திருப்பூர் ரிதன்யாவின் வெளிவராத ஆடியோ.. தொக்கா மாட்டிப்பாங்க போல.. புட்டு புட்டு வைத்த வக்கீல் மோகன்
சென்னை: வரதட்சணை கொடுமையால் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டாலும், அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும், எனவேதான், வரதட்சணை கொடுமையின்கீழ், கவின் குடும்பத்தினர் மீது வழக்குகள் பதிவாகவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.. இந்நிலையில், ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.. இதுகுறித்து, வழக்கறிஞர் மோகன் செய்தியாளர்களிடம் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
ரிதன்யாவின் வழக்கு விசாரணை எப்படி நகர போகிறது? என்பது குறித்து சமீபத்தில் வழக்கறிஞர் ஷைனி ஜே ஜே சேவியர், AV Nellai Media என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை தந்திருந்தார்..

வரதட்சணை கேஸ்
அதில் "ரிதன்யா விவகாரத்தில், வரதட்சணை கொடுமையின்கீழ் வழக்கு என்று இதுவரை பதிவாகவில்லை.. வேறு வேறு 3 வழக்குகளின்கீழ்தான் பதிவாகியிருப்பதால், விசாரணையும் அது தொடர்பாகவே இருக்கும்..
ரிதன்யா இறப்பதற்கு முன்பு ஆடியோ மெசேஜ் மூலம் பல்வேறு விஷயங்களை சொல்லியிருந்தார்.. இந்த ஆடியோ மெசேஜ் பிரதான ஆதாரமாக இருந்தாலும், அதை மட்டுமே வழக்கின் முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.. ஆடியோ மெசேஜ் குறித்த உண்மைத்தன்மை என்ன என்பதற்கான தடவியல் நிபுணர்களின் அறிக்கையும் இன்னும் வரவில்லை..
கவின் பெற்றோர் - ஆதாரங்கள்
அதேபோல, கவின் தரப்பில் வரதட்சணையை மறைமுகமாக கேட்டார்கள் என்றால், அதை எப்படி கேட்டார்கள்? அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் அந்த ஆதாரத்தையும் ரிதன்யாவின் தரப்பில் சமர்ப்பிக்க வேண்டிவரும். இதுபோக சாட்சிகளிடமும் முறையான விசாரணையும் நடைபெறும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் ரிதன்யாவின் வழக்கு தொடர்பான புலன் விசாரணையை மாவட்ட கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நடத்த வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டது.. இரைதயடுதது, ரிதன்யாவின் ப்பா அண்ணாதுரை மற்றும் வழக்கறிஞர் ப.ப.மோகன் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரிஷ் யாதவை சந்தித்தனர்.
வழக்கறிஞர் பேட்டி
பிறகு இதுகுறித்து வழக்கறிஞர் மோகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ரிதன்யாவின் வழக்கில் சரியான உண்மைகள் இன்னும் புலப்படவில்லை.. அவிநாசி போலீசாரின் புலன் விசாரணையில் முழுமையான உண்மைகளும் வெளிவரவில்லை.
ரிதன்யா தற்கொலை செய்து கொண்டபிறகு, அவர் பேசிய 9 மட்டுமே ஆடியோக்கள் வெளியே வந்தன.. ஆனால் வரதட்சணை கேட்டது தொடர்பான ஆடியோவும் இருந்திருக்கிறது.. அன்றைக்கிருந்த சூழலில், இந்த ஆடியோவை சரியாக கவனிக்கவில்லை.. இதற்கு பிறகுதான், ரிதன்யாவின் அப்பா இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.. வரதட்சணை கேட்டது தொடர்பான அந்த ஆடியோ கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. என்ன கொண்டு வந்தாய்? என்று கவின் பெற்றோர் கேட்டது அந்த ஆடியோவில் உள்ளது..
சிம்கார்டு, செல்போன்
இந்நிலையில், கவினுக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது.. பிறகு கவின் தன்னுடைய செல்போன் சிம் கார்டு உள்ளிட்ட ஆதாரங்களை அழித்திருக்கிறார்.. youtube சேனல் ஒன்றுக்கு பேட்டியும் தந்துள்ளார். அதிலும் ஜாமீனில் வெளிவந்துள்ள நபர், முக்கிய சிம்கார்டு குறித்து பேட்டியில் சொல்லியிருக்கிறார் என்றால், எவ்வளவு எளிதாக இந்த வழக்கிலிருந்து வெளியே வந்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
சென்னை ஹைகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக விடுபட்ட தகவல்கள் குறித்து கடந்த 8ம் தேதி தெரிவித்தோம்.. குறிப்பாக ரிதன்யா தற்கொலை செய்தியை கேள்விப்பட்டு, மருத்துவமனைக்காக ஆம்புலன்ஸை ரிதன்யாவின் பெற்றோர் கொண்டுசென்றபோதே, சம்பவ இடத்துக்கு போலீசார் வந்துவிட்டார்கள்..
ரிதன்யாவின் செல்போனையும், ரிதன்யா அப்பாவின் செல்போனையும் போலீசார் கைப்பற்றி சென்றுள்ளார்கள்.. 5 மணி நேரம் கழித்துதான் அந்த போனை திருப்பி தந்தார்கள்.. அந்த 5 மணி நேரம் என்ன நடந்தது என்று தெரியவில்லை.. இதற்கு பிறகே சோஷியல் மீடியாவில் ரிதன்யாவின் ஆடியோக்கள் வெளி வந்திருக்கின்றன.. இதெல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிதன்யா அறைக்குள் புலன் விசாரணை
இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வளவு நாட்கள் ஆகியும் ரிதன்யாவின் அறைக்குள் சென்று நகைகள், பொருட்களை போலீசார் புலன் விசாரணை மேற்கொள்ளவில்லை. இந்த வழக்கை வரதட்சணை கொடுமை வழக்காக பதிவு செய்யவில்லை.. தற்கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
திருமணமாகி 78 நாட்களுக்குள் ரிதன்யா இறக்க காரணம், கணவரும், அவருடைய பெற்றோரும் சேர்ந்து நடத்திய கொடுமைகள், சித்ரவதைகள்தான்..
நீதிபதி உத்தரவு
இவை அனைத்தையுமே நீதிபதியிடம் எடுத்து சொன்னோம்.. இதையடுத்து, நாங்கள் சொன்ன தகவல்களை அனைத்தும் உரிய முறையில் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அந் விசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நடக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.. இதுதொடர்பாகவே இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பேசி விட்டு வந்தோம்..
ரிதன்யாவின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.. ஆனால், அந்த ரிப்போர்ட்டிலும் நிறைய சந்தேகங்கள் உள்ளன.. பொதுவாக, விஷம் குடித்து இறந்தால், அவர்களின் உள் உறுப்புகள்தான் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும்..
உள் உறுப்புகள் பாதிப்பு
அந்தவகையில், ரிதன்யாவின் உள் உறுப்புகளை முறையாக பரிசோதனை செய்து, அது தொடர்பான ரிப்போர்ட் வந்தபிறகுதான், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டையே முடித்து அறிக்கையாக தர வேண்டும்.
ஆனால் உள்ளுறுப்புகள் பரிசோதனை செய்து அறிக்கை வருவதற்கு முன்பேயே, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை தந்துள்ளனர்.. அதில் ரிதன்யா இறந்த நேரத்தை தவிர வேறு எந்தவித தகவல்களும் இல்லை. எனவே, இதை பற்றியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நாங்கள் சொன்னதற்கு, முறையாக புலன் விசாரணை நடத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்" என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications