வானத்தைப்போல சீரியல் சூட்டிங் ஸ்பாட்டில் அதிர்ச்சி..ஹீரோ முகத்தில் காரி துப்பிய நடிகை.. காரணம்?
சென்னை: வானத்தைப்போல சீரியலில் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த நிகழ்வு தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சீரியலின் கதைக்காக தன் மீது நடிகை ஒருவரை எச்சில் துப்ப சொல்லி கதாநாயகனே கேட்டுக் கொண்ட நிகழ்வு பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
வானத்தைப்போல சீரியலின் கதாநாயகன் ஸ்ரீகுமார் ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த செயல் பலரையும் நெகிழ வைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் வானத்தைப்போல சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் சின்ராசு கேரக்டரில் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் நடிகை ஒருவர் சூட்டிங் ஸ்பாட்டில் ஸ்ரீகுமார் முகத்தில் காரி துப்பி இருக்கிறார். அதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அது குறித்த விளக்கத்தையும் ஸ்ரீ குமார் கொடுத்து இருக்கிறார்.

ஸ்ரீகுமார் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளி திரையிலும் தொடர்ச்சியாக நடித்துக் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்புதான் தனக்கு எல்லாமே என்று எண்ணிக் கொண்டிருக்கும் இவர் சூட்டிங் ஸ்பாட்டில் பல ரிஸ்க்கான வேலைகளை கூட தானாக முன்வந்து செய்து கொண்டிருக்கிறார். பல சண்டைக் காட்சிகளில் இவர் ஈடுபடும்போது எடுத்த வீடியோக்களை கூட அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருப்பார்.
சமீபத்தில் கூட ஒரு காட்சியில் ஸ்ரீகுமார் தண்ணீருக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போன்று இருக்கும், அதில் கூட டப்பிங் பேசும் போது எவ்வளவு கஷ்டப்பட்டார் என்கிற வகையில் தான் டப்பிங் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது சீரியலின் கதைப்படி மகாநதி சங்கர் தன்னுடைய முகத்தில் காரி துப்புவது போன்று ஒரு சீன் இருந்திருக்கிறது. இது இரண்டு நாட்களுக்கு முன்புதான் டிவியில் எபிசோடாக வெளியானது.
அந்தக் காட்சி படமாக்கப்பட்ட வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மகாநதி சங்கர் ஸ்ரீகுமார் முகத்தில் காரி துப்ப முடியாது என்று கூறிவிட்டாராம். ஒருவருடைய முகத்தில் என்னால் எச்சில் துப்ப முடியாது என்று அவர் கூறியதால் ஸ்ரீகுமார் அந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சாந்தினியிடம் பேசி இருக்கிறார். முதலில் அவரும் சம்மதிக்காமல் இருந்த நிலையில் கதையின் முக்கியத்துவத்தை சொல்லி நிஜத்தில் கதை உயிரோட்டமாக வரவேண்டும் என்று இவர் கூறியதால் சாந்தினி ஸ்ரீ குமார் முகத்தில் எச்சில் துப்பி இருக்கிறார்.
அதைப் பிறகு ஷூட்டிங்கில் மகாநதி சங்கர் எச்சில் துப்பியதுபோல மாற்றி இருக்கிறார்கள். ஆனால் சீரியல் அணியினர் கூட இந்த மாதிரி கதை வைக்க வேண்டாம். இதற்கு பதிலாக அந்த இடத்தில் சோப்பு நுரை ஏதாவது பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னதற்கும் ஸ்ரீகுமார் வேண்டாம் கதை எனக்கு சரியாக வர வேண்டும் என்றும் கூறியிருந்தாராம்.
எனக்கு நடிப்புதான் எல்லாமே நடிப்புக்காக நான் எவ்வளவு கஷ்டங்களையும் தாங்குவேன் என்று சொல்லி, 16 வயதினிலே திரைப்படத்தில் கமல்ஹாசன் முகத்தில் ஸ்ரீதேவி எச்சில் துப்புவது போன்று ஒரு காட்சி இருக்குமாம். அதற்கு முதலில் ஸ்ரீதேவி முடியாது என்று சொன்னதால், இன்னொருவரை வைத்து முகத்தில் துப்ப வைத்து அந்த காட்சியை கமல்ஹாசன் நடித்து முடித்து இருந்தாராம். அந்த அளவிற்கு இப்போது வானத்தைப்போல சீரியலிலும் ஸ்ரீகுமார் முயற்சி செய்து இருக்கிறார்.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications