Vanitha: யாருக்கு திமிரு? தேவயானி பொண்ணும், என் பொண்ணும் ஒன்னா? நடந்தது தெரியுமா? வனிதா ஆதங்கம்
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடிக்கும் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்திற்காக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திற்கு அவரே கதை எழுதி, இயக்கி நடித்து இருக்கிறார். அதேபோல அவருடைய மகள் ஜோவிகா இந்த படத்தை தயாரித்திருக்கிறார். தன்னுடைய சொந்த பணத்தில் முதல் முறையாக தயாரித்திருக்கும் படத்திற்காக அதிகமாக மெனக்கெடல் செய்து வரும் ஜோவிகா தன்னுடைய அம்மாவோடு ஒரு பேட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது நடிகை தேவயானியின் மகளையும் தன்னுடைய மகளையும் கம்பேர் பண்ணி சிலர் பேசுவது குறித்து வனிதா தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.
வனிதா விஜயகுமார் பேட்டி
வனிதா விஜயகுமாருக்கு அறிமுகமே தேவை இல்லை. அடிக்கடி சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். 90ஸ் காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் சில வருட இடைவெளிக்கு பிறகு இப்போது கதாநாயகியாக நடிக்க தொடங்கி இருக்கிறார். அந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. வனிதா விஜயகுமார் தன்னுடைய குடும்ப பிரச்சனைக்கு பிறகு குக் வித் கோமாளி, பிக் பாஸ் மற்றும் சீரியல்கள் மூலமாகவும் சின்னத்திரையில் பிரபலமாகி விட்டார். அதுபோல சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த திரைப்படங்கள் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுக்காத போதும் தன்னுடைய மகள் தயாரிப்பிலேயே தான் கதாநாயகியாக நடிக்க தொடங்கி விட்டார்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் டீம்
மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக பிரபலங்களையும் வனிதா சந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் தேவயானி பற்றி வந்த செய்திகளுக்கு பதில் கொடுத்து இருக்கிறார். அதாவது தன்னுடைய படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட போது தேவயானி நின்று கொண்டிருக்கும் போது வனிதா உட்கார்ந்திருந்தாராம். அப்போது சிலர் தேவயானியின் முன்பு திமிராக அமர்ந்திருந்த வனிதா என்று பேசி இருக்கிறார்கள். இது குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வனிதா வெளிப்படுத்தி இருக்கிறார்.
தேவயானி மகளுடன் கம்பேர்
நான் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் தான் தேவயானியும் அறிமுகமானாங்க. நானும் தேவயானியும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம். தேவயானியும் நானும் நீ வா போ என்று சொல்லும் அளவில் தான் எங்களுடைய பழக்கம் இருக்கிறது. சர்ச்சை உருவான ப்ரொமோஷனில் கூட தேவயானியை வந்து உட்கார சொன்னேன் அவங்க தான் இல்ல நீ தான் இந்த படத்துக்கு முக்கியம் அதனால் நீ உக்காரு நான் இங்கே நின்று கொண்டு இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தாங்க.
வனிதா ஆதங்கம்
நான் அப்பவே சொன்னேன், நீ அங்க நிற்கும்போது நான் உட்கார்ந்திருக்கிறேன் என்று எவனாவது திட்ட போறான்னு சொன்னேன். அதே போல கடைசியில் திட்டி விட்டாங்க. எதுக்காக இப்படி கம்பேர் பண்றீங்கன்னு தெரியல. அதுபோல தேவயானியின் மகளோடு என்னுடைய மகளை கம்பேர் பண்றாங்க. என்ன நடந்தது என்று தெரியாம பேசிகிட்டு இருக்கிறாங்க. பொதுவா நம்முடைய குழந்தைகளாக இருந்தாலும் ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு கம்பேர் பண்ணக்கூடாது ஆனா இவங்க இப்படி அடுத்த நடிகையின் மகளோடு என்னுடைய மகளை கம்பேர் பண்ணுவது எனக்கு வருத்தமா இருக்கு என்று வனிதா தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications