கணவருக்கு மெட்டி அணிவித்து காதலர் தினத்தை கொண்டாடிய கன்னிகா.. சினேகன் கூறிய எதிர்பாராத பதில்
காதலர் தினத்தில் தன்னுடைய கணவர் சினேகனுக்கு நடிகை கன்னிகா ரவி காலில் மெட்டி அணிவித்து தன்னுடைய காதலை தெரிவித்து இருக்கிறார்.
சென்னை: உலகெங்கிலும் இன்று பிப்ரவரி 14 காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடிகை கன்னிகா ரவி தன்னுடைய கணவர் பாடலாசிரியர் சினேகனோடு காதலர் தினத்தை கொண்டாடி இருக்கிறார்.
காதல் கணவருக்கு தன் கையாலே காலில் மெட்டி அணிவித்து மகிழ்ந்த கன்னிகா அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
கன்னிகாவின் வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

காதல் தம்பதிகள்
இன்று பிப்ரவரி 14 காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சமூக வலைதளத்தில் அதிகமான வீடியோக்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பிரபலங்கள் பலரும் காதலர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் திரை பிரபலங்களாக இருக்கும் நடிகை கன்னிகா ரவி மற்றும் பாடலாசிரியர் சினேகன் காதலர் தினத்தை கொண்டாடி அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இவர்கள் ஏற்கனவே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். பல வருடங்களாக காதலித்து வந்தாலும் தங்களுடைய காதல் ரகசியம் வெளியே தெரியாமல் மறைத்து வைத்த இவர்கள் திருமண அறிவிப்பு கூறுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தங்களுடைய காதலையும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருந்தனர்.

திருமணங்கள் நடத்தி வைப்பு
கன்னிகா ரவி பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவில் சின்னத்திரையில் பெயர் வாங்கிக் கொடுத்தது என்றால் சன் டிவியில் ஒளிபரப்பான கல்யாண வீடு என்ற சீரியல் தான். இந்த சீரியலில் சூர்யா கேரக்டரில் இவர் பாதிக்கு பிறகு நடித்திருந்தாலும் அதிலும் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டார். இந்த நிலையில் சமீபத்தில் முடிவடைந்த பாரதி கண்ணம்மா சீசன் ஒன்றில் கன்னிகா ரவி மற்றும் அவருடைய கணவர் சினேகன் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு பாரதி மற்றும் திருமணத்தை நடத்தி வைத்திருந்தனர். சீரியலில் மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் ஜோடியாக நிஜத்திலும் பல திருமணங்களை நடத்தி வைத்து வருகின்றனர்.

நீளமான தலை முடி
நடிகை கன்னிகா ஒரு மாடலாகவும், அழகி பட்டம் பெற்றவராகவும், ஒரு புத்தக ஆசிரியர் ஆகவும், சிலம்பாட்டம் தெரிந்தவராகவும், ஓவியராகவும் பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கிறார். இந்த நிலையில் தான் இவர் பாடலாசிரியர் சினேகனை காதலித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் சொந்த ஊரிலிருந்து நடிப்பதற்காக சென்னைக்கு வந்தபோது இவருக்கு அதிகமாக உதவி செய்தது சினேகன் தானாம். எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அதிகமாக கேர் எடுத்து இவரிடம் பழகி வந்திருக்கிறார். இதுவே இவர்களுக்குள் காதல் ஏற்பட காரணமாக அமைந்துவிட்டது என்று கன்னிகா கூறியிருக்கிறார்.

காலில் மெட்டி
இந்த நிலையில் இன்று கொண்டாடப்பட்டு வரும் காதலர் தினத்தை கொண்டாடி நாங்கள் திருமணம் முடிந்திருந்தாலும் என்றும் காதலர்கள் தான் என்று இவர்கள் நிரூபித்து இருக்கின்றனர். தற்போது காதலர் தினத்தில் தன்னுடைய கணவருக்கு காலில் மெட்டி அணிவித்து மகிழ்ந்த கன்னிகாவிற்கு சினேகன் காதலர் தின வாழ்த்துக்கள் கூறி தங்களுடைய ரசிகர்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்களை கூறியிருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு முன்பு இவர்கள் இருவருடைய வயதை காரணம் காட்டி அதிகமான நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். இப்ப வரைக்கும் சிலர் அதை செய்து வந்தாலும், இவர்களுடைய காதல் மட்டும் எப்போதும் குறைந்தபாடி இல்லை. எப்போதும் ஒற்றுமையாக இதுபோலவே இவர்கள் இருக்க வேண்டும் என்று இவர்களுடைய ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications