ரஞ்சித்தின் நண்பர் என்றால்? நடிகருக்கும் பூசப்படுதா சாயம்? வாழை கலையரசன் மீது குத்தப்படும் முத்திரை..
சென்னை: நடிகர் கலையரசன் தமிழ் சினிமாவில், முக்கிய இடத்தை தன்னுடைய நடிப்பால் பெற்றுள்ளார்.. மெட்ராஸ், மதயானைக் கூட்டம், வாழை போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால், அதற்கு பிறகு பெரிதாக வாய்ப்பு வரவில்லை.. டைரக்டர் பா. ரஞ்சித்திற்கு நான் நெருக்கமானவன் என்பதாலே சினிமாத்துறையில் சில வாய்ப்புகள் எனக்கு மறுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கலையரசன் வருத்தமாக கூறியிருந்தார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சுபைர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சுபைர், "சாதீயம் தமிழ் சினிமாவில் காலம் காலமாகவே இருந்து வருகிறது.. இசைஞானி இளையராஜா, தனக்கான நாற்காலியை, தானே உருவாக்கி அதில் உட்கார்ந்துள்ளார்.. இது மிகப்பெரிய விஷயம்..

எத்தனை தடைகள் போட்டாலும், அதை உடைத்தெறிந்து, தங்களை நிலைநிறுத்திக் கொள்ள சிலருக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், இன்று டிஜிட்டல் சினிமா வந்துவிட்டது..
இதனால், எல்லாமே குறுகிவிட்டது.. 2 படங்கள் நடிக்கும் ஹீரோயினை மறுபடியும் காணவில்லை.. அந்தவகையில், மிக முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய நடிகர்தான் கலையரசன்.
மதயானைக்கூட்டம்
தமிழகத்தில் வட தமிழ்நாடு, தென் தமிழ்நாடு, கொங்கு என மூன்று பிரிவுகளாக உள்ளன.. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பாடிலேங்குவேஜ் உள்ளது.. அந்தவகையில், மதயானைக் கூட்டத்தை எடுத்துக் கொண்டால், மதுரை, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி நபராக கலையரசன் நடித்திருப்பார்.. மதுரை வட்டார மொழியை தாண்டி, அனைவருக்குமே அந்த படத்தில் ஒரே மாதிரியான பாடிலேங்குவேஜ் இருப்பதை காணலாம். கலையரசனை பொறுத்தவரை, சின்ன சின்ன மாடுலேஷனைகூட சிறப்பாக அந்த படத்தில் செய்திருந்தார்..
இதற்கு பிறகுதான், மெட்ராஸ் படத்தில் வடசென்னை பாடிலேங்குவேஜ்ஜை அப்படியே தன்னுடைய நடிப்பில் பிரதிபலித்திருந்தார்.. வாழை படத்திலும் அதே வட்டார மொழி, பார்வை, பாடிலேங்குவேஜ் என நடிப்பை கொட்டியிருந்தார்.
ரகுவரன் ஹோம் ஒர்க்
ரகுவரன் எப்போதுமே, எந்த கேரக்டரில் நடிக்க போகிறாரோ, அதற்கான ரெஃப்பெரன்ஸ் எடுப்பாராம்.. போலீஸ் ஆபீசர் கேரக்டர் என்றால், 10 விதமான போலீஸ் கேரக்டர் சம்பந்தப்பட்ட படங்களை பார்த்து, தயாராகுவாராம்.. ரகுவரனை போலவே கலையரசனும் ஹோம் ஒர்க் செய்யக்கூடியவர் போல தெரிகிறது. ஒவ்வொரு வட்டார மக்களை உற்று கவனிக்கிறார்.. அவர்களின் ஒவ்வொரு மொழியையும் கற்கிறார்..
இந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த நடிகர் கலையரசனுக்கு பெரிதாக வாய்ப்பு வழங்கப்படவில்லை.. அவரை ஏன் தொடர்ந்து யாரும் பயன்படுத்தி கொள்ளவில்லை என தெரியவில்லை.. இதுவரை தான் நடித்த படங்களில் எல்லாமே இறப்பது போன்றே எடுக்கப்பட்டுள்ளன என்று கலையரசனே ஒருமுறை கூறியிருந்தார்.
ரஞ்சித்தின் நண்பர்
தற்போது டைரக்டர் ரஞ்சித்தின் நண்பர் என்ற சாயம் பூசப்படுவதால், தனக்கு வாய்ப்புகள் வழங்காமல் தவிர்ப்பதாகவும், தன்மீது ஏதோ முத்திரை குத்தி ஒதுக்கப் பார்ப்பதாகவும் வருத்தப்பட்டுள்ளார்..
கலையரசன் சொல்வதும் உண்மைதான்.. சமீபகாலமாக 10 வருடமாக இப்படியான பிரிவினை இருக்கத்தான் செய்கிறது.. இதனால் நல்ல கலைஞர்களுக்கான வாய்ப்புகள் பறிபோகின்றன. கலைக்கு சாதி, மொழி, இனம் எதுவுமே கிடையாது என்றாலும், இவைகளை உடைக்கக்கூடிய வேலையை, இன்றைய கலைஞர்கள், இயக்குனர்கள், டெக்னீஷியன்கள்தான் செய்ய வேண்டும்.
ஒருவரின் நடிப்பை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அவர் பின்னணி என்ன? அவர் எந்த டைரக்டரிடம் நடித்துள்ளார் என்பதை பார்ப்பது நல்ல கலைஞர்களுக்கு அழகல்ல" என்கிறார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications