தேவயானி தான் சிறந்த அம்மாவா? அப்போ நான்? அப்பா பெயரை கெடுக்க எடுத்த படம்! ஆதங்கப்பட்ட வனிதா விஜயகுமார்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதை எழுதி, நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கான ப்ரொமோஷனில் வனிதா விஜயகுமார் கலந்து கொண்டிருந்தார். அப்போது தன்னை பற்றிய கமாண்டுகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தார். அதில் நடிகை தேவயானி தான் சிறந்த அம்மா என்று ஒரு கமெண்ட் வந்திருந்தது. அதை படித்ததும் அதற்கு வனிதா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கும் வனிதா விஜயகுமாருக்கு அறிமுகமே தேவை இல்லை. சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் வனிதா சில வருடங்களாக சின்னத்திரை வெள்ளித்திரை என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகியாக நடிகர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

வனிதா பேட்டி
அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது திருமணம் செய்துவிட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் அவருடைய குடும்ப வாழ்க்கையில் அவருக்கு அடுத்தடுத்து ஏமாற்றம் நடந்தது. இப்போது குடும்ப வாழ்க்கையை விட்டு விலகி சிங்கிளாக இருக்கிறார். அதிலும் தன்னுடைய மகள் ஜோவிகா தயாரித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படத்தில் கதை எழுதி அதை இயக்கி நடிக்கவும் செய்திருக்கிறார். 40 வயதில் ஒரு பெண் கர்ப்பமாகும் போது நடக்கும் சம்பவங்கள் பற்றி இந்த படம் இருக்கிறது.
அதோடு இந்த திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷனில் வனிதா விஜயகுமார் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அதேபோல பேட்டிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார். அப்படி ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது ரசிகர்களின் கமாண்டுகளுக்கு பதில் கொடுத்திருந்தார். அதில் ஒரு நெட்டிசன், "தேவயானி தான் சிறந்த அம்மா. அவருடைய மகளை அழகாக பாட வைத்திருக்கிறார். ஆனால் நீங்கள் சிறந்த அம்மா இல்லை" என்று கமெண்ட் கொடுத்திருக்கிறார்.
அப்பா பற்றி கோபப்பட்ட வனிதா
அதற்கு படித்துப் பார்த்ததும் கோபப்பட்ட வனிதா இந்த கமெண்ட்டை தேவயானியே பார்த்தால் கூட காரி துப்புவா, சிரித்து விடுவா. இப்படியா கம்பேர் பண்ணுவீங்கன்னு சொல்லுவா. தேவயானி அவளுடைய குழந்தைக்கு பிடித்த மாதிரி வளர்த்திருக்கா. நான் என் குழந்தையை எனக்கு பிடித்த மாதிரி வளர்க்கிறேன். பொதுவா ஒரு குடும்பத்தில் பிறந்த பிள்ளைகளையே கம்பேர் பண்ணக்கூடாது அது அவர்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்குமே பிரச்சனைதான்.
அதேபோல நீங்கள் இப்படி கம்பேர் பண்ணுவதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அதேபோல இன்னொரு கமெண்டில் நீங்க விஜயகுமாரின் மானத்தை வாங்கி அவரை பழி வாங்குவதற்காக தானே இப்படி ஒரு படத்தை எடுத்து இருக்கீங்க? இந்த மாதிரி படத்தில் நீங்க நடிப்பதால் உங்க அப்பாவுக்கு தான் கேவலம் என்று சொல்லப்பட்டிருக்கிறது, அதை அதற்கு கோபப்பட்டு அந்த பேப்பரையே தூக்கி போட்டு, இப்படிப்பட்ட கமாண்டுகளுக்கு எல்லாம் நான் பதில் கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை.
வனிதாவின் பதிலடி
தெளிவாக பேசக் கூடியவர்களிடம் நாம் பேசலாம் இப்படி வேணும்னே இல்லாத பிரச்சனைகளை பற்றி தேவை இல்லாமல் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு நாம டைம் வேஸ்ட் பண்ண வேண்டிய அவசியமே இல்லை என்று கோபப்பட்டு இருக்கிறார். அதுபோல இன்னொரு நெட்டிசன் பேசாம உங்க மகள் ஜோவிகாவிற்கு கல்யாணம் பண்ணி கொடுங்க. இந்த வயசில் படம் எடுக்கிறேன்னு தேவை இல்லாம பணத்தை செலவழிச்சிட்டு இருக்குறாங்க என்று சொல்லி இருக்கிறார்.
அதற்கு வனிதா நான் என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும் என்றால் கொடுக்கிறேன். ஆனா இப்போ எனக்கு என் பொண்ணுக்கு 300 பவுன் நகை, வீடு, கார் எல்லாம் நீங்க வாங்கி கொடுக்குறீங்களா? அப்போ நான் கல்யாணம் பண்ணி கொடுக்கிறேன் என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இப்படியாக அந்த வீடியோவில் தன்னை பற்றி கேட்ட பல கேள்விகளுக்கு வனிதா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications