வாரிசு நடிகர் சூர்யாவின் பபுள்காம் வீடியோ.. அப்பா மீதான வன்மம் மகன் மீதா? ஆரம்பமே ஆக்ஷன்: பிரபலம்
சென்னை: படவிழாவில் பேசிய விஜய் சேதுபதியின் மகன் சூர்யா; 'அப்பா வேற நான் வேற' என்று பேசியிருந்தார். இப்போது டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பபுள்கம்மை மென்றபடி சூர்யா பேசியிருப்பது, ஆட்டிடியூட் காட்டுவதாக உள்ளதாக கூறப்படுகிறது, இதை தலைக்கனத்தின் உச்சம் என்று நெட்டிசன்கள் டிரோல் செய்து வருகிறார்கள்.. இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.. முதன்முதலில் நடிக்க வந்திருப்பதால், சில விஷயங்களை தெரிந்து செய்திருக்கலாம், தெரியாமல் செய்திருக்கலாம். எனவே, இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுவதே நல்லது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
Media Circle என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, இந்த விஷயத்தை 2 விதமாக அணுகலாம்.. ஒன்று விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, வயது மிகவும் குறைவு.. மெச்சூரிட்டி அந்த அளவுக்குதான் இருக்கும்..

அப்பா வேற, நான் வேற என்று சூர்யா அன்று சொன்னதிலுள்ள தன்னம்பிக்கையை பாராட்டலாம்.. அதற்கு பிறகு மீண்டும் நடந்துள்ள இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், பபுள்காம் மென்றுகொண்டே பேசுவது வீடியோக்களில் உள்ளன.. என்னதான் பிரபல நடிகரின் மகன் என்றாலும், தன்னுடைய முதல் படம் என்பதால், பத்திரிகையாளர் சந்திப்பு என்பதில் ஒழுக்கத்தை முதலில் கடைப்பிடிக்க வேண்டும்
அப்பாவுக்கு செல்லம் என்பதெல்லாம் வீட்டில் வைத்து கொள்ள வேண்டுமே தவிர, பொதுவெளியில் நடந்து கொள்ளக்கூடாது . இதைத்தான் சோஷியல் மீடியாவில் கமெண்ட்களாக பதிவிட்டு வருகிறார்கள்.
தாக்கி பேச வேண்டாம்
முதன்முதலில் நடிக்க வந்திருப்பதால், சில விஷயங்களை தெரிந்து செய்திருக்கலாம், தெரியாமல் செய்திருக்கலாம். எனவே, இந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடுவதே நல்லது என்று நான் நினைக்கிறேன்... சிறிய வயது என்பதால் அவரை யாரும் பெரிதாகி தாக்கி பேச வேண்டிய அவசியமும் இல்லை. விஜய் சேதுபதி மீதான வன்மத்தை, அவரது மகன் மீது காட்டப்படுவதாக சொல்கிறார்கள். அது தவறான கருத்து..
ஏனென்றால், விஜய் சேதுபதி மேடைகளில் பேசுவதை எடுத்து கொண்டால், பக்குவம் நிறைந்திருக்கும்.. தன்னுடைய அனுபவத்தை பேசுகிறார்.. நகைச்சுவையாகவும் பேசுகிறார்.. நாகரீகமாகவும் பேசுவார்.. எனவே விஜய் சேதுபதி மீது வன்மம் எதுவுமே கிடையாது..
ஆனால், மகனுக்கு விஜய் சேதுபதி சில விஷயத்தை சொல்லி தந்திருக்க வேண்டும்.. சினிமாவுக்குள் நுழைவதால், பலவிதமான சிக்கல்களை சமாளிப்பது எப்படி? நாவடக்கத்துடன் இருப்பது, பொதுவெளியில் எப்படி நடந்துகொள்வது போன்றவற்றையெல்லாம் சொல்லித் தந்திருக்க வேண்டும்,.
மகாராஜா - செய்தியாளர் சந்திப்பு
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போதே, விஜய் சேதுபதி இருந்திருந்தால் நிச்சயம் தன்னுடைய மகனை கண்டித்திருப்பார். ஏனென்றால் மகாராஜா பட பத்திரிகையாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு, அப்படத்தின் புதிய டைரக்டர் பேச முடியாமல் தடுமாறியபோது, விஜய் சேதுபதிதான் அதற்கெல்லாம் பதில் சொன்னார். மகாராஜா டைரக்டர் திறமையானவர் என்றாலும், பத்திரிகையாளர் சந்திப்புகளை அதிகம் சந்தித்ததில்லை என்பதால் திணறினார். இதற்கு காரணம் அனுபவமின்மைதான்
அதுபோல விஜய் சேதுபதி மகனுக்கும் அனுபவமில்லை.. இதுபோக செல்லமாக வளர்ந்திருப்பதாலும் இப்படி நடந்திருக்கலாம்.. தனக்கு அனுபவம் கிடைத்தால், நிச்சயம் சூர்யா தன்னை மாற்றிக் கொள்வார். இளைய தளபதி விஜய்யின் முதல் படம் நாளைய தீர்ப்பு படத்துக்கும் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே , அனுபவம் பக்குவம் நன்றாக தெரியும்..
டிரோல் மெட்டீரியல்
அதேபோல, சூர்யா சேதுபதியின் முதல் படம் விரைவில் வரப்போகிறது.. வயதுக்கேற்றபடி காதல் கதை, நண்பர்களுடன் சேர்ந்து பொழுதுபோக்கு கதையம்சம் கொண்ட படங்களாக தேர்ந்தெடுத்திருக்கலாம். அது மக்களிடமும் எளிதில் சேரும். ஆனால், எடுத்ததுமே ஆக்ஷன் படங்களில் நடிப்பது பலவீனமானதாகவே தெரிகிறது, மக்கள் இதனை எப்படி எடுத்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.
ஆக்ஷன் படத்தை தோளில் சுமக்கக்கூடிய பக்குவம் சூர்யா சேதுபதிக்கு இருக்கிறதா தெரியவில்லை. மக்கள் ஏற்றுக் கொண்டால், இந்த விமர்சனம் கடந்து சென்றுவிடும், ஒருவேளை ஆக்ஷன் ஹீரோவாக ஏற்றுக் கொள்ளாவிட்டால், டிரோல் மெட்டீரியலாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications