உடைஞ்சுட்டாரே அபிநய்.. பொண்ணு, தண்ணி, சூது.. ஈரமில்லாத சினிமா.. நடிகர் தனுஷ் ரூ.120 கோடி வாங்கியும்?
சென்னை: எப்போதுமே சினிமாவில் பொண்ணு, தண்ணி, சூது இது அனைத்தும் எளிதாக கிடைத்துவிடும். ஆனால், சினிமாவுக்கு வரும் இன்றைய இளைஞர்கள், புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்பது, அபிநய் மூலம் கிடைத்துள்ள பாடமாகும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு.. அத்துடன், துள்ளுவதோ இளமை படத்தில் நடித்த அபிநய்யின் சறுக்கல்களை பற்றி பல்வேறு தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார் செய்யாறு பாலு.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலில் பேசியிருக்கும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "சரிவுகள், இறுதியில் கோரமான நிலைமையில் உள்ளார். ஒரு மனிதன் நன்றாக இருந்தால்தான், 10 பேர் மதிப்பார்கள்.. சீட்டுக்கட்டு மாதிரி சரிந்துவிட்டால், ஒருத்தரும் திரும்பி பார்க்க மாட்டார்கள்..

கலர்புல் ஹீரோ
துள்ளுவதோ இளமை படம் வரும்போது, அபிநய்யை பார்த்துவிட்டு, இந்த தம்பிதானே ஹீரோவாக நடிக்க வேண்டியவர்? தனுஷை எதுக்கு ஹீரோவாக்கினார்கள்? என்று அன்றைய காலங்களில் விமர்சனங்கள் பல எழுந்தன.. இதற்காக தனுஷ், தனியாக சென்று அழுததாகவும் செய்திகள் உண்டு..
இன்று தன்னுடைய திறமையால் தனுஷ் உயரத்திற்கு வந்தாலும், தன்னுடைய முதல் படத்திலேயே கவனம் திருப்பியவர் அபிநய். சினிமாவில் எங்கே தவறு செய்கிறோம் என்றே பலருக்கும் தெரியாது.. .
ஆனால் மளமளவென அட்வான்ஸை வாங்கி கொண்ட அபிநய், ஜங்ஷன் என்ற படத்தில் நடித்தார்.. அந்த படம் தியேட்டரில் ஒரு ஷோ மட்டுமே ஓடியது.. அத்துடன் அட்வான்ஸ் தந்தவர்கள், யாரும் திரும்பி வரவேயில்லை.. ஒரு தோல்விதான் அபிநய்யை கீழே இறக்கிவிட்டது..
சினிமா அனுபவம் இல்லாமல், கதை தேர்வு தெரியாமல், ஏதேதோ படங்களில் நடித்தார்.. அமெரிக்க மாப்பிள்ளை போல வாய்ப்புகள் வந்தன.. இதனால் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானபோது, அபிநய்யின் அம்மாதான் உறுதுணையாக இருந்துள்ளார்.. பிறகு திடீரென முருகதாஸிடம் அபிநய்க்கு போன் வந்தது..
டப்பிங் பேசிய அபிநய்
தனக்கு மீண்டும் மிகப்பெரிய வாய்ப்பு கிடைக்கப்போகிறது என்று ஆர்வத்தில் அவரிடம் சென்றுள்ளார்.. அப்போது முருகதாஸ், தன்னுடைய துப்பாக்கி படத்தில் வில்லனுக்கு டப்பிங் பேச சொல்லி உள்ளார்கள்..
இதைக்கேட்டு லேசாக ஏமாற்றமடைந்தாலும், டப்பிங் பேச அபிநய் ஒப்புக் கொண்டார்.. ஆனால் அதற்கு பிறகு பெரிதாக வாய்ப்பு வரவில்லை.. பிறகு துபாய்க்கு சென்று வேலை செய்தார்..
ஆனால் சினிமா பாதிப்பிலிருந்து அபிநய் மீளாததை கண்ட அந்நிறுவனத்தின் ஓனர், அபிநய்க்கு விளம்பர வாய்ப்பையும் பெற்று தந்தார்.. 3 ரோசஸ் டீ தூள், ஓரியோ பிஸ்கட் என்ற விளம்பரங்களில் நடித்தார்..
தனுஷ் ரூ.120 கோடி சம்பளம்
இன்று அபிநய் உயிருக்கு போராடுகிறார்.. ஆனால் அவருக்கு யாரும் உதவவில்லை.. தனுஷ் 120 கோடி சம்பளம் வாங்கினாலும், அவர் உதவி செய்ய வேண்டிய கட்டாயம் இல்லைதான்.. ஆனால், முதல் படத்தில், முதல் அலுவலகத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர் என்றாவது தனுஷ் நினைக்கலாமே? என்று சோஷியல் மீடியாவில் பலரும் கேட்கிறார்கள்.
இப்போது அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக 28 லட்சம் ரூபாய் தேவையாக இருக்கிறது.. சில லட்சங்கள் நண்பர்கள் மூலம் உதவி கிடைத்துள்ளது. இந்த நேரத்தில்தான் கேபிஒய் பாலாவும், தன்னுடைய சார்பாக 1 லட்சம் ரூபாய் தந்துள்ளார்.. .. ஒருவருக்கு உதவி செய்யணும்னு நினைப்பதே, எப்பேர்ப்பட்ட மனசு பாருங்கள்..
பிச்சை எடுக்க விரும்பல
எனினும் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் இதுவரை உதவவில்லை.. "யாருகிட்டயும் நான் பிச்சை எடுக்க விரும்பல.. உயிர் போனால் போகட்டும்" என்ற விரக்தி மனநிலைமைக்கு அபிநய் தற்போது வந்துவிட்டார்.
எப்போதுமே சினிமாவில் பொண்ணு, தண்ணி, சூது இது அனைத்தும் எளிதாக கிடைத்துவிடும். ஆனால், சினிமாவுக்கு வரும் இன்றைய இளைஞர்கள், புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்பது, அபிநய் மூலம் கிடைத்துள்ள பாடமாகும்" என்று தெரிவித்துள்ளார் செய்யாறு பாலு..












Click it and Unblock the Notifications