ட்ரெண்டாகும் உருளைக்கிழங்கு செல்ல குட்டி.. பாடியது சூப்பர் சிங்கர் பிரபலத்தின் மனைவி..யார் தெரியுதா?
சென்னை: சமீபத்தில் குழந்தைகள் அதிகமாக விரும்பி பார்க்கப்படும் பாடல்களில் உருளைக்கிழங்கு செல்லக்குட்டி பாடல் இடம் பிடித்திருக்கிறது.
இந்த பாடல் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை தாண்டி தற்போது யாரும் எதிர் பார்க்காத வகையில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் இந்த பாடலை பாடியது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஒருவரின் மனைவி தானம் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சமீபகாலமாகவே சமூக வலைத்தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் சின்னதாக குண்டூசி செய்வதில் தொடங்கி ஆகாய விமானங்கள் செய்வது வரைக்கும் அத்தனையும் youtube தளங்களில் வீடியோவாக கிடைக்கிறது. அதில் பல பயனுள்ள தகவல்களும் இருக்கிறது. சில அபத்தமான வீடியோக்களும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதை நல்ல வழியில் பயன்படுத்தியே பலர் வாழ்க்கையில் முன்னேறிய கதையும் உண்டு.
அதுபோல பல வீடியோக்களை வெளியிட்டு வருமானங்களை ஈட்டி வருவதும் உலகறிந்த ரகசியம்தான். அதற்காகவே சிலர் விதவிதமான கன்டென்ட் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சில நேரங்களில் சில வீடியோக்கள் ஆரம்பத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல திடீரென்று அந்த வீடியோக்கள் வைரலாக தொடங்கி விடுகிறது. அந்த மாதிரி தான் சமீபத்தில் கூட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருடைய வரவேற்பையும் பெற்ற பாடல் தான் உருளைக்கிழங்கு செல்ல குட்டி.
ஆரம்பத்தில் குழந்தைகளை தூங்க வைப்பதற்காகவும் சாப்பிட வைப்பதற்காகவும் நிலாவை காட்டி தாய்மார்கள் பாட்டு பாடி கொண்டிருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் வீட்டில் இருக்கும் டிவியை காட்டி தான் சாப்பாடு ஊட்ட வேண்டியது இருக்கு. தூங்க வைக்க டிவி அல்லது செல்போனில் குழந்தைகளுக்கான பாடல்களை காட்ட வேண்டிய நிலைமை இருக்கிறது. அந்த வகையில் குழந்தைகள் விரும்பி பார்க்கின்ற வகையில் பல youtube சேனல்கள் புதியது புதிதாக பாடல்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
அதே நேரத்தில் பல பாடல்கள் புதியதாக வந்து கொண்டிருந்தாலும் ஒரு சில பாடல்கள் பல குழந்தைகளுக்கு பேவரைட் ஆகி விடுகிறது. அந்த வகையில் ஒன்றுதான் எப்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் உருளைக்கிழங்கு செல்ல குட்டி பாடல். இந்த பாடலை மது என்பவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு பாடி இருக்கிறார். அதற்கு பிறகு அவர் பல பாடல்களை பாடியதால் இந்த பாடலை மறந்து போய்விட்டாராம்.
ஆனால் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு இந்த பாடல் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது அதே நேரத்தில் இந்த பாடல் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களையும் மனதை கவர்ந்திருக்கிறது என்பதற்கு சான்றாக சமீபத்தில் வெளியான மந்தகம் என்ற வெப் சீரிஸில் கதாநாயகன் மணிகண்டன் இந்த பாடலை பாடி கொண்டிருப்பார். அந்த அளவிற்கு இந்த பாடல் தான் பலருடைய மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அதே நேரத்தில் இந்த பாடலை பாடிய மது விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமடைந்த சக்தி அமரனின் மனைவி என்று தெரியவந்திருக்கிறது. தற்போது சக்தி அமரன் மற்றும் அவருடைய மனைவி மது இருவரும் சேர்ந்து பாடிய பாடல்களும் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications