என் பொண்டாட்டி சாமி சார்.. மிடில் கிளாஸ் வாழ்க்கை பொக்கிஷம்! நெகிழ வைத்த இளைஞர்.. இது சரியா பாஸ்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வா தமிழா வா" தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எபிசோட்டில் "மிடில் கிளாஸ் வாழ்க்கையை விரும்புபவர்கள், அதை வெறுப்பவர்கள்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. மிடில் கிளாஸ் வாழ்க்கையை விரும்புபவர் அணியில் இருந்த ஒரு ஆண் தன்னுடைய மனைவியைப் பற்றி பேசிய விஷயம் தான் இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தன்னுடைய மனைவிதான் தனக்கு சாமி என்று கூறி இருக்கிறார். அதோடு பணம் அதிகமாக இல்லை என்றாலும் தான் எப்படி சந்தோஷமாக வாழுவேன் என்று அதில் பெருமையாக பேசி இருக்கிறார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனாலையே புதியது புதிய பெயரில் பல நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சி பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. அதே போல ஜீ தமிழிலும் தமிழா தமிழா நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்போது அந்த நிகழ்ச்சியை போன்று கலைஞர் டிவியில் வா தமிழா வா என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் பிக் பாஸ் பிரபலமான ஆரி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது.

Kalaignar TV Va Tamizha Va

வா தமிழா வா நிகழ்ச்சி விவாதம்

அதில் இந்த வார விவாதம் தான் இணையத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அதாவது இந்த வாரத்தில் அந்த நிகழ்ச்சியில் மிடில் கிளாஸ் வாழ்க்கையை விரும்புபவர்கள் மற்றும் அந்த வாழ்க்கையை வெறுப்பவர்கள் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள். பலர் மிடில் கிளாஸ் ஆக இருப்பதால் பட்ட அவமானங்கள் குறித்து கண்கலங்க பேசியிருக்கிறார்கள். அது பலருடைய வலி வேதனை நிறைந்த வார்த்தைகளாக இருக்கிறது. குழந்தையாக இருக்கும் போது தொடங்கி முதுமை வாழ்க்கை வந்தாலும் நடுத்தர வர்க்கத்தினரை பார்க்கும் போது மற்றவர்களின் ஏளன பேச்சு மற்றும் பல அவமானங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில் பலர் மனம் திறந்து பேசி இருக்கிறார்கள்.

மிடில் கிளாஸ் வாழ்க்கையை வெறுப்பவர்களுக்கு பதில் சொல்லும் வகையில் மிடில் கிளாஸ் வாழ்க்கையை விரும்பும் அணியில் இருந்து ஒரு இளைஞர் பேசியிருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது சோசியல் மீடியாவில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் அந்த நபர் பேசும் போது எதிர் தரப்பில் இருக்கிறவர்கள் எல்லாம் மிடில் கிளாசை வெறுக்கிறாங்க ஆனால் அந்த மிடில் கிளாஸில் நான் சந்தோஷமாய் இருக்கிறேன் என்பதை சொல்ல தான் வந்திருக்கிறேன்.

Kalaignar TV Va Tamizha Va

மிடில் கிளாஸ் வாழ்க்கை

என்னுடைய மனைவிக்கும் எனக்கும் காதல் திருமணம் நடந்தது அப்போ கூட எங்கள் கையில் பணம் கிடையாது கோவிலில் தான் திருமணம் நடந்தது. கோவிலில் முன்வாசலில் போனால் ஐயருக்கு பணம் கொடுக்கணும்னு சொல்லி பின்வாசலில் வந்து சாமி சிலை முன்பு தாலி கட்டிக் கொண்டேன். என் பொண்டாட்டியை அன்னையிலிருந்து பத்து வருஷமா சந்தோஷமா பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் பொண்டாட்டி தான் எனக்கு சாமி.

இன்னைக்கு கோடி கோடியா வைத்திருக்கிற எனக்கு தெரிஞ்சவங்க கூட என்கிட்ட பேசும் போது என் பொண்டாட்டி என்கிட்ட டைவர்ஸ் கேட்கிறா என்று சொல்றாங்க. ஆனால் நான் கையில் காசு இல்லை என்றாலும் ஆயிரம் பேர் முன்னாடி என் பொண்டாட்டியை கவுரவமா கைய புடிச்சு கூட்டிட்டு போறேன். உனக்காக நான் இருக்கிறேன் என்று சொல்கிறேன். நான் மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருப்பதால் என் பையன் கூட என்னால் நிறைய நேரம் டைம் பாஸ் பண்ண முடிகிறது.

Kalaignar TV Va Tamizha Va

கணவரின் ஆதங்கம்

அதேபோல நான் பணக்காரனாக இருந்தேனா இன்னும் பணம் சம்பாதிக்கணும்னு ஓடிக்கிட்டே இருந்திருப்பேனே தவிர என் பொண்டாட்டியை சரியா பாக்க மாட்டேன். என் பையன் கூட என்னால் சரியாக நேரத்தை செலவிட முடியாது. இப்போ என் பையனுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று எனக்கு நல்லாவே தெரியும். இந்த இடத்தில் கூட என்னுடைய பையன் திறமையை நான் நிரூபிக்கிறேன் என்று அங்கு அவருடைய பையனை பல்டி அடிக்க சொல்கிறார். அதிலும் அந்த தகப்பன் சொல்வதை எல்லாம் அவருடைய பையனும் அழகாக செய்து கொண்டிருக்கிறார்.

அப்போது ஒரு இடத்தில் அந்தப் பையனின் கால் தடுமாறுகிறது. அப்போது பாத்துக்கலாம் டா இதுக்கெல்லாம் பயப்படக்கூடாது தைரியமா பண்ணு என்று ஒரு தந்தையாக அந்த மகனுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிறார். அதோடு தன்னுடைய மனைவி மிடில் கிளாஸ் வாழ்க்கையை வெறுப்பவர் அணியில் இருப்பது தனக்கு வருத்தமாக இருக்கிறது, அவள் இத்தனை நாளும் என்னோடு சந்தோஷமா தான் இருந்தால், ஆனால் இப்போ என்ன ஆச்சுன்னு தெரியல எதிர்பக்கத்தில் போய் உட்கார்ந்து இருக்கிறா என்று அந்த வீடியோவில் அந்த நபர் பேசி இருக்கிறார்.

சிறந்த தந்தை

அந்த நபரின் பேச்சு இப்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த மனிதன் தன் மனைவிக்கு சிறந்த கணவராகவும் இருக்கிறார். மகனுக்கு நல்ல தந்தையாகவும் இருக்கிறார் என்று பலரும் பாராட்டுகின்றனர். ஆனால் எதிர் தரப்பில் இருக்கும் அவருடைய மனைவி என்னவெல்லாம் கஷ்டப்பட்டு விட்டேன் என்று சொல்லப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ளத்தான் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அது நாளை தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+