உள்ளம் உருகுதையா’ பாடலுக்கு இப்படி ஒரு வரலாறா? டிஎம்எஸ்-ன் கற்பனை கதவை திறந்த இஸ்லாமிய சிறுவன்
சென்னை: டி.எம்.சௌந்தர்ராஜன் என்ற பெயரைக் கேட்டதுமே 70ஸ்,80ஸ் ரசிகர்களுக்கு அலாதி இன்பம் வந்துவிடும் அதிலும் பக்தியில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கு டி எம் சௌந்தரராஜனின் பாடல்கள் அவ்வளவு அலாதியாக இருக்கும். அமைதியை தேடி அலைமோதிக்கொண்டிருக்கும் மனதிற்கு டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் ஆறுதலை கொடுத்து சந்தோஷத்தையும் ஒருவித புத்துணர்வை கொடுப்பதையும் பலரும் உணர்ந்து இருப்பார்கள்.
அதிலும் டி எம் சௌந்தரராஜன் 60 வருடங்களுக்கு மேலாக இசை உலகில் சக்கரவர்த்தியாக இருந்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களையும் 25,000 க்கு மேற்பட்ட பக்தி பாடல்களையும் பாடியுள்ளார்.

எத்தனையோ சினிமா பாடல்களை டி எம் சௌந்தரராஜன் பாடியிருந்தாலும் இவர் பாடிய ஒரு சில பாடல்கள் முருக பக்தர்களுக்கு தேனிசையாக இருக்கும். அதிலும் சொல்லாத நாளில்லை சுடர் மீது வடிவேலா, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன், உள்ளம் உருகுதையா போன்ற பாடல்கள் முக்கியமாக இடம் பிடித்திருக்கும்.. அதில் உள்ளம் உருகுதையா பாடல் உருவாகுவதற்கு ஒரு இஸ்லாமிய சிறுவர் தான் காரணமாக இருந்திருக்கிறார் அது பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் தொடங்கி பல முன்னணி நடிகர்களுக்கும் தன்னுடைய பாடல்கள் மூலமாக அவர்களுடைய நடிப்புக்கு உறுதுணையாக இருந்த டி எம் சௌந்தரராஜன் கலா ரத்தினம், கானரத்தினம், அருள் இசை சித்தர், சிங்கக்குரலோன், சாதனை சக்கரவர்த்தி, பாரதிய இசை கடல், பாடகர் திலகம், கான குரல் இசை சக்கரவர்த்தி என்று பல பெயர்களில் பலராலும் அன்போடு அழைக்கப்படும் டிஎம்எஸ் அவர் உருவாக்கிய பாடல்களுக்கு பின்னாடி பல காரணங்கள் கதைகள் இருக்கிறதாம்.

அதிலும் சினிமா பாடல்களை விடவும் சௌந்தர்ராஜன் அதிகமாக பக்தி பாடல்கள் தான் பாடி இருக்கிறார். அதுபோல இவர் பாடிய பாடல்கள் தான் கிராமங்களில் இருக்கும் சிறு கோவில்களில் மட்டுமல்லாமல் பெரிய பெரிய ஆலயங்களில் கூட ஒலித்துக் கொண்டிருக்கிறது. மனதிற்கு அமைதியை தேடுபவர்கள் இவருடைய பாடல்களை ஓடவிட்டு அதில் மூழ்கி புத்துணர்வு அடைந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சௌந்தரராஜன் எத்தனையோ பாடல்களை பாடி இருந்தாலும் இவர் முருகன் மீது பாடிய பாடல்கள் எப்போதுமே தனித்துவம் வாய்ந்தது. அந்த மாதிரி பாடல் வரிசையில் உள்ளம் உருகுதையா என்ற பாடலும் தவறாமல் இடம்பிடித்திருக்கும். ஆனால் இந்த பாடல் எப்படி உருவானது என்ற கதையை நீங்க கேட்டா ஆச்சரியப்பட்டு போவீங்க. அதாவது ஒரு நாள் டிஎம்எஸ் சௌந்தர்ராஜன் பழனிக்கு போய் இருக்கும்போது லாட்ஜில் தங்கி இருந்திருக்கிறார்.

அப்போது அங்கு வேலை பார்த்த ஒரு சிறுவன் எதார்த்தமாக தனக்குத்தானே ஒரு பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தாராம். அப்போது டிஎம்எஸ் க்கு அவர் என்ன பாடலை பாடுகிறார் என்று கேட்க ஆசை வந்திருக்கிறது. உடனே தன்னுடைய காதுகளை தீட்டி உற்று கவனித்திருக்கிறார். அப்போது அந்த சிறுவன் உள்ளம் உருகுதையா என்ற பாடலை படித்து இருந்திருக்கிறார். அந்தப் பாட்டை கேட்டதும் டி எம் சௌந்தர்ராஜன் மூழ்கி போய்விட்டாராம்.
அதோட டி எம் எஸ் க்கு இன்னொரு சந்தேகமும் வந்திருக்கிறது. அதாவது அந்தப் பாட்டை பாடியது ஒரு முஸ்லிம் சிறுவன் ஆனால் அவர் வாயில் வந்த வார்த்தைகள் முருகப்பெருமானை போற்றிப் பாடுவது அதனால் அந்த சிறுவனை கூப்பிட்டு அழைத்து இந்த பாடல் வரிகள் ரொம்ப அருமையாகவும் சக்தி உள்ளதாகவும் இருக்கிறது. இதை நீங்கள் எப்படி பாடுறிங்க இந்த பாடலை வரியை எழுதியது யார் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த அந்த சிறுவனால் பதில் சொல்ல முடியவில்லை.

காரணம் அந்த சிறுவனுக்கு இவர் கேட்ட தகவல்கள் எதுவுமே தெரியாதாம். ஆனாலும் அங்கு முழு பாடலையும் பாட வைத்து வரிவரியாக அதை டி எம் எஸ் குறிப்பு எடுத்துக் கொண்டாராம். பிறகு ஒரு முறை டி எம் எஸ் சென்னை தம்புச்செட்டி தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு போயிருக்கிறார் அப்போது அங்க ஒரு கல்வெட்டை பார்த்திருக்கிறார். அந்த கல்வெட்டில் இருந்த வார்த்தையை பார்த்ததும் இவருக்கு பெரிய அளவில் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
என்னன்னா அங்கே அந்த முஸ்லிம் சிறுவன் பாடிய அதே பாடல் அதாவது உள்ளம் உருகுதையா என்ற பாடல் முழுமையாக அங்கு பதிக்கப்பட்டு இருந்ததாம். இதை பார்த்ததும் அதிர்ந்து போன டிஎம்எஸ் அந்த பாடலை முழுக்க படித்து பார்த்ததில் கடைசியில் இந்த பாடலின் அடியில் ஆண்டவன் பிச்சை என்று அந்த பாடலை எழுதியவர் பெயரும் குறிப்பிட்டிருந்திருக்கிறது. அதைக் கேட்டு டிஎம்எஸ் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

காரணம் உள்ளம் உருகுதய்யா என்ற பாடலை மரகதம் என்கிற பெண்மணி பாடியிருக்கிறார். அவர் இந்த காளிகாம்பாள் கோயிலில் பாடியதை தான் இஸ்லாமிய சிறுவன் மூலமாக டி.எம்.எஸ் கேட்டிருக்கிறாரம். ஆனால் இந்தப் பாடல் வெளியாகி பல வருடங்கள் கடந்த பிறகும் இந்த பாடலை உண்மையில் எழுதியவர் யார் என்பது பற்றி டிஎம்எஸ் க்கு தெரியாதாம்.












Click it and Unblock the Notifications