அன்னை இல்லத்தில் ஷூவுடன் படுக்கையில் நடிகர் திலகம்.. சிவாஜி கணேசன் மகன்களுக்கு ஒரு கோரிக்கை: பிரபலம்
சென்னை: தனுஷ், நயன்தாரா எல்லாம் 100 கோடிக்கு வீடுகளை வாங்கி கொண்டிருக்கும்போது, சிவாஜி குடும்பம் மட்டும் ஏன் சொத்துக்களை விற்கிறார்கள் என்று தெரியவில்லை. எக்காரணம் கொண்டும் அன்னை இல்லம் வீட்டை விற்க கூடாது, அதை விற்க வேண்டும் என்ற யோசனைகூட வரக்கூடாது என்று பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், தன்னுடைய பணிவான வேண்டுகோள் ஒன்றையும் நடிகர் திலகம் குடும்பத்தினருக்கு விடுத்துள்ளார்.
Arasiyal Kazhugu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள ஜாக்குவார் தங்கம், "அன்னை இல்லம் வீட்டை பராமரிக்கவே 20 பேர் வேலைக்கு வேண்டும்.. அத்தனை பேருக்கும் மாத மாதம் சம்பளம் தர வேண்டும்.. ஆனால், சொத்து இருக்கிறதே என்பதற்காக பலரும் வேலைக்கு போவதில்லை.. வேலைக்கு செல்வதென்பது, பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே கிடையாது. நாம் மானத்தோடு வாழ வேண்டும் என்பதற்காகத்தான்.

அன்னை இல்லம்
நடிகர் திலகம், உலக நாட்டின் பொக்கிஷம்.. சொத்து விவகாரத்திலும், இன்று அந்த நடிப்பு பல்கலைக்கழகத்தின் பெயர்தான் அடிபடுகிறது. ஏற்கனவே எம்ஜிஆர் வீட்டுக்கு எதிரே இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை விற்றுவிட்டார்கள்.. அந்த இடத்தை விற்றதே எனக்கு தாங்க முடியவில்லை.. ஏனென்றால், நடிகர் திலகம் தன்னுடைய அம்மாவின் சிலைக்கு பக்கத்தில் வந்து எப்போதுமே உட்கார்ந்திருப்பார்.. இப்போது அதை விற்றுவிட்டார்கள்.
ஆனால், தன்னுடைய சொத்து யாரும் வாங்கவோ, விற்கவோ முடியாது என்பதுபோல உயில் எழுதி வைத்தார் எம்ஜிஆர்.. மாறாக, அதனை ட்ரஸ்ட் போல எழுதி வைத்துவிட்டார். இதுபோல ஜெயலலிதா அம்மா, நடிகர் திலகம் இருவருமே செய்யவில்லை. இன்று வெறும் 3 கோடிக்காக, அன்னை இல்லம் வீட்டை அடகு வைப்பது ஜீரணிக்க முடியாத ஒன்று.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, என்னுடைய சார்பாக 1 லட்சம் ரூபாய் தரலாம் என்று நினைத்தேன். நான் ஒரு லட்சம் என்றால், நடிகர் திலகம் ரசிகர்கள் எத்தனையோ பேர் இருக்கும்போது, 3 கோடி ரூபாய் கடன் உடனே அடைந்துவிடுமே என்று நினைத்தேன்.
சிவாஜி செய்த நிறைய உதவிகள்
ஆனால் சினிமா படம் எடுப்பதற்காக கடன் வாங்கிவிட்டு, அந்த கடனை கட்டவில்லை என்பது எனக்கு பிறகுதான் தெரிந்தது, அதென்ன 30 சதவீதம் வட்டி? எந்த நாட்டில் இவ்வளவு வட்டி இருக்கிறது? 3 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5 சதவீதம்தான் நாள் கேள்விப்பட்டிருக்கேன்..
எனக்கு தெரிந்து நிறைய தான தர்மங்களையும் சிவாஜி சார் செய்திருக்கிறார்.. நிறைய கோயில்களுக்கு யானைகளை வாங்கி தந்திருக்கிறார். இந்தியா சீனா, பாகிஸ்தான் போர்கள் நடந்தபோது, யாருமே எதிர்பார்க்காத மிகப்பெரிய தொகையை தந்து உதவினார்.. இது வெளியே யாருக்கும் தெரியாது.
தன்னை முதல் படத்தில் நடிக்க வைத்த தயாரிப்பாளரின் குடும்பத்துக்கு, ஒவ்வொரு வருட தீபாவளி, பொங்கலுக்கும் உரிய மரியாதையை கடைசிவரை செய்தார் சிவாஜி கணேசன்.. இன்று நடிகர் திலகத்துக்கு பதிலாக, அதனை பிரபு சார் செய்து கொண்டிருக்கிறார். நன்றியுள்ள கலைஞன் நடிகர் திலகம்.
களைப்பில் சிவாஜி கணேசன்
முன்பெல்லாம் ராம்குமார் சார், சினிமா கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டாரே, சிவாஜிக்கு அதை பற்றி எதுவுமே தெரியாது. பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து, காலில் ஷூ கூட கழட்டாமல், அப்படியே வந்து அசந்து படுத்துவிடுவாராம் சிவாஜி சார்.. கமலா அம்மாள்தான், ஷூக்களை கழட்டி விடுவாராம். அப்படியெல்லாம் பாடுபட்டு சம்பாதித்தார் சிவாஜி கணேசன். எனவே சிவாஜியின் வீடு என்பதைவிட, அதை அவரது நினைவுச்சின்னம் என்றுதான் அன்னை இல்லத்தை சொல்ல வேண்டும். அதையெல்லாம் விற்பதற்கே யோசிக்கக்கூடாது.
பாகத்தை பிரித்து தந்தபிறகு, அவரவர் கடனை அவர்வர்கள்தான் சந்திக்க வேண்டும். பிரபு சார், அந்த கடனை அடைக்க வேண்டிய கட்டாயமில்லை.. ஆனால், பணம் இருக்கும் பட்சத்தில், அண்ணனுக்காக அடைத்தால் நல்லதுதான். ஆனால், அந்த வீட்டைக் கட்டிக்காக்க வேண்டுமானால் பிரபு சார் சம்பளம் மட்டுமே போதாது.. அனைவருமே சேர்ந்து உழைக்க வேண்டும்.
மகன்களிடம் வேண்டுகோள்
தனுஷ், நயன்தாரா எல்லாம் 100 கோடிக்கு வீடுகளை வாங்கி கொண்டிருக்கும்போது, சிவாஜி குடும்பம் மட்டும் ஏன் சொத்துக்களை விற்கிறார்கள் என்று தெரியவில்லை.
சிவாஜி கணேசன் மகன்களிடம் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், சினிமாவில் நல்ல திரைப்படங்களை இனி எடுக்கலாம், கால்ஷீட் கேட்டால், விஜய், அஜித், ரஜினி சார் என எல்லாருமே உடனே தருவார்கள்.. அதனடிப்படையில் அவர்களை வைத்து படம் எடுத்து, கடனை தாராளமாக அடைக்கலாம் இப்படி ஒரு முயற்சியை எடுத்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து" என்று தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications