கார்த்திக் ராஜாவை இழுக்காதீங்க! இளையராஜா வீட்டு மருமகள் சர்ச்சையில் வனிதா அதிரடி
சென்னை: இளையராஜா வீட்டு மருமகளாகியிருப்பேன் என்கிற விவகாரத்தில் தயவு செய்து கார்த்திக் ராஜாவை இழுக்காதீர்கள் என வனிதா விஜயகுமார் கேட்டுக் கொண்டார். மேலும் நோட்டீஸ் விவகாரத்தை சட்டபடி எதிர்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்களுக்கெல்லாம் ஒன்றை தெளிவுப்படுத்துகிறேன். கார்த்திக் ராஜா எனது சிறந்த நண்பர். அவருடைய மனைவியும் எனக்கு நல்ல தோழி. இளையராஜா வீட்டு மருமகளாகியிருப்பேன் என நான் கூறிய விவகாரத்தில் கார்த்திக் ராஜாவை இழுக்காதீங்க.
இளையராஜா அப்பா எனக்கு கடவுள் போன்றவர். ஆமாம் நான் அவருடைய சொந்த மகள் மாதிரி. அப்படித்தான் என்னை அந்த குடும்பத்தினர் நடத்தினர். இளையராஜா நோட்டீஸ் விவகாரத்தை நான் சட்டரீதியாக சந்திப்பேன் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
வனிதா விஜயகுமார் இயக்கத்தில் ஜோவிகா தயாரிப்பில் மிஸ்ஸஸ் அன்ட் மிஸ்டர் என்ற படம் கடந்த 11 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் "மைக்கேல் மதன காமராஜன்" என்ற படத்தில் இடம் பெற்ற "சிவராத்திரி தூக்கமேது..." என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.
இது இளையராஜா இசையமைத்த பாடல் என்பதால் நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்து கண்ணீர் விட்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "இந்த படம் எடுத்த போது ராபர்ட்- கிரண் டூயட்டுக்கு அந்த பாட்டு தேவைப்படுகிறது என்பதற்காக இளையராஜா அங்கிளை சந்தித்தேன். நான் இந்த பாடலை பயன்படுத்திக் கொள்கிறேன் என கேட்டேன், அதற்கு அவர் 'யூஸ் பண்ணிக்கோங்க' என வாய்மொழியாக தெரிவித்தார்.
இதை நம்பித்தான் நாங்கள் இந்த பாடலை பயன்படுத்தினோம். ஆனால் இப்போது எங்களிடம் நஷ்ட ஈடு கேட்கிறார். இது எந்த விதத்தில் நியாயம், நாங்களே மிகவும் சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம். நான் சிறுவயதில் இளையராஜா அங்கிள் வீட்டில் வளர்ந்த பெண்.
ஜீவா ஆண்ட்டி (இளையராஜாவின் மனைவி) என்னை மகாலட்சுமி என்றுதான் அழைத்தார். ஒரு தட்டு நிறைய நகையை என்னிடம் கொடுத்து சாமி ரூமில் வை என்பார், அதை கொண்டு போய் பீரோவில் வை என்பார். அந்த அளவுக்கு நான் உரிமையாக இருந்திருக்கேன். அந்த வீட்டிலேயே நான் விளையாடி இருக்கிறேன், சாப்பிட்டிருக்கிறேன்.
அப்படிப்பட்ட எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பறீங்களே, நான் உங்களிடம் கேட்காமல் இருந்தால் கூட அனுப்பலாம். நான் கேட்டுத்தானே பயன்படுத்தினேன். நான் இளையராஜா வீட்டிற்கு மருமகளாக போக வேண்டியவள், இதற்கு மேல் பேசினால் எல்லா உண்மைகளையும் பேச வேண்டிருக்கும். அது சரியாக இருக்காது" என வனிதா உச்சபட்ச கோபத்தில் பேசியிருக்கிறார்.
இளையராஜா வீட்டுக்கு மருமகளாகியிருப்பேன் என வனிதா சொன்னதிலிருந்து கார்த்திக் ராஜாவுக்கு வனிதாவை பேசியிருக்கலாம். கார்த்திக், காதலிப்பதாக கூறி வனிதாவை ஏமாற்றியிருக்கலாம் என்றெல்லாம் நெட்டிசன்கள் பேசி வந்தனர். இதையடுத்துதான் கார்த்திக் ராஜாவை இழுக்க வேண்டாம் என வனிதா கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications