ஒரு பெண்ணுக்கு இதை விட வேறென்ன வேணும்.. கோவிலில் கணவருடன் மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்த வரலட்சுமி
சென்னை: நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய அம்மா சாயா மற்றும் தன்னுடைய கணவர் நிக்கோலாயுடன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதோடு தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்த மகிழ்ச்சி செய்தியையும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து இருக்கிறார். திருப்பதி கோவிலில் வரலட்சுமியின் கணவர் செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நடிகை வரலட்சுமி சரத்குமாரின் மகளாக இருந்தாலும் அவருக்கு பெரிதாக தமிழில் திரைப்படங்கள் கிடைக்கவில்லை. ஒரு சில திரைப்படங்கள் கிடைத்து இருந்தாலும் அந்த திரைப்படங்களில் எவ்வளவு கடினமான கேரக்டராக இருந்தாலும் சரி அதில் நான் கெத்தாக நடிப்பேன் என்று மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். "போடா போடி" திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் வரலட்சுமி அறிமுகமானார்.

வரலட்சுமி நடித்த திரைப்படம்
போடா போடி திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு தமிழை விடவும் மற்ற மொழிகளில் அதிகமான திரைப்பட வாய்ப்புகள் வருகிறது. அதனால் அந்த திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த வருடம் நிக்கோலாய் என்ற தொழில் அதிபருடன் திருமணம் நடந்தது.
நடிகை வரலட்சுமியின் கணவர்
வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியான போது இணையத்தில் அதிகமாக பேசப்பட்டது. நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 15 வயதிற்கு மேலே உள்ள ஒரு மகள் இருக்கிறார். முதல் மனைவியோடு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்திருந்த நிக்கோலாய் வரலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நிக்கோலாய் தன்னுடைய பெயருக்கு பெயரோடு வரலட்சுமி சரத்குமார் என்ற பெயரையும் இணைத்திருக்கிறார்.
கோவிலில் வரலட்சுமி குடும்பம்
பொதுவாக பெண்கள் தான் கணவரின் பெயரை பெயருக்கு பின்னாடி சேர்த்துக் கொள்வார்கள் ஆனால் நிகோலாய் தன்னுடைய மனைவிதான் எனக்கு எல்லாமே என்று அவருடைய பெயரை சேர்த்து இருக்கிறார். அதுபோல வரலட்சுமி தொடர்ந்து சினிமாவில் நடிப்பார், அவருடைய எந்த ஆசைக்கும் நான் தடையாக இருக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார். இந்த நிலையில் நேற்று திருப்பதி கோவிலில் வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் குடும்பத்தோடு திருப்பதி ஸ்ரீ ஹாளகஸ்தி சிவன் கோவிலில் ராகு கேது பூஜை செய்து வழிபட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கணவரின் பெருந்தன்மை
திருப்பதி கோவிலில் வரலட்சுமி நடந்து வரும் போது அங்கிருந்த பக்தர்கள் வரலட்சுமியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள சொல்லி இருந்தார். அதுபோல வரலட்சுமி வரும்போது அவரை கையை பிடித்துக் கொண்டு பத்திரமாக அழைத்து வந்தார். வரலட்சுமி அம்மா சாயாவும் இவர்களோடு அங்கு வரும்போது வரலட்சுமி மற்றும் நிக்கோலா இருவரும் சாயாவையும் கவனமாக அழைத்து வந்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நிக்கோலாய் தன்னுடைய மனைவிக்காக இவ்வளவு விட்டுக்கொடுத்து இருக்கிறார் என்று பாராட்டி வருகிறார்கள்.
ரசிகர்களின் வாழ்த்துக்கள்
பல பிரபலங்களின் கணவர்கள் இதுபோல இருப்பதால்தான் அவர்களால் தொடர்ந்து வாழ்க்கையில் ஜெயிக்க முடிகிறது. ஒரு சிலர் இதுபோன்று மனைவிக்கு கிடைக்கும் அங்கீகாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் கருத்து வேறுபாடு ஆகும் போது தான் அங்கு பிரச்சனை ஏற்படுகிறது என்று பலரும் நிக்கோலாயை பாராட்டி வருகிறார்கள். அதுபோல தன்னுடைய திருமண நாளை முன்னிட்டு தான் இந்த கோவிலில் வழிபாடு செய்ய வந்ததாக வரலட்சுமி கூறியிருக்கிறார். அவருக்கு திருமண நாள் வாழ்த்துக்களையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications