தமிழா தமிழா நிகழ்ச்சி பார்த்தீங்களா? சாந்தி மாஸ்டருக்கு பக்கத்தில் இருந்த நடிகையை கவனித்தீங்களா?
சென்னை: தமிழா தமிழா நிகழ்ச்சியில் நடிகை வனித விஜயகுமார் கலந்து கொண்டார். இதனால் நிகழ்ச்சி களைகட்டும் என ரசிகர்கள் கமென்ட் போட்டு வருகிறார்கள்.
விஜய் டிவியில் நீயா நானா எனும் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் விவாதிக்கப்படுகிறது. இதை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இதுவரை பல பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைகாட்சியில் தமிழா தமிழா எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிகழ்ச்சியை கரு பழனியப்பன் நடத்தி வந்தார். இந்த நிகழ்ச்சியிலும் சமூக பிரச்சினைகள் அலசப்பட்டன.
இந்த நிலையில் தமிழா தமிழா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பணியிலிருந்து கரு பழனியப்பன் திடீரென விலகிவிட்டார். இதுகுறித்து முறையான காரணங்கள் தெரியவில்லை. இதனால் அடுத்த நபரை இந்த நிகழ்ச்சியை நடத்த நியமிக்கும் வரை இந்த நிகழ்ச்சி நடத்தப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை பத்திரிகையாளர் ஆவுடையப்பன் தொகுத்து வழங்குகிறார். இதில் முதல் நிகழ்ச்சியான இன்று பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது வெர்சஸ் போதுமானதாக இல்லை எனஅற தலைப்பில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கீதா ஜீவன், எம்எல்ஏ விஜயதாரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் பெண்களுக்கு சுதந்திரம் போதுமானதாக இல்லை என்ற தலைப்பில் பேசினர்.

அது போல் எதிரணியில் டான்ஸ் மாஸ்டர் சாந்தி, கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சாந்தி மாஸ்டருக்கு பக்கத்தில் வனிதா விஜயகுமார் உட்கார்ந்திருக்கிறார். இவர் பெண்களுக்கான சுதந்திரம் போதுமானதாக இருக்கிறது என பேச வந்திருக்கிறார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் நிச்சயம் ஷோ களைகட்டியிருக்கும்.
வனிதா விஜயகுமார் சில படங்களுக்கு பிறகு வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் கமல்ஹாசனின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் பிரபலமடைந்தார். அதைத் தொடர்ந்து குக் வித் கோமாளி உள்பட பல்வேறு விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அந்த வகையில் இந்த தமிழா தமிழா நிகழ்ச்சியிலும் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டிருப்பது வைரலாகி வருகிறது. நிச்சயம் இந்த நிகழ்வு சரவெடியாக இருந்தது. என்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இன்று பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகியிருக்கும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications