Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரவாயல் அப்பார்ட்மென்ட்டில் அழுகிகிடந்த சென்னை நடிகை சபர்ணா ஞாபகமிருக்கா?கடைசிவரை நினைச்சது நடக்கல

Subscribe to Oneindia Tamil

சென்னை: திரையில் பார்த்து ரசித்து, ஏதோ ஒருவிதத்தில் நம் மனதில் பதிந்துவிட்ட நடிகைகள் பலர் உண்டு.. சிலர் இதில் கனவு கன்னிகளாக நிற்பார்கள்.. சிலர் நம்முடைய பக்கத்து வீட்டு பெண்ணை போன்று இயல்பாக தெரிவார்கள்.. இப்படிப்பட்டவர்கள் திடீரென ஒருநாள் தற்கொலை செய்து தங்களது வாழ்வை முடித்து கொள்ளும்போது, அந்த அதிர்ச்சியிலிருந்து, சம்பந்தப்பட்ட ரசிகர்களால் எளிதில் மீண்டு வர முடிவதில்லை.. அப்படி ஒரு அதிர்ச்சியை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியவர்தான் சின்னத்திரை நடிகை சபர்ணா.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சபர்ணா, கோவை அரசுக் கல்லூரியில் பிஎஸ்சி சைக்காலஜி படித்தவர். நிறைய டிவி சீரியல்களில் நடித்துள்ளார்..

Television Sabarna Chennai Maduravoyal

துணிச்சலான பெண்

'அள்ளி தந்த வானம்' உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். 'படிக்காதவன்', 'பிரிவோம் சந்திப்போம்', 'காளை', 'பூஜை' உட்பட பல படங்களில் கதாநாயகியின் தோழியாக நடித்தவர்.

ஏராளமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 2016-ல் சென்னை, மதுரவாயலில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டில் தங்கியிருந்தார்.. திடீரென ஒருநாள் வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்..
வீட்டிற்குள்ளிருந்து துர்நாற்றம் அதிகமானதால், போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அழுகிய நிலையில் சபர்ணாவின் பிணம் கிடந்துள்ளது.. ஆடையின்றி நிர்வாண நிலையில் சடலம் கிடந்துள்ளது.. கை அறுக்கப்பட்டிருந்தன..

நிர்வாண உடல்

ஆண் நண்பருடன் லிவிங் டூ கெதரில் இருந்ததாகவும், ஆண் நண்பர் தன்னை விட்டுப் பிரிந்த விரக்தியில் சபர்ணா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்பட்டன. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் தற்கொலை என்றே முடிவானது.

இந்த மரணம் நடந்தபோது சபர்ணாவின் அப்பா செய்தியாளர்களிடம் பேசியிருந்தார்.. அப்போது, "என் மகளின் ரூமில் சிகரெட் துண்டுகளும், மதுபாட்டில்களும் இருந்ததாக போலீசார் சொல்வதால், இந்த மரணத்தில் சந்தேகம் உள்ளது. எந்தவித தீய பழக்கங்களும் கிடையாது. அவளது செல்போனையும் காணவில்லை. சபர்ணாவுக்கு இப்பதான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தோம். அதற்குள் இப்படியாகிவிட்டது என்று கண்ணீர் வடித்திருந்தார்.

தன்னுடைய கடைசி நாட்களில், தன் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்த போஸ்ட்கள் அனைத்துமே அவரது குழப்பமான மனநிலையையே காட்டியதாம்.. அதேபோல, அவர் நடித்து வந்த தொடர்கள் சிலவற்றில் இருந்து நீக்கப்பட்டதும் அவருக்கு மன உளைச்சலை தந்ததாக சக நடிகர்கள் கூறினார்கள்.

தற்கொலை முடிவு

நடிகைகள் திடீரென பிரபலமாவது, பிறகு அந்த சொகுசு வாழ்க்கை நழுவும்போது அதை ஜீரணிக்க முடியாமல் தடுமாறுவது, கஷ்டமான சூழலில் அதனை கையாள முடியாமல் திணறுவது, யாரிடமும் மனதில் உள்ளதை சொல்லி ஆலோசிக்காதது, போன்றவை எல்லாமே இப்படியான தவறான முடிவுகளுக்கு இட்டு சென்றுவிடுகிறது.

பணப்பிரச்சனை, சீரியல் வாய்ப்பு இல்லாதது போன்ற காரணங்களுடன் காதல் தோல்வி போன்ற விவகாரங்களும் சேர்ந்துவிடுவது, தற்கொலைக்கான காரணத்தை வலுப்படுத்திவிடுகின்றன.

அப்படித்தான் சபர்ணாவின் மரணமும்.. பெற்றோர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சபர்ணா சில பேட்டிகளிலும் கூறியிருந்தார்.

உலுக்கிய சபர்ணா

சபர்ணாவின் மரணம், திரையுலகையே உலுக்கியிருந்தது.. பெரிய கண்கள், எப்போதுமே துருதுருவென காணப்படும் சபர்ணாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது..

திரைத்துறையிலும் இப்படியான தற்கொலைகள் உண்டு.. அன்றைய சில்க் ஸ்மிதா, கோழி கூவுது விஜி, படாபட் ஜெயலட்சுமி, மோனல் உட்பட பலரும் இவர்களின் தற்கொலைகளுக்கு பின்னே மறைந்திருக்கும் நபர்கள் வெளிச்சத்துக்கு கடைசிவரை வரவேயில்லை.. அந்த மரணங்களின் மர்ம முடிச்சுகளும் அவிழ்க்கப்படவே இல்லை. சபர்ணா மரணம் உட்பட..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+