Tourist Family box office: முதல் நாளே சிக்சர் அடித்த டூரிஸ்ட் பேமிலி வசூல்.. சசிகுமார்- சிம்ரனுக்கு அடுத்த வெற்றி
சென்னை: இயக்குனர் அபிஷன் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்போடு இருந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நடிகர் சசிகுமார் சமீபத்தில் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே கதை வித்தியாசமாகவும் ரசிகர்களால் பாராட்டப்படும் வகையில் இருக்கிறது. அயோத்தி திரைப்படத்திற்கு பிறகு அதைவிட சூப்பரான வெற்றிக் கொடுக்கும் வகையில் ஒரு திரைப்படத்தில் சசிகுமார் நடிக்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் விருப்பமாக இருந்தது. இப்போது டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தின் மூலமாக அது நிறைவேறி இருக்கிறது.

டூரிஸ்ட் பேமிலி ரிலீஸ்
சசிகுமார் நடிப்பில் நேற்று மே ஒன்றாம் தேதி டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இந்த திரைப்படத்தை அபிஷன் ஜீவித் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். அதுபோல இந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். இவர்களோடு எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார்.
ரெட்ரோ படத்திற்கு போட்டி
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படத்திற்கு போட்டியாக இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இதனால் கலெக்ஷன் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருந்தது. ஆனால் டிரைலர் வெளியான போது இந்த திரைப்படத்திற்கு நல்ல பாராட்டு கிடைத்து வந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஸ்பெஷல் ஷோ பார்த்த பல திறை பிரபலங்கள் இந்த படத்தை ஆகா ஓகோ என்று பாராட்டி இருந்தனர். இதனால் இந்த படத்திற்கு ஓவர் ஹைப்பும் உருவாகி இருந்தது.
பிரபலங்கள் பாராட்டு
இதற்கு முன்பு இதுபோன்று சில திரைப்படங்களை பார்த்துவிட்டு பிரபலங்கள் பாராட்டுவாங்க இருந்தாலும் கடைசியில் மொக்கை வாக்கியிருக்கிறது. ஆனால் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பிரபலங்கள் கொடுத்த ஹைப்புக்கு தகுந்தகதான் இருக்கிறது என்று ரசிகர்களும் இந்த படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். முதல் நாளே இந்த திரைப்படத்திற்கு யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வசூல் கிடைத்திருக்கிறது.

டூரிஸ்ட் பேமிலி முதல் நாள் வசூல்
தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் 1.6 கோடி வசூல் கிடைத்திருக்கிறது. இது சசிகுமாரின் ஹீரோவாக அவர் நடித்த அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனை படைத்திருக்கிறது. அதுபோல இந்த திரைப்படம் உலக அளவில் 2.5 கோடி வரை வசூல் கிடைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த திரைப்படம் வெறும் ஏழு கோடி பட்ஜெட்டில் தான் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வசூல் நிலவரத்தை பார்த்தால் இந்த வாரத்திற்குள் படத்திற்காக செலவு வசூல் செய்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் கேள்வி
பொதுவாக ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாகி சில வாரங்களுக்கு பிறகு ஓடிடிக்கு வரும். ஆனால் இப்போதே இந்த திரைப்படம் எப்போது ஓடிடிக்கு வரும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இப்போதைக்கு பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தால் இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக வாய்ப்பு இருக்கிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கதை முக்கியம் பாஸ்
தற்போது பல சின்ன சின்ன திரைப்படங்கள்தான் அதிக அளவில் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. சில பிரம்மாண்டமாக தயாரிக்கப்படும் திரைப்படங்கள் கூட முதல் வாரத்திலேயே பலரால் கழுவி ஊற்றப்பட்டு வருகிறது. கதை மட்டும் சிறப்பாக இருந்தால் கொண்டாட மக்கள் ரெடி என்று இப்போது ரசிகர்கள் கதை சிறப்பம்சம் உள்ள படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications