இந்த வயதில் ட்ராமா பண்ணாதீங்க! உழைத்து சம்பாதிங்க! இன்ஸ்ட்டாவில் திரிஷா பதிலடி! வெடிக்கும் சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை திரிஷா சோஷியல் மீடியாவில் ஒரு பதிவு வெளியிட்டாலே அதற்கு பின்னால் எதாவது ஒரு அர்த்தம் இருக்கிறது என்று விவாதம் ரசிகர்கள் மத்தியில் தொடங்கி விடுகிறது. குறிப்பாக தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில் நேரடியாக யாருடைய பெயரை குறிப்பிடாமல் சில கருத்துக்களை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள 2 இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவுகள் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

நடிகை திரிஷா பதிவு

சில நாட்களுக்குப் பிறகு திரிஷா தன்னுடைய பாட்டியின் பிறந்தநாளை கொண்டாட்ட புகைப்படங்களை ஏற்கனவே சில ஸ்டோரி ஆக பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் கடைசியாக அவர் வெளியிட்ட பதிவு What a privilege it is to be overwhelmed by a life you once prayed for என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. அதாவது ஒரு காலத்தில் நாம் வேண்டிக் கொண்ட வாழ்க்கை இன்று நம்மை வியக்க வைக்கும் அளவுக்கு நிறைவாக இருப்பது ஒரு பாக்கியம் என்ற பொருளில் அந்த பதிவு இருக்கிறது.

Trisha vijay

இன்ஸ்டா ஸ்டோரி

முதல் பதிவை பார்த்தால் திரிஷா தனது தற்போதைய வாழ்க்கை சந்தோஷமாகவும் நிறைவாகவும் இருப்பதை சொல்கிறாரா? என்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் அதற்கு அடுத்து அவர் பகிர்ந்து இருந்த இன்னொரு பதிவு தான் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்திருக்கிறது. அந்த பதிவில் இருந்த வயதில் ட்ராமா செய்வது சங்கடமாக இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதாவது Drama at this age is embarrassing... Go make some money and find peace என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது அதன் பொருள், இந்த வயதில் ட்ராமா செய்வது சங்கடமாக இருக்கிறது. போய் கொஞ்சம் பணம் சம்பாதித்து மன அமைதியை தேடுங்கள் என்பதாகும்.

வதந்திகளுக்கு பதில்

இந்த இரண்டு பதிவுகளையும் அடுத்தடுத்து திரிஷா பகிர்ந்து இருப்பதால் தான் தற்போது புதிய சர்ச்சைக்கு காரணம் ஆகி இருக்கிறது. திரிஷா இந்த பதிவுகளில் எந்த நபருடைய பெயரையும் சொல்லவில்லை. எந்த சம்பவத்தையும் நேரடியாகவும் சுட்டிக்காட்டவும் இல்லை. ஆனால் Drama at this age is embarrassing என்ற வரியை பார்த்ததும் யாரை மனதில் வைத்து திரிஷா இதை பகிர்ந்திருக்கிறார் என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்ப தொடங்கிவிட்டனர்.

நடிகை திரிஷா வீட்டில் திடீர் பங்க்ஷன்.. குவிந்த பிரபலங்கள்.. இது பலருக்கு கிடைக்காத பாக்கியம்
கடந்த சில மாதங்களாகவே திரிஷாவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரை சுற்றி வெளியாகும் வதந்திகள், அவருடைய சமூக வலைதள பதிவுகள் என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் விவாதம் ஆகி வருகின்றன. இதற்கு முன்பும் திரிஷா மறைமுகமாக பதிலடி கொடுப்பது போன்ற பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். அதனால் தற்போது வெளியாகி உள்ள 2 பதிவுகளும் வெறும் தத்துவ கருத்துக்களா? அல்லது தன்னைப் பற்றி பேசுபவர்களுக்கான மறைமுக பதிலடியா என்ற விவாதம் உருவாகி உள்ளது.

Trisha vijay

ரசிகர்கள் கருத்து

முதல் பதிவில் ஒரு காலத்தில் தான் வேண்டிக் கொண்ட வாழ்க்கை தற்போது கிடைத்திருப்பதாக கூறுவது போன்ற வாசகத்தை திரிஷா பகிர்ந்திருக்கிறார். அதற்கு அடுத்ததாகவே போய் பணம் சம்பாதித்து மன அமைதி தேடுங்கள் என்று அவர் சொல்லி இருப்பதால் இது ரசிகர்களுக்கு வேறு விதமாக அர்த்தத்தை கொடுத்துள்ளது. என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு உங்கள் வாழ்க்கையை போய் பாருங்கள் என்று தான் திரிஷா சொல்ல வருகிறாரா என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+