டாப் குக்கு டூப் குக்கு தொடங்கி 3 வாரம் தான் ஆகுது.. ஆனால் இதை எதிர்பார்க்கல! பட் திடீர் வீடியோ
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் தாய்லாந்தில் இருந்தபடியே திடீர் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமான வெங்கடேஷ் பட் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலம் அடைந்து இருந்தார். இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனிலிருந்து நான்கு சீசன்கள் வரைக்கும் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் திடீரென்று அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டு சன் டிவியில் டாப் குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் நடுவராக மாறி இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு உட்பட பல வெள்ளித்திரை பிரபலங்களும் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதோடு விஜய் டிவி பிரபலங்கள் பலரும் டூப் குக்காகவும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியிருக்கிறது. அந்த நிலையில் வெங்கடேசஷ் பட் திடீரென்று ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் நான் இப்போது தாய்லாந்தில் இருக்கிறேன். அங்கிருந்து தான் இந்த வீடியோவை அவசரமாக போஸ்ட் போடுகிறேன். அதற்கு காரணம் மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆதரவு பார்க்கும்போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் டெலிவிஷனில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பி வியாழக்கிழமை தோறும் வெளியாகிறது.
அந்த வகையில் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கும் டிஆர்பி வெளியாகி இருக்கிறது. அதை பார்த்ததும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. இப்படி ஆகும்னு கொஞ்சம் கூட நினைக்கல. காரணம் கடந்த வாரத்தில் இந்த நிகழ்ச்சிக்கு 4.44 புள்ளிகள் டிஆர்பி கிடைத்திருக்கிறது. ஆனாலும் மக்கள் எங்களுக்கு இவ்வளவு ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது.
இன்னமும் இதுபோல மக்கள் எங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்று நான் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். ஆதரவு தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தான் இந்த வீடியோவை அவசரமாக நான் போஸ்ட் போடுகிறேன் என்று தாய்லாந்தில் கடலில் பயணித்தபடியே வெங்கடேஷ் பட் இந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே வெங்கடேஷ் பட் இன்னொரு பேட்டியில் பேசும்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி போல எனக்கு டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சி கிடையாது. காரணம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எனக்கு 20 நாட்களுக்கு மேலாக ஷூட்டிங் நடந்து கொண்டே இருக்கும். ஆனால் இங்கே மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே எபிசோடு இருக்கிறது.
அதற்கு குறைந்தபட்சம் 10 நாட்கள் மட்டும்தான் எனக்கு சூட்டிங் இருக்கும். அதற்கு பிறகு உள்ள நாட்களில் ஃப்ரீயாக தான் இருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். அதுபோலத்தான் இப்போது தன்னுடைய விடுமுறை நாளில் தாய்லாந்தில் இவர் சுற்றுலாவிற்க்கு போயிருக்கும் நிலையில் தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications