒரு முத்தம்
திரு அவ கடக்கா நீ அஞ்சலியை அழைச்சுட்டு போன்னு சொல்ல, அம்மா பேச்சை எப்படி மீறுவதுன்னு நிலாவை பார்க்கறான். நிலா கண்ணடிச்சு, வாயை குவித்து முத்தம் கொடுப்பது போல பாவனை செய்ய, இல்லம்மா.. அஞ்சலி தனியா வரட்டும்னு சொல்லிட்டு நிலா வா கார் வரைக்கும்னு அழைச்சுக்கிட்டு போறான்.
திரு நிலாவின் கண்ணடியில் கவுந்துட்டான். முத்தத்துல மயங்கிட்டான்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications