குக் வித் கோமாளி 6ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம்.. கண்கலங்கிய சக போட்டியாளர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து முதல் எவிக்ஷன் நேற்று நடைபெற்றிருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவருடைய எவிக்ஷனை பார்த்து போட்டியாளர்களும் பீல் பண்ணி இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த ஐந்தாவது சீசன் பெரிய எதிர்பார்ப்போடு தொடங்கியது. ஆனால் கடைசி நேரத்தில் பெரிய பஞ்சாயத்து வந்து முடிவுக்கு வந்தது. யாரும் எதிர்பார்க்காத சண்டை சச்சரவுகள் கடந்த சீசனில் நடந்தது. அதற்கு பிறகு இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்குமா? இல்லையா? என்று கேள்விகளும் எழுந்தது.

குக் வித் கோமாளி ஆறாவது சீசன்
ஆனாலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆறாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி மூன்று வாரம் முடிவடைந்திருக்கும் நிலையில் முதல் எலிமினேஷன் நேற்று நடைபெற்றிருக்கிறது. முதல் வாரத்தில் யார் வெளியேற போகிறார்கள் என்று எதிர்பார்ப்போடு இந்த ரசிகர்களுக்கு சோசியல் மீடியா பிரபலமான சௌந்தர்யா வெளியேற்றப்பட்டது அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கிறது.
கண் கலங்கிய பிரியா ராமன்
ரசிகர்களை போலவே அவருடன் போட்டி போடும் போட்டியாளர்களும் அவருடைய எவிக்ஷனை கேட்டு அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். சவுந்தர்யா பெயரை அறிவித்ததும் பிரியா ராமன் உட்பட போட்டியாளர்களும் கோமாளிகளும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். முதல் சில வாரங்களிலேயே சவுந்தர்யா வெளியேறியதை அவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் எமோஷனலாகி கண்ணீர் விட்டு அனைவரிடமும் விடை பெற்று சென்று இருந்தார்.
குக் வித் கோமாளி 6 எவிக்ஷன்
சௌந்தர்யாவின் நேர்மையான பங்களிப்பு மற்றும் அனைவரிடமும் பாசமாக அவர் நடந்து கொண்ட விதம் குறித்து பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள். அதே நேரத்தில் சௌந்தர்யா வெளியேற்றப்பட்டது சரியில்லை என்றும் சில கருத்து கூறி வருகிறார்கள். இந்த சீசனில் அதிகமான பிரபலங்கள் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமான முகமாக இருக்கிறார்கள்.
எதிர்பார்க்காத போட்டியாளர்
அதிலும் பிரியா ராமன், மதுமிதா, லட்சுமி ராமகிருஷ்ணன் போன்றோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று யாராலும் எதிர்பார்க்க முடியாத வகையில் தான் இருந்தது. லக்ஷ்மி நாராயணனுக்கு ஏற்கனவே விஜய் டிவியுடன் பஞ்சாயத்து இருந்தது. சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் தான் பேசியது போலவே பேசி தன்னை டார்கெட் செய்து அது இது எது நிகழ்ச்சியில் பேசுகிறார்கள் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். ஆனால் சில வருடங்கள் கழித்து அதே சேனலில் அவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் இருந்து சௌந்தர்யா வெளியேறியது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது அவருக்கு பதில் யார் வெளியேறி இருந்தால் சரியாக இருக்கும் என்று நீங்க நினைக்கிறீங்க பாஸ்.












Click it and Unblock the Notifications