முதல் படம் கொடுத்த தைரியம்.. இப்போ ஹீரோவாக அறிமுகமாகும் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மே மாதம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்தை பற்றி இப்போதும் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை இயக்கிய அபிஷன் ஜீவித் அந்த படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். ஆனால் இப்போது அவர் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறாராம். அது குறித்த தகவல் தான் இப்போது வெளியாகியிருக்கிறது.

2025 ஆம் ஆண்டு தொடங்கி ஏழு மாதம் ஆகிவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் சூர்யா, கமல்ஹாசன், தனுஷ், அஜித் குமார் என்று பல முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தாலும் அந்த படங்களை எல்லாம் விடவும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பலருடைய பாராட்டை பெற்றது. இந்த திரைப்படத்தை 27 வயதான அபிஷன் ஜிவித் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, கமலேஷ் எம்எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் என பலர் நடித்திருந்தனர்.

Abishen Jeevith Tourist Family movie Sasikumar Tamil cinema

2025 இல் வெளியான திரைப்படம்

இந்த திரைப்படம் கடந்த மே ஒன்றாம் தேதி ஆனால் உழைப்பாளர் தினத்தன்று வெளியானது. அந்த நாளில் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படமும் வெளியானது. ரெட்ரோ திரைப்படம் பெரிய அளவில் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் அந்த திரைப்படம் பற்றிய பேச்சு தான் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரெட்ரோ திரைப்படத்தை விட அதிக அளவில் வசூல் செய்து அனைவருடைய மனதிலும் இடம் பிடித்து விட்டது.

வியக்க வைத்த திரைப்படம்

எதார்த்தமான கதை அம்சம், அதுவும் பாசிட்டிவான ஒரு கதையை மக்கள் இவ்வளவு விரும்புவார்கள் என்பது இந்த படத்தின் மூலம் தான் பல இயக்குனருக்கு தெரிந்திருக்கும். இந்த திரைப்படத்தின் வெற்றி தமிழ் சினிமாவையே வியக்க வைத்திருக்கிறது. அதற்கு காரணம் இந்த திரைப்பட இயக்குனர் தான். அபிஷன் ஜீவித் இதற்கு முன்பு எந்த இயக்குநனரிடமும் துணை இயக்குநராக பணியாற்றவில்லை ஆனால் முதல் முறையாக அவர் இயக்கிய படம் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது அனைவராலும் பாராட்டைப் பெற்று வருகிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வசூல்

இந்த திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 15 கோடி தானம். ஆனால் இந்த திரைப்படம் 90 கோடிக்கு மேலே வசூல் செய்திருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுபோல இந்த திரைப்படத்தில் இயக்குநரான அபிஷன் சசிகுமாரின் மகனாக நடித்திருப்பார். அதிலும் அவருடைய நடிப்பு மற்றும் அவருடைய கேரக்டர் முக்கியத்துவம் படத்திற்கு நல்ல ஒரு மதிப்பை பெற வைத்தது. இந்த திரைப்படத்திற்கு கிடைத்த பெயரை வைத்து இப்போது அவர் ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார்.

Abishen Jeevith Tourist Family movie Sasikumar Tamil cinema

அபிஷன் ஜீவித் நடிக்கும் திரைப்படம்

அந்த படத்தை டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இயக்குநராக பணியாற்றிய ஒருவர் தான் இயக்க இருக்கிறாராம். அதுபோல இந்தப் படத்திற்கு "கரெக்டட் மச்சி" என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறதாம். அபிஷன் ஜீவித் ஜோடியாக நடிகை அனஸ்வரா ராஜன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சினிமாவில் உள்ள பல நடிகர்களும் இயக்குநர்களும் அபிஷன் ஜீவித்தை பாராட்டி இருந்தனர். இயக்குநராக வெற்றி பெற்ற அபிஷன் இனி நடிகராக என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+