ஆடு பகை குட்டி உறவு.. போட்டி போட்டு போஸ்ட் போட்ட வனிதாவின் சகோதரிகள்.. நெகிழ்ந்து போன விஜய் ஸ்ரீஹரி
சென்னை: நடிகை வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி மாம்போ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து வனிதாவின் சகோதரிகள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போஸ்ட் போட்டு இருக்கின்றனர். அதை பகிர்ந்த விஜய் ஸ்ரீஹரி நெகிழ்ந்து நன்றி தெரிவித்திருக்கிறார்.
பழம்பெரும் நடிகரான விஜயகுமாருக்கு இரண்டு மனைவிகள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான். அதில் இரண்டாவது மனைவியான மஞ்சுளாவின் மூத்த மகளான நடிகை வனிதா அவருடைய குடும்பத்தோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். ஆனாலும் வனிதா 2000 ஆண்டில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்திருந்தார். அவருக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற ஒரு மகனும் இருக்கிறார்.

ஆனால் ஆகாஷோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வனிதா அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். விஜய் ஸ்ரீஹரி தன்னுடைய தந்தையோடு தன்னுடைய தாத்தா விஜயகுமாரின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் விஜய் ஸ்ரீஹரி பிரபு சாலமன் இயக்கும் "மாம்போ" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இயற்கை அழகோடு வாழ்வியலை படம் பிடித்து காட்டும் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் போஸ்ட் வெளியானதை தொடர்ந்து விஜய் ஸ்ரீஹரிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த போஸ்டரை பகிர்ந்த நடிகை வனிதா தன்னுடைய மூத்த மகன் சினிமாவில் அறிமுகமாவது தனக்கு மிகவும் சந்தோஷம் என்றும் ,தான் கடவுளிடம் வேண்டியது இப்போது நிறைவேறி இருக்கிறது.. எனக்கு இதை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீஹரிக்கு அவருடைய சித்தி மற்றும் பெரியமாக்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். நடிகை வனிதாவின் உடன் பிறந்த சகோதரிகளான நடிகை ஸ்ரீதேவி மற்றும் பிரீத்தா இருவரும் மஞ்சுளா மற்றும் விஜயகுமாருக்கு பிறந்தவர்கள் இவர்கள் விஜய் ஸ்ரீ ஹரியை வாழ்த்தியிருக்கின்றனர். அதுபோல விஜயகுமாரின் மூத்த மனைவியின் மகள்களான அனிதா மற்றும் கவிதாவும் விஜய் ஸ்ரீஹரியை வாழ்த்தி அவர் இன்னும் அதிகமாக சாதிக்க வேண்டும் என்று பதிவு வெளியிட்டு இருக்கின்றனர்.

அந்த பதிவுகளை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த விஜய் ஸ்ரீஹரி எல்லோருடைய அன்பை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று நெகிழ்ச்சியோடு நன்றி கூறி இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications