Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளையராஜா எனக்கு கடவுளுக்கு மேலே.. சிலிர்த்த பிரபலம்.. “வா தமிழா”வில் ஆரி கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வா தமிழா வா நிகழ்ச்சியை முதல் முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஆரி தொகுத்து வழங்கியிருக்கிறார். அவர் தொகுத்து வழங்கும் முதல் எபிசோடில், "இளையராஜா பாடல்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பு "குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

அதில் ஒரு ரசிகர் எனக்கு இளையராஜா கடவுளுக்கு மேலே என்னுடைய கவலைகளை தீர்க்க பல பாடல்களை தந்திருக்கிறார் என்று பேசி இருக்கிறார். அதற்கு ஆரி சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Vaa Tamila Vaa episode 1 aari hosted public reception of Ilayaraaja songs

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் பிரபலத்தை பார்த்து அதற்கு போட்டியாக பல சேனல்களில் பல பெயர்களில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சி தொடங்கப்பட்டு அது மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று இருக்கிறது. அதைத்தொடர்ந்து வா தமிழா வா என்ற நிகழ்ச்சி கலைஞர் டிவியில் தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இயக்குனர், நடிகர் என்று பல முகங்களை கொண்ட கரு பழனியப்பன் தொகுத்து வழங்கி வந்தார். கரு பழனியப்பன் ஜீ தமிழில் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் அதிலிருந்து விலகி கலைஞர் டிவியில் வா தமிழா வா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்தநிலையில் கடந்த வாரத்தோடு அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகிவிட்டார்.

அதற்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஆரி தொகுப்பாளராக மாறி இருக்கிறார். ஆரி தொகுத்து வழங்கும் முதல் நிகழ்ச்சி "வா தமிழா வா" என்ற நிகழ்ச்சியாக இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் இளையராஜா பாடலின் பெருமை அவருடைய ரசிகர்களிடம் விவாதிக்கப்பட்டு இருக்கிறது. அதில் இளையராஜா குறித்து பலரும் பல்வேறு தகவல்களை கூறிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தவர்களிடம் நீங்கள் இளையராஜாவை யாரோடு ஒப்பிடுவீர்கள்? உங்களுடைய பிளே லிஸ்டில் அவருடைய பாடல்களுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு பலர் பல்வேறு பதில்களை கூறிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு பிரபலம் "எனக்கு இளையராஜா கடவுளுக்கு மேலே.." கடவுள் நம்முடைய கவலைகளை தீர்ப்பவர் என்றால் இளையராஜா எனக்கு அதற்கு மேலே தான்.

எனக்கு எந்த நேரத்தில் எல்லாம் கவலை இருக்கிறதோ அப்போது அவருடைய பாடல்களை கேட்டாலே போதும் கவலை எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லி இருக்கிறார். அதுபோல இன்னொரு ரசிகர் நான் மீன்பிடிக்கும் தொழிலை செய்து வருகிறேன். 7 வயதிலிருந்து இந்த தொழிலில் இருக்கிறேன். எனக்கு நண்பனாகவும் மோட்டிவேஷனலாகவும் இருப்பது இளையராஜாவின் பாடல்கள் தான். நான் தனிமையில் பல நேரங்களில் இருந்திருக்கிறேன்.

அந்த நேரத்தில் எனக்கு துணையாக இருந்தது இளையராஜாவின் பாடல்கள் தான். அவருடைய பாடல்கள் இல்லை என்றால் நான் என்ன ஆகி இருப்பேன் என்று தெரியாது. அவருடைய சோகப் பாடல்கள் கூட எனக்கு பல நேரங்களில் உத்வேகம் கொடுக்கும் பாடலாக மாறி இருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதுபோல அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு பெண் நான் என்னுடைய மகன் வயிற்றில் இருக்கும் போதிலிருந்து இளையராஜா பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதனாலேயே என்னுடைய மகனும் இளையராஜாவின் தீவிர ரசிகராகிவிட்டார் என்று கூறியிருக்கிறார். அதுபோல அந்த நிகழ்ச்சியில் அந்த பெண்ணின் மகனும் கலந்து கொண்டு இளையராஜாவின் "நலம் வாழ என்நாளும் வாழ்த்துக்கள்" என்ற பாடலை பாடி அங்கிருந்தவர்களை வியக்க வைத்திருந்தார். இப்படியாக ஆரியின் முதல் நாள் எபிசோடில் இளையராஜாவின் பெருமை மற்றும் அவருடைய பாடல்கள் மக்களுக்கு எந்த அளவிற்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது என்பது பற்றி பலர் பேசியிருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+