Top 10 Serial: இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட்.. எதிர்நீச்சலுக்கு மரண அடி! மாஸ் காட்டிய விஜய் டிவி
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என முன்னனி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் 2026 ஆம் ஆண்டிற்கான முதல் வாரத்தில் டாப் 10 சீரியல் டிஆர்பி விபரங்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி உங்களுக்கு பிடித்த சீரியல் எந்த இடத்தில் இருக்கிறது பார்த்துக் கொள்ளலாம்.

1. மூன்று முடிச்சு
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 10.03 டிஆர்பி புள்ளிகளை பெற்று, வழக்கம்போல முதல் இடத்தை தக்க வைத்து இருக்கிறது.
2. சிங்கப்பெண்ணே
சன் டிவியின் பிரபல சீரியலான சிங்கப்பெண்ணே, இந்த வாரம் 9.83 டிஆர்பி புள்ளிகளை பெற்று, இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆனந்தியின் வாழ்க்கை போராட்டங்களை மையமாகக் கொண்ட கதைக்களம் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்றுவருகிறது.
3. கயல்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் இந்த வாரம் 9.13 டிஆர்பி புள்ளிகளை பெற்று, மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக டாப் 3 பட்டியலில் நிலைத்திருப்பது இந்த தொடரின் பலமாக பார்க்கப்படுகிறது.
4. மருமகள்
சன் டிவியின் மருமகள் சீரியல் இந்த வாரம் 8.80 டிஆர்பி புள்ளிகளை பெற்று, நான்காம் இடத்தில் உள்ளது.

5. அய்யனார் துணை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல் இந்த வாரம் 8.69 டிஆர்பி புள்ளிகளை பெற்று, ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்த வாரத்தை விட ஒரு இடம் முன்னேறி நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
6. சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 8.32 டிஆர்பி புள்ளிகளை பெற்று, ஆறாம் இடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய திரைக்கதை மாற்றங்கள் சீரியலின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.
7. அன்னம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்னம் சீரியல் இந்த வாரம் 8.18 டிஆர்பி புள்ளிகளை பெற்று, ஏழாம் இடத்தில் உள்ளது. பெரிய மாற்றமின்றி தனது நிலையை இந்த வாரமும் தக்க வைத்துள்ளது.
8. எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான எதிர்நீச்சல் தொடர்கிறது, இந்த வாரம் 8.15 டிஆர்பி புள்ளிகளை மட்டுமே பெற்று, எட்டாம் இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த வாரம் டாப் 5-ல் இருந்த நிலையில் ஏற்பட்ட இந்த சரிவு கவனம் பெற்றுள்ளது.
9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வாரம் 7.64 டிஆர்பி புள்ளிகளை பெற்று, ஒன்பதாம் இடத்தில் நீடிக்கிறது. டிஆர்பி புள்ளிகள் குறைந்தாலும் டாப் 10 பட்டியலில் இடம் தக்க வைத்துள்ளது.
10. சின்ன மருமகள்
விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான சின்ன மருமகள், இந்த வாரம் 6.47 டிஆர்பி புள்ளிகளை பெற்று, பத்தாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த வாரம் பட்டியலில் இடம்பெறாத நிலையில், இந்த வாரம் மீண்டும் டாப் 10-க்கு திரும்பியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications