வீரதீர சூரன் படத்தின் 19 வயது தயாரிப்பாளர் ரியா ஷிபு.. இன்ஸ்டாகிராமில் தொடங்கி இப்போ புரொடியூசர்
சென்னை: நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் வீர தீர சூரன் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளரான ரியா ஷிபு பற்றிய தகவல்கள் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது. 19 வயதான ரியாஷிபு instagramல் இன்ஃப்ளேசராக ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு பிரபலமானார். இப்போது வீர வீர சூரன் படம் மூலமாக தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். அவர் பற்றி பார்க்கலாம்.
நடிகர் விக்ரம் நடிக்கும் வீரதீர சூரன் திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திரைப்படம் ரியா ஷிபு தயாரிப்பில் அருண்குமார் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகி இருக்கிறது. அதுபோல இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா சுராஜ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள்.

இளம் வயது தயாரிப்பாளர்
இந்த திரைப்படத்திற்காக பிரமோஷனில் பட குழுவினர்கள் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த பல சம்பவங்களை ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் விக்ரம் பேசுகையில், தன்னுடைய படத்திற்கு தயாரிப்பாளர் ரியாஷிபு என்று சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. 19 வயது பெண் ஒரு படத்தை தயாரிக்க முடியுமா என்று யோசித்தேன்.
விக்ரம் பேட்டி
அதற்கு பிறகு தான் அவருடைய சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோக்களை பார்த்தேன். ரீல்ஸ் வீடியோக்களில் அவ்வளவு க்யூட்டாக அவர் எக்ஸ்பிரஷன் காட்டி இருக்கிறார். அதுபோல இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளையும் சிறப்பாக செய்து இருக்கிறார் என்று பாராட்டி இருந்தார். இந்த விழாவில் கியூட்டான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்த ரியா ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளோன்சர் ஆக பிரபலம் ஆகி இருக்கிறார்.
அதுபோல இவருடைய ஹெச் ஆர் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக மூன்று மலையாள திரைப்படங்கள் தயாரித்திருக்கிறது. இவருடைய அப்பாவும் தமிழ் ரசிகர்கள் பலருக்கும் பரீட்சையமானவர்தான். அதாவது ரியாவின் அப்பாதான் கேரளாவில் விஜய் படங்களை விநியோகம் செய்தவர். அதுபோல ரியாஷிபு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலருக்கும் பரிட்சயமானவர் தான்.
அதிகமான பாலோவர்ஸ்
ரியா ஷிபு வை இன்ஸ்டாகிராமில் 4.5 லட்சம் பாலோவர்ஸ் பாலோ பண்ணுகிறார்கள். அவருடைய ரீல்ஸ் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் நடித்திருக்கிறார்.
சோசியல் மீடியா பிரபலம்
அதாவது கப் என்ற மலையாள திரைப்படம் மூலமாகத்தான் இவர் நடிகையாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அந்த படத்தில் ஜோசப் மேத்யூ, டோவினோ தாமஸ் நடித்து இருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் தான் இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் மட்டுமல்லாமல் தான் சிறுவயதில் இருந்தே வரைந்த ஓவியங்களையும் பகிர்ந்து இருக்கிறார்.
அப்பாவிடம் அட்வைஸ்
இந்த நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் விக்ரம் ரியாவை பாராட்டி பேசியதை தொடர்ந்து தன்னுடைய திரைப்பட தயாரிப்பு குறித்து அவர் பேசுகையில், ஒரு படத்தில் நடித்தது திரைக்குப் பின்னால் நடக்கும் விஷயங்கள் பற்றி பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. என் அப்பாவிடம் கேட்டு சில விஷயங்களை தெரிந்து கொண்டேன். அதனால் இந்த திரைப்படத்தில் நான் தயாரிப்பாளராக மாறி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
அதுபோல இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருக்கும் துஷாராவிற்கு இந்த திரைப்படம் மீண்டும் ஒரு சார்பட்டா திரைப்படம் போன்ற பிரபலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications