Exclusive: ஸ்ரீதரின் திடீர் மறைவு.. வள்ளியின் வேலன் சீரியலில் இனி ரத்தினவேலாக நடிக்க போவது இவர் தான்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வள்ளியின் வேலன். இந்த சீரியலில் நடித்து வந்த நடிகர் ஸ்ரீதர் கடந்த வாரத்தில் திடீரென காலமானார் அவருடைய கேரக்டரில் இனி யார் நடிக்கப் போகிறார் என்ற தகவல்கள் பிரத்யோகமாக ஒன் இந்தியா தமிழுக்கு கிடைத்திருக்கிறது.
வள்ளியின் வேலன் சீரியலில் கதாநாயகனாக சித்து நடிக்க அவருக்கு ஜோடியாக சித்துவின் ரியல் மனைவியான ஷ்ரேயா அஞ்சன் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியின் வீட்டில் வேலை பார்க்கும் நபராக சித்து நடித்துக் கொண்டிருக்கிறார் அதுபோல கதாநாயகியின் அப்பாவாக ரத்தினவேல் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் சாக்ஷி சிவா நடித்து வந்தார்.

முத்தழகு சீரியல் நடிகர்
சிவா திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேற அடுத்து அவருக்கு பதிலாக பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்ரீதர் நடிக்க தொடங்கினார். ஸ்ரீதர் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் முடிவுக்கு வந்த முத்தழகு சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார்.
புதிய நடிகர் இவர்தான்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீதர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணடைந்தார். இவரது மறைவு சின்னத்திரை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது வள்ளியின் வேலன் சீரியலில் ரத்தினவேலாக பல சீரியல்களில் நடித்து பிரபலமடைந்த கிரிஷ் என்பவர் நடிக்க இருப்பதாகவும் விரைவில் இவரது காட்சிகள் இடம்பெறும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நடிகர்கள் மறைவு
சின்னத்திரையில் ஏற்கனவே பல எதிர்பாராத இழப்புகள் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் நடிகர் ஸ்ரீதர் மறைந்த அதே நாளில் நடிகர் ரவிக்குமார் மரணம் அடைந்திருந்தார். இவர்கள் இருவரும் சில சீரியல்களில் ஒன்றாக நடித்திருக்கிறார்கள். அதிலும் முத்தழகு சீரியலில் இருவரும் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வருத்தமான செய்தி
அதுபோல அதற்கு முந்தைய வாரத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் பாரதிராஜா காலமானார். அதுபோல அதற்கு முந்தைய நாள் இரவில் நடிகரும் கராத்தே பிரபலமுமான ஹுசைனி காலமானார். இதுபோல பலருக்கும் பரிட்சயமான பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications