டாப் குக்கு டூப் குக்கு.. போட்டியாளராக வந்த பிரபல வில்லன்! அடேங்கப்பா இவங்களுமா வர்றாங்க!
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிய வெங்கடேஷ் பட் நடுவராக கலந்து கொள்கிறார். அதுபோல விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல கோமாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே ஒரு ப்ரோமோ வெளியாகி இதில் கலந்து கொள்ளும் டூப் குக்கு யார் என்பது தெரிய வந்திருந்த நிலையில் இப்போது டாப் குக்கு யாரெல்லாம் என்று புதிய பிரமோவில் காட்டி இருக்கின்றனர்.

விஜய் டிவியில் நான்கு சீசன்களாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய அளவில் பிரபலமடைந்திருந்த நிலையில் ஐந்தாவது சீசன் தொடங்குவதற்கு முன்பே பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்பட்டது. அதில் மீடியா மிஷன் தயாரிப்பு நிறுவனம், ஐந்தாவது சீசனில் இருந்து தான் விலகுவதாக அறிவித்திருந்தது. அதை தொடர்ந்து வெங்கடேஷ் பட் தானும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியை தயாரிப்பதாக அறிவித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட்டின் VB Dance நிறுவனம் முக்கிய பங்கு ஆற்றுகிறது. அதுபோல வெங்கடேஷ் பட் மட்டுமல்லாமல் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலங்களான கேபிஒய் தீனா, சூப்பர் சிங்கர் பரத், ஜிபி முத்துக்கள் ,மோனிஷா பிளஸ்சி, தீபா போன்ற பலரை களம் இறக்கி இருக்கின்றனர்.
இவர்கள் எல்லோரும் கலந்து கொண்ட முதல் ப்ரோமோ வெளியாகி இருந்தது. அந்த ப்ரோமோவின் வீடியோவை பதிவிட்டுள்ள வெங்கடேஷ் பட், "கண்டெண்டு தான் என்றும் ராஜா. ஒரிஜினல் கண்டண்டு தான் பேரரசர். மீடியா மெஷின்ஸ் வழங்கும் ஒரு புத்தம்புது நிகழ்ச்சி என்று குறிப்பிட்டதோடு #victoryForOriginality என்ற ஹேஸ் ஸ்டைக்கையும் போட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று இந்த நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் பட், நாங்க எல்லாரும் ரெடி நீங்களும் ரெடியா மக்களே? என்று கேட்டிருக்கிறார். அதோடு இந்த பிரமோவில் பல நடிகர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதிலும் திரைப்படங்களில் வில்லனாகவும் காமெடி கேரக்டரிலும் மிரட்டி கொண்டிருக்கும் நடிகர் பெப்சி விஜயனை பார்த்த ரசிகர்களுக்கு ஒரே ஆச்சரியமாக தான் இருந்திருக்கும். ஸ்டண்ட் மாஸ்டரான பெப்சி விஜயன் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருக்கிறார். அதிலும் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் வெளியான வில்லன், ஆஞ்சநேயா, விஜய் நடிப்பில் வெளியான வில்லு, சூர்யா நடித்த ஆதவன்,
விக்ரம் நடிப்பில் வெளியான தில், ரஜினியின் பாபா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். முரட்டு ஆளான பெப்சி விஜயனை குக்காக அழைத்து வருவார்கள் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். அவரோடு செஃப் சரவணன், டூப் குக்காக ஆதித்யா கதிர் ஆகியோரும் இருக்கிறார்கள். விஜயன், சரவணன், கதிரை வச்சுக்கிட்டு நான் எப்படிடா இந்த நிகழ்ச்சியை நடத்துவது என்று வெங்கடேஷ் பட் புலம்பும் ப்ரோமோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications