கொட்டும் மழையில் விஜய் டிவி நடிகைக்கு சங்கீத் ஃபங்ஷன்.. குவிந்த பிரபலங்கள்.. க்யூட்டான போட்டோஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வைஷ்ணவிக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த்க்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், சங்கீத் பங்க்ஷன் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் துணை கேரக்டரில் நடித்த வைஷ்ணவி பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் இந்த சீரியலில் இவர் நடிக்கும்போது அதிகமான விமர்சனங்கள் வந்தது. ஆனாலும் அதையெல்லாம் தாண்டி இவர் இந்த சீரியலில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த மாதத்தில் தான் வைஷ்ணவி சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்தத்தை காதலிக்கும் தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தார். அதைத்தொடர்ந்து அடுத்த வாரமே இந்த ஜோடியின் எங்கேஜ்மென்ட் நடைபெற்றது. சின்னத்திரையில் ஒன்றாக நடித்து பலர் காதலர்களாக மாறி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது வைஷ்ணவி மற்றும் வெற்றி வசந்த் ஜோடியும் இணைந்து இருக்கிறார்கள்.

வைஷ்ணவி மற்றும் வெற்றி வசந்த் இருவருமே எந்த பின்புலமும் இல்லாமல் தங்களுடைய முயற்சியால் இன்று சின்னத்திரையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்றதும் பலரும் இன்ப அதிர்ச்சி தான் அடைந்தார்கள் என்று சொல்லவேண்டும். காரணம் பொன்னி சீரியலில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெற்றி வசந்த் பொன்னியின் அண்ணனாக நடித்திருந்தார்.

வெற்றி வசந்த் மற்றும் வைஷ்ணவியின் திருமணம் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இவர்களுடைய திருமண கொண்டாட்டம் தொடங்கி இருக்கிறது. நேற்று அவர்களுக்கு சங்கீத் பங்க்ஷன் நடந்து இருக்கிறது. அடுத்ததாக மெஹந்தி ஃபங்ஷன் என ஒவ்வொரு பங்க்ஷன்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பொன்னி சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் சபரி இந்த பங்க்ஷனில் கலந்து கொண்டு இருக்கிறார். அவருடைய தோழிகள் பலர் இருக்கிறார்கள் அவர்களோடு சேர்ந்து சபரியும் வைஷ்ணவிக்கு சந்தனம் வைத்து மலர் பந்தல் சுமந்து திருமண வேலை பலவற்றையும் செய்து கொண்டிருக்கிறார். இந்த க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications