பூபதியை கடைசிவரை டாக்டராக்க முடியலயே.. மனோரமாவின் உயிரையே எடுத்த வேதனை கதை! வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: பூபதியின் முதல் காதல் திருமண வாழ்க்கையானது, மனோரமாவை கடுமையாகவே பாதித்துவிட்டது.. மனோரமா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அது கசப்பான முடிவாக அமைந்துவிட்டதால் தன்னுடைய மகனும் காதல் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் மனோரமா. ஆனால், அது நிராசையாகிவிட்டது" என்று பத்திரிகையாளர் செய்யாறு ரவி தெரிவித்துள்ளார்.
Cheyyaru Balu Official என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு ரவி, "கின்னஸ் சாதனை படைத்து, பொம்பள சிவாஜி என்று போற்றப்பட்ட மனோரமா.. இப்படிப்பட்டவரின் மகன் பூபதி, தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண இடத்தை கூட பிடிக்க முடியாமல் போய்விட்டது..

ஆச்சியை ஒருமுறை நான் பேட்டி எடுக்க சென்றபோது, அதில் 90 சதவீதம் பேச்சு தன்னுடைய மகனை பற்றியே இருந்தது.. தன்னுடைய படத்தைவிட, தன் மகனின் போட்டோவை உங்கள் பத்திரிகையில் பெரிதாக போடுங்கள் என்று ஒரு தாய்க்குரிய பாசத்தில் என்னிடம் சொன்னார்.
மனோரமா ஆச்சி
இவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும்கூட, தன்னுடைய மகனை இந்த சினிமா துறைக்குள்ளேயே கொண்டு வரக்கூடாது என்றுதான் மனோரமா நினைத்தார்..
எப்படியாவது தன்னுடைய மகனை பிரபலமான டாக்டராக்கிவிட வேண்டும் என்பதே மனோரமாவின் கனவாக இருந்தது.
இன்றைய காலம் போலவே, அன்றைய காலத்திலும் டாக்டர் என்பது மிகப்பெரிய கனவான விஷயமாக அனைவருக்கும் இருந்தது.. பிரசிடென்சி காலேஜில், பிஎஸ்சி படித்து முடித்தாலும், பூபதி சினிமா பக்கமே தன்னுடைய கவனத்தை செலுத்தினார்..
தனி மனுஷியாக சாதித்தவர்
மனுஷியாக இருந்து தன்னுடைய மகனை வளர்த்து ஆளாக்கியவர் மனோரமா.. மனோரமா என்னிடம் பேசும்போது ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்..
அப்போது பூபதிக்கு 4 வயது.. திருச்சியில் ஒரு நாடகத்துக்கு அழைத்து சென்றிருந்தேன். பழம்பெரும் நடிகை சீதாலட்சுமி என்பவர் என்னை வாடி, போடி என்றுதான் கூப்பிடுவார்.. அன்று நாடகம் நடந்து கொண்டிருந்தபோது,
முன்வரிசையில் பூபதி உட்கார்ந்திருந்தான்.. நாடகம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு சீனில் சீதாலட்சுமி அக்கா, என்னை கடுமையாக திட்டுவார்.. இதை பார்த்து கொண்டிருந்த 4 வயது பூபதி, பாய்ந்து கொண்டு மேடைக்கு வந்துவிட்டான்.
கட்டிப்பிடித்து சண்டை
எனக்கே சீனியர் நடிகையான சீதாலட்சுமியிடம், "என் அம்மாவை எல்லாரும் பாப்பான்னுதான் கூப்பிடுவாங்க.. நீங்க என்ன என் அம்மாவை பேர் சொல்லி கூப்பிட்டு திட்டறீங்க? என்று சண்டைக்கே போய்விட்டான். இதைப்பார்த்து அரங்கத்திலிருந்தவர்கள், நாடகத்தில் நடித்து கொண்டிருந்தவர்கள் அரண்டு போய் பார்த்தார்கள்.
அம்மா மேல பூபதிக்கு இவ்வளவு பாசமா? என்று எல்லாருமே அன்று ஆச்சரியப்பட்டு போனார்கள்" என்று நெகிழ்ந்து சொன்னார் மனோரமா.
பூபதியின் முதல் படம் குடும்பம் ஒரு கதம்பம் என்று பலரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படத்தில் விஜயனின் தம்பியாக நடித்திருப்பார் பூபதி.. ஆனால் குடும்பம் ஒரு கதம்பம் படம் பூபதியை வெளியே தெரிய வைத்தது.. மணல் கயிறு படத்தில் நல்ல அருமையான கேரக்டரில் பூபதி நடித்திருந்தார். அதற்கு பிறகு சரியான வாய்ப்பு அவருக்கு அமையவில்லை.
காதல் திருமணம்
எனவே, தூரத்து சொந்தம் என்று மகனை வைத்து ஒரு படத்தை எடுத்தார் மனோரமா.. ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.. நஷ்டத்தையும், கடனையும் சந்திக்க நேரிட்டதால், மனோரமா மீண்டும் படங்களில் பிஸியாக ஆரம்பித்தார்..
இதில் பூபதியின் திருமண வாழ்க்கையும் மனோரமாவை கடுமையாகவே பாதித்துவிட்டது.. மனோரமா காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அது கசப்பான முடிவாக அமைந்துவிட்டது. அதனால் தன்னுடைய மகனும் காதல் திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் மனோரமா.
கடைசிவரை நிறைவேறாத ஆசை
இருந்தபோதிலும், காதலித்துதான் பூபதி திருமணம் செய்தார்.. எனினும் அது விவாகரத்தில் முடிந்தது.. இதனால் மனோரமா நிலைகுலைந்து போனார்.. சோறு, தண்ணீர் இல்லாமல் 10 நாட்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். பிறகு பூபதிக்கு 2வது திருமணம் செய்து வைத்திருக்கிறார்.. அந்த தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்துள்ளனர்.
பூபதியை டாக்டருக்கு படிக்க வைக்கமுடியாவிட்டாலும், தன்னுடைய பேரனை டாக்டருக்கு படிக்க வைத்தார் மனோரமா.. ஆனாலும், பூபதியை கடைசிவரை பிரபலமான ஹீரோவாக்க மனோரமாவால் முடியவில்லை" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications