"கொழுகொம்பை" விட்டுடுவாங்களா ரிதன்யா மாமியார்? சமூகத்தின் மோசமான நிலை அடியோடு மாறணும்: பிரபலம் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரிதன்யா விவகாரத்தில் அவரது மாமியார் சித்ராதேவிக்கு ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.. மேலும், கவின்குமார் செல்போனில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்திருக்கிறதாம்.. குறிப்பாக, ஆபாச படங்கள் இருந்ததாகவும் , பாலியல் ரீதியாக தொல்லை தந்ததும் தெரியவந்துள்ளதால், அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் சுமதி, ரிதன்யா ஆடியோ, விவகாரம் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து பேட்டி ஒன்றில் விரிவாகவே பேசியிருக்கிறார்.

Vikatan TV யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த வழக்கறிஞர் சுமதி, "ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்த பெருமையாக ரிதன்யாவின் அப்பா, சொல்லியிருந்தார்.. அவர் அதை தவறி சொன்னாலும்கூட,, அது தவறுதான்.. ஒருவரும் இனி இதுபோல் சிந்திக்கவும் கூடாது.

Television rithanya tiruppur

ரிதன்யா சொன்ன ஒருத்தனுக்கு ஒருத்தி என்பது நியாயமே.. சில அடிப்படை விஷயங்களில் ஆராய கூடாது.. ஆனால், ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதை எப்படி புரிந்து கொள்வது?

புராணங்கள் - காவியங்கள்

இலக்கியங்களையும், புராணங்களையுமே ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்றவாறுதான் புரிந்து கொள்கிறோம்.. ஒவ்வொரு அறநெறியையும், அந்தந்த கால கட்டத்துக்கு வைத்து பார்க்கும்போது, அது வேறு மாதிரியாகத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அப்படியிருக்கும்போது ஒருவனுக்கு ஒருத்தி என்பதை எப்படி நாம் புரிந்துகொள்வது?அன்றைய காலகட்டத்தில் வேலை செய்வதும், மனைவியை காப்பாற்றுவதும் ஆணாக மட்டுமே இருந்தது.. அப்போது கணவனுக்கு ஒரு பிரச்சனை என்றால், மனைவி உறுதுணையாக இருந்தாள்..

இப்படி பரஸ்பரம் ஒருவரையொருவர் தாங்கி கொண்டு, புரிதலுடன் இருவருமே நடந்து கொண்டனர். ஒருவருக்கு பிரச்சனை வந்தாலும், இன்னொருவர் அவரை விட்டு ஓடிவிட மாட்டார். இதுவரைக்கும் சரியாக இருந்தது.

சார்ந்து வாழும் பெண்கள்

ஆனால், மொத்த பிரச்சனையும் வருவது கணவனால் என்றால்? அந்த பெண் ஏன் அக்கணவனுடன் இருக்க வேண்டும். பிரச்சனை வெளியிலிருந்து வந்தால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நிலைக்கிறது.. தம்பதிக்குள்ளேயே பிரச்சனை வெடிக்கும்போதுதான், ஒருவனுக்கு ஒருத்தி என்பது முற்றுப்பெறுகிறது

ஒருவனும், ஒருத்தியும் அதற்கு பிறகு பிரிந்துவிடுகிறார்கள்.. அதற்கு பிறகு, அந்த ஒருவனுக்கோ, அந்த ஒருத்திக்கோ, வேறொருனோ, வேறொருத்தியோ தேவையா என்பது அவரவர் சொந்த விருப்பம்.. ஏனெனில் இது வயதை பொறுத்தோ, அல்லது குடும்ப சூழலை பொறுத்தோ, அல்லது குழந்தைகளின் வயதை பொறுத்தோ அமையலாம்.

ரிதன்யா பிரச்சனைகளை முதலில் சொன்னது, தன்னுடைய மாமியாரிடம்தான்.. இந்த விஷயத்தை ரிதன்யாவை வைத்தே பார்க்காமல், மாமியார் இடத்திலிருந்து இதை அணுக வேண்டியிருக்கிறது.

பொருளாதாரம் சம்பந்தப்பட்டதா

தனக்கு திருமணமாகும்வரை அப்பாவை சார்ந்தும், பிறகு கணவரை சார்ந்தும், பிறகு மகனை சார்ந்தும் பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள்.. மகன், கணவரை மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தும் ஒரு பெண்ணிடம், அதே மகன், கணவரை பற்றி பிறர் குறைகூறுவதை ஏற்க முடியாது..

ஆக, பொருளாதாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், சார்ந்து வாழ வேண்டும் என்ற கோட்பாட்டை திரும்ப திரும்ப பெண்களின் தலையில், நூற்றாண்டு காலமாக சுமத்தி வைத்துவிட்டார்கள். இங்கு சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் கோட்பாடே தவிர, யாரையும் சார்ந்து வாழ வேண்டும் என்ற கோட்பாடு இல்லை... இதை உணராமல், சமுதாயத்தில் இப்படியான சிக்கல்கள் வரத்தான் செய்யும்.

ரிதன்யாவின் மாமியாரை நியாயப்படுத்தவில்லை.. ஆனால், அந்த மாமியார் ஏன் இப்படி இருக்கிறார் என்பதை யோசித்தால், சார்ந்து வாழ்ந்து கொண்டிப்பதுதான் பெண்களின் சிக்கலாக உள்ளது.. "கொழுக்கொம்பை" விட்டுவிட்டால், நான் எங்கே செல்வது? என்பதுதான் அனைத்து பெண்களின் பயமாக உள்ளது.. இந்நிலைமை மாற வேண்டும்" என்று மிக ஆழமாகவும், விரிவாகவும் பேசியிருக்கிறார் சுமதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+