நல்லா வரணும் தங்கங்களா..! சரிகமப யோகஸ்ரீ, தர்ஷினியை நேரில் அழைத்து பாராட்டிய துணை முதல்வர்
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சேம்ப்ஸ். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ள யோகஸ்ரீ, தர்ஷினி, வைதேகி, அபிருத் என பல போட்டியாளர்கள் சாமானிய குடும்பத்தில் இருந்து தேர்வாகி மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து பாடி பார்வையாளர்களை வியக்க வைத்து வருகின்றனர்.

ஏற்கனவே கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் யோகஸ்ரீயை பாராட்டி சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அதே போல் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான தர்ஷினி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அம்மனப்பாக்கம் என்பது தான் இவருடைய கிராமம்.
60 முதல் 70 குடும்பங்கள் வாழும் இந்த ஊரில் தற்போது வரை பஸ் வசதி இல்லை என்பது பெரிய குறை. பல வருடங்களாக எங்கள் ஊரில் இருப்பவர்கள் படிக்க செல்ல வேண்டும் என்றால் கூட தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் என்று ஜீ தமிழின் சரிகமப மேடையில் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருந்தார் தர்ஷினி.
இதை தொடர்ந்து ஜீ தமிழின் சரிகமப குழுவினர் தர்ஷினியின் ஊருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.. இதன் மூலமாக அந்த ஊர் மக்களின் வாழ்வாதாரம் உயரும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஜீ தமிழின் சரிகமப குழுவினர் வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ளது தமிழக அரசு.

போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் டிசம்பர் 5-ம் தேதி தர்ஷினியின் சொந்த ஊரான அம்மனப்பாக்கத்தில் கொடி அசைத்து பேருந்து வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற உள்ளது.

இந்த நிகழ்வுகளை தொடர்ந்து தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவஷங்கர் ஆகியோர் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் போட்டியாளர்களான யோகஸ்ரீ மற்றும் தர்ஷினியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ஜீ தொலைக்காட்சியின் சௌத் கிளஸ்டர் ஹெட் சிஜு பிரபாகரன், நான் பிக்ஷன் ஹெட் பூங்குன்றன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications