Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விவகாரம் தற்போது மேலும் தீவிரமாகி வருகிறது. ஏற்கனவே பல்வேறு வதந்திகள் கிளம்பியிருந்த நிலையில், இப்போது திரிஷா வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி கூட அந்த விவாதத்திற்கு புதிய தீனி ஊட்டியுள்ளது.

Trisha Vijay Kollywood Tamil Cinema

திருமண விழாவில் தொடங்கிய சர்ச்சை

சமீபத்தில் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் குடும்பத்தில் நடந்த திருமண விழாவில், விஜய்யும் திரிஷாவும் மேட்சிங் டிரஸ் ஒரே காரில் வந்து கலந்து கொண்டது பெரும் கவனத்தை ஈர்த்தது. இருவரும் மணமக்களை வாழ்த்தி, ஒன்றாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதற்கு முன்னரே, விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனுவில் தனது கணவருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றச்சாட்டு வைத்திருந்தார் என்ற தகவல்கள் பரவி வந்தன. அந்த நடிகை யார் என்ற கேள்வியில் பலரும் திரிஷாவையே சுட்டிக்காட்ட ஆரம்பித்தனர்.

வதந்திகளை தூண்டிய சோசியல் மீடியா

திருமண விழாவில் இருவரும் இணைந்து வந்ததிலிருந்து, "இருவருக்கும் உறவு உறுதி" என்ற பேச்சு பலரிடமும் வலுப்பெற்றது. தேர்தல் முடிந்ததும் இவர்களுக்கு திருமணம் நடக்கலாம் என்ற அளவுக்கு கூட சிலர் கருத்து கூற ஆரம்பித்தனர்.

அதோடு, திரிஷாவின் அம்மா உமா சில ரீல்ஸ்களுக்கு லைக் செய்தது கூட இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியது. யூடியூப், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து தளங்களிலும் இதே விவாதம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது

மௌனமாக இருந்த திரிஷா

இந்த சர்ச்சைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதும், திரிஷா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவுகள் போட்டு வருகிறார்.

சமீபத்தில் தனது தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, "நாங்கள் எல்லாம் ஒரே இடத்தில் சந்தித்தது ரொம்ப சந்தோஷம்... நல்ல உணவுக்கு நன்றி மேம்" என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் ஒரு நாய்க்குட்டி வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

புதிய ஸ்டோரி

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள மற்றொரு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி தான் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. அந்த ஸ்டோரியில், "யாராவது உங்க ஹாபி என்னன்னு கேட்டா... நான் ரெஸ்ட் எடுக்க தான் ரொம்ப விருப்பம். நீண்ட நேரம் படுத்து எதுவும் செய்யாமல் இருப்பேன்" என்ற கருத்துடன் ஒரு மீம் பகிரப்பட்டுள்ளது.

மேலும் "ஹாப்பி மண்டே" என்று குறிப்பிட்டிருந்த அந்த பதிவு, சாதாரண நகைச்சுவை போஸ்டா? இல்லையென்றால் இந்த சர்ச்சைகளுக்கு மறைமுக பதிலா? என்று ரசிகர்கள் பல்வேறு கோணங்களில் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.

சர்ச்சை நிழல்

திரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இடையில் சற்றே சரிவை சந்தித்தாலும், மீண்டும் தன்னை நிரூபித்து முன்னணிக்கு வந்துள்ளார்.

கடந்த ஆண்டு அவர் நடித்த மூன்று படங்களில் ஒன்று மட்டும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. மற்ற படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதற்கிடையே தற்போது புதிய படங்களிலும் அவர் பிஸியாக உள்ளார்.

திருமண விழாவில் தொடங்கிய இந்த சர்ச்சை, சமூக வலைதளங்களில் பெரிதாக பரவி, இப்போது திரிஷாவின் ஒவ்வொரு பதிவும் கூட புதிய அர்த்தங்களுடன் பார்க்கப்படும் நிலைக்கு வந்துள்ளது.

அவர் எந்த விளக்கமும் அளிக்காமல் அமைதியாக இருப்பது, இந்த விவாதத்தை இன்னும் அதிகப்படுத்தி வருகிறது. இது எல்லாம் சாதாரண சம்பவமா? அல்லது உண்மையில் ஏதாவது இருக்கிறதா? என்ற கேள்வி மட்டும் இன்னும் பதில் கிடைக்காமல் தான் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+