லேடி சூப்பர் ஸ்டார் வர்றாங்க.. அடடா திரிஷாவும்தான்.. ஆக. 15.. பட்டையைக் கிளப்பப் போகும் விஜய் டிவி!
சென்னை: ஸ்டார் விஜய்யின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக களமிறங்கும் புதிய நிகழ்ச்சிகளில் எதைப் பார்ப்பது எதை விடுவது என ரசிகர்கள் இப்பவே ஆர்வத்தில் காத்திருக்க ஆரம்பித்து விட்டனர்.
அதுவும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் கலகலப்பான இன்டர்வியூ தான் செம வைரல். அதுவும் அதில் அவர் தன்னுடைய பர்சனல் லைப் பற்றி ஓபனாக பேசியிருப்பதை பார்த்து ரசிகர்கள் ஸ்வீட் ஷாக் அடைந்து இருக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் திரிஷாவின் 60வது படத்தை முதல் காட்சியை பார்க்கப் போகும் சந்தோஷத்தில் அவருடைய ரசிகர்கள் எப்போது அந்த நாள் எப்போ வரும் என்று கேலண்டரை திருப்பித் திருப்பிப் பார்க்கின்றனர்.

எல்லாமே மனசு அள்ளுதே
புதுசு புதுசாக நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்துவதில் விஜய்டிவி எப்போதுமே டாப்பு தான். இந்த டிவிக்கு போட்டியாக பல சேனல்கள் புது நிகழ்ச்சிகளை களம் இறங்கினாலும் இந்த சேனலுக்கு என்று ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். விஜய் டிவியில் தான் புதியதாகவும் ரசிகர்கள் விரும்புவதாகவும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களின் மனதிற்கு பிடித்துவிடுகிறது. அந்த மாதிரிதான் இப்போகூட சுதந்திர தினத்தை முன்னிட்டு பல நிகழ்ச்சிகளை களமிறக்கி ரசிகர்களை எந்தப் பக்கமும் விடாமல் தன்னுடைய டிஆர்பியை கூட்டுவதில் கவனமாக இருக்கின்றனர்.

அப்போ செம ரகளை தான்
அதுவும் ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் 75வது ஆண்டு விழாவில் விஜய் டிவியில் விரிவான மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்பட பிரியர்களை கவர்ந்துவர உள்ளது. இந்த நிகழ்ச்சிகள் ரசிகர்கள் ஆர்வத்தை தூண்டும் வகையில் புதிய சிந்தனையாக இருப்பதால் இதைப் பார்ப்பதற்காக ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதுவும் காலை 9 மணிக்கு டாக்டர் ஞானசம்பந்தம் நடுவராகவும் ஒரு சிறப்பு பட்டிமன்றத்தோடு அந்த நாள் தொடங்குகிறது. பட்டிமன்றத்தை பார்ப்பதற்காக வீட்டில் இருக்கும் பெரியவர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அதுவும் ஞானசம்பந்தர் பட்டிமன்றம் என்றால் சொல்லவே வேண்டாம். அங்கு கருத்துக்களும் சிந்தனைகளும் தாறுமாறாக போட்டிபோடும் இதனை ரசிப்பதற்காக ரசிகர்களும் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்று எங்கேயும் சென்று விடாமல் டிவி முன்பே காத்திருக்கலாம்.

என்கேஜ்மென்ட் முடிஞ்சிடுச்சா
காலை பத்து முப்பதுக்கு ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு சிம்மாசனத்தில் இருக்கும் லேடி சூப்பர்ஸடார் நயன்தாராவின் சிறப்பான இன்டர்வியூ இருக்கிறது. ரொம்ப நாளைக்கு அப்புறம் டிடியும் தன்னுடைய ஜாலியான கலகலப்பான பேச்சால் நயன்தாராவை வம்பு இழுத்து அவருடைய சொந்த வாழ்க்கையைப் பற்றியும் திரைத் துறையைப் பற்றியும் ரசிகர்களுக்கு தெரியபடுத்துகிறார். ரசிகர்கள் பலர் நயன்தாராவின் நிகழ்ச்சிக்காக காத்திருந்தாலும் அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர். இதனாலேயே இந்த நிகழ்ச்சியை அவர்கள் பார்ப்பதில் வெறியாகத் தான் இருக்கின்றனர். அதுவும் நயன்தாராவின் கையில் இருக்கும் மோதிரத்தை பற்றி டிடி கேட்க அதற்கு நயன்தாரா பேசிய வார்த்தைகள்தான் அவருடைய ரசிகர்கள் காதுகளில் நெருப்பாக எரிகிறது தான். என்னது நம்ம நயன்தாராவுக்கு என்கேஜ்மென்ட் முடிந்துவிட்டதா என்று கவலையாக கேட்டு வருகின்றனர். ஆனாலும் முழுசாக எதுவும் தெரியலையே அதையும் மறக்காமல் பார்ப்பதற்காக கிளம்பிவிட்டனர்.

அப்போ ஒரு ரகளை இருக்கு
டிடி வந்துவிட்டால் கோபிநாத் வராமல் இருக்க மாட்டாரே!! அவரும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்துவிட்டார். அதுவும் அவருடைய ஸ்பெஷலான நீயா நானாவில் கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு மீண்டும் களம் இறங்கிவிட்டார். அதுவும் சுதந்திர தினம் அன்று அதுவுமாக இழந்த சொத்துக்களை சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைத்த நேர்மையானவர்கள் மற்றும் அதை என்றென்றும் இழந்தவர்கள் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தலைப்பை பற்றி இந்த வாரம் விவாதிக்க இருக்கிறார்கள். அப்போ இங்கே காரசாரமான விவாதங்களுக்கு பஞ்சமில்லை.

யாரு ஜெயிப்பாங்கலா இருக்கும்?
சாப்பாட்டில் எப்படி இனிப்பு காரம் எல்லாம் இருக்குமோ அதுபோலத்தான் அடுத்ததாக மூன்று மணிக்கு ஒளிபரப்பாகும் திரிஷாவின் பரமபதம் படம் ரசிகர்களுக்கு இருக்கப்போகிறது. தொலைக்காட்சியின் முதல் காட்சியாக பரமபதம் விளையாட்டு மூன்று மணிக்கு தொலைக்காட்சியில் முதல்முறையாக திரிஷா நடித்த திருஞானம் எழுதி இயக்கிய பரமபதம் விளையாட்டு ஒளிபரப்பாகிறது. இந்த படத்தை 22 மணி நேர தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த அரசியல் திரில்லர் திரிஷாவின் 60வது படம்.இந்தப்படத்தில் அழகின் மறு உருவமாக மீண்டும் ஸ்லிம்மாக களமிறங்கியிருக்கும் திரிஷா தன்னுடைய குழந்தையோடு அழகான வாழ்க்கையிலும் அரசியல் பின்புலத்தையும் உறித்து காட்டி இருக்கிறார். திரிஷாவின் அழகையும் நடிப்பையும் ரசிப்பதற்கு அவருடைய ரசிகர்களும் நாங்கள் வருகிறோம் என்று ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

பார்க்கலைன்னா வருத்தப்படுவீங்க
இந்த அளவிற்கு புதுப்புது நிகழ்ச்சிகளை களமிறக்கி இருந்தாலும் ரசிகர்கள் இந்த காலகட்டத்தில் வெளியே எங்கேயும் சென்று சுதந்திர தினத்தை கொண்டாட முடியாமல் தவித்து இருக்கும் நேரத்தில் வீட்டில் இருந்தபடியே விஜய் டிவியோட கொண்டாடுவதற்கு தயாராகிவிட்டனர். சுதந்திர தினத்திற்கு அனைவருக்கும் விடுமுறை என்பதால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு இந்த புது புது நிகழ்ச்சிகள் கொஞ்சம் மனதிற்கு ஆறுதலையும் சந்தோஷத்தையும் கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications