டாப் குக்கு டூப் குக்குவில் பெப்சி விஜயன் காலில் விழுந்த வடிவேலு! காரணமே இதுதானா? அப்போ அந்த விஷயம்?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வடிவேல் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் நடிகர் பெப்சி விஜயன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வங்கி இருக்கிறார். அது குறித்து வடிவேலு ஒரு விளக்கத்தையும் கொடுத்திருந்தார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் டிஆர்பிஐ கூட்டுவதற்காக டிவி சேனல்களில் புதியது புதியதாக நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் ஒரு நிகழ்ச்சி ஒரு சேனலில் பிரபலம் அடைந்து விட்டால் அதை போன்று அடுத்த சேனல்களிலும் நிகழ்ச்சி தொடங்குவது வாடிக்கைதான். அந்த வகையில் தான் விஜய் டிவியில் மீடியா மேஷன்ஸ் நிறுவனத்தின் மூலமாக குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

நான்கு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில் ஐந்தாவது சீசனில் விஜய் டிவியில் இருந்து மீடியா மேஷன்ஸ் நிறுவனம் வெளியே வந்து சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வருகிறார்கள். அதோடு நடிகர் வடிவேலுவும் நேற்றைய எபிசோடில் கலந்து கொண்டிருக்கிறார்.
இனி ஒவ்வொரு வாரமும் வடிவேலு தொடர்வாரா? அல்லது கடந்த வாரத்தில் மட்டும் சிறப்பு விருந்தினராக வந்திருக்கிறாரா? என்பது போகப் போக தான் தெரியவரும். அதே நேரத்தில் நேற்று நடந்த சில நிகழ்ச்சியான நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அந்த வகையில் நிகழ்ச்சியில் அறிமுகமானதும் வடிவேலு அங்கு டாப் குக்காக இருந்த பெப்சி விஜயன் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்.
அதோடு அண்ணன் விஜயன் மாஸ்டர் எனக்கு ரொம்பவே முக்கியமானவர். அவருக்கு இல்லாத திறமைகளே இல்லை என்று சொல்லலாம். மாஸ்டர் விஜயன் எல்லா மொழிகளும் பேசுவார். அதுபோல நிறைய புத்தகங்கள் படிப்பார். சண்டையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அவர் எனக்கு குரு தான். அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. அவர் இந்த நிகழ்ச்சியில் வந்தது பார்க்கும்போதே சந்தோசமாக இருக்கிறது.
எல்லா விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இங்கே பலர் வந்து இருக்கிறார்கள். அந்த வகையில் பெப்சி விஜயன் மட்டுமல்லாமல் சிங்கம்புலி அண்ணனும் வந்திருக்கிறார் அவரும் நடிப்பில் மட்டுமல்லாமல் நிறைய திறமையை வைத்திருக்கிறார். அவர்தான் என்று வடிவேலு பாராட்டி இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது.
காரணம் வடிவேலு நடித்த பல நடிகர்கள் அவர் தங்களை விட யாரும் நன்றாக நடித்து விடக்கூடாது என்பதற்காக பொறாமைப்படுவார், சக நடிகர்களை அடித்து அவமானப்படுத்துவார், என்றெல்லாம் பேட்டிகளில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நேற்று நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வந்திருக்கும்போது தன்னோடு வேலை பார்த்தவர்கள் காலில் விழுந்து வடிவேலு வணங்கியது பலராலும் வியப்பாக பேசப்பட்டு வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications