ஹய்யா.. சீரியல் ஷூட்டிங்குக்கு அனுமதி கிடைச்சுருச்சு.. இனியாவது புது சீனா போடுங்க எசமான்!
சென்னை: சின்னத்திரை சீரியல்களுக்கு படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கி இருக்கிறது. பலரின் இதயம்...ஐயோ..மறுபடியும் சீரியல்களா என்று வலிக்கத்தான் செய்கிறது. ஆனாலும் பழைய சீன்களுக்கு முற்றுப் புள்ளி விழுவது நிம்மதிதான்.
மக்களை முட்டாளாக்கும் காட்சிகள்...அதாவது கதைப்படி இரவு நேரத்தில் நடக்கும் காட்சியாக இருக்கும்... கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் அதை பட்ட பகலில் ஜன்னலில் அடிக்கும் வெயில் வீட்டில் தெரியும்படி ஷூட் செய்து இருப்பார்கள்.
இப்படி மக்களை முட்டாளாக்கி அவர்கள் மீது காட்சிகளைத் திணிப்பதை தவிர்த்து, முக்கியமாக இழுவை இல்லாமல் சட்டு சட்டென்று கதையை சொல்லி முடிக்கும் பழக்கத்தை சீரியல் குழு கடைப்பிடித்தால் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கும்.

பேசாமல் இருப்போம்
உங்க இஷ்டத்துக்கு லாஜிக் இல்லாமல் எதையாவது சொல்லி கதையை வம்படிக்கு இழுப்பது, தேவை இல்லாமல் க்ளோசப் காட்சிகள் வைத்து டென்ஷனாக்குவது என்று பழையபடி உங்கள் பணிகளைத் தொடர்ந்துக்கொண்டே இருந்தீர்கள் என்றால் பேசாமல் இருப்பார்கள் மக்கள் என்று நினைக்காதீர்கள். செம காண்டில் இருக்காங்க.
|
பழையவை புத்தி புகட்டி
இந்த லாக்டவுன் நேரத்தில் உங்கள் தொலைக்காட்சிகளில் நீங்க முன்பு ஒளிபரப்பி வந்த பல சீரியல்களைத்தான் மறு ஒளிபரப்பு செய்தீர்கள். இப்படி நன்றாக சென்று கொண்டு இருந்த சீரியல்களில் இப்போது மட்டும் எப்படி இவ்வளவு இழுவை வந்தது என்று மக்களுக்கு தெரிவிக்கும்படிதான் இருந்தது உங்களின் மறு ஒளிபரப்பு சீரியல்கள்.

நிபந்தனை படப்பிடிப்பு
சீரியல் படப்பிடிப்புக்கு தமிழக அரசு சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறது. படப்பிடிப்பு சுற்றுச் சுவர் உள்ள வீடுகளில் மற்றும் அரங்குகளில் மட்டுமே நடக்க வேண்டும். படப்பிடிப்பு தளங்களில் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தி வைக்க வேண்டும். காய்ச்சல் , சளி, இருமல் மூச்சுத்திணறல் கொண்ட நடிகர், நடிகைகள், மற்றும் டெக்னீஷியன்களுக்கு பணிசெய்ய அனுமதி அளிக்க கூடாது.

பொது இடங்களில் ஷூட்டிங்
பொது இடங்களில் ஷூட்டிங் செய்ய வேண்டும் என்றால், வெளியூரில் மட்டுமே நடத்த வேண்டும். நடிகர் நடிகைகள் தவிர மற்றவர் முகக் கவசம் அணிந்து இருக்க வேண்டும். பணி இல்லாத நேரத்தில் நடிகர் நடிகைகளும் முகக்கவசம் அணிய வேண்டும். சானிடைஸர் கொண்டு கைகளை சுத்தம் செய்வது என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளை விதித்து, தொலைக்காட்சி சீரியல் ஷூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications