அந்த சீரியலில் ரம்யா கிருஷ்ணன் செய்ததை மறக்க முடியாது! இப்படியும் சிலர் இருக்கிறார்கள்! ஊர்வம்பு லட்சுமி ஓபன்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களுக்கு மாறனின் அத்தையாக வரும் நடிகை ஊர்வம்பு லட்சுமி மிகவும் பரிச்சயமான முகம். சின்ன சின்ன ரியாக்ஷன்களாலேயே காட்சியை உயிரோட்டமாக்கி விடும் தனி திறமையால் அவர் இப்போது சீரியல் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஊர் வம்பு லட்சுமி பேட்டி
அந்த பேட்டியில் அவர் தன்னுடைய நடிப்பு பற்றியும், ஒரு காட்சியில் கூட எப்படி நம்மை பார்ப்பவர்களுக்கு தெரிய வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் மிகவும் நேர்மையாக பகிர்ந்து கொண்டார். "ஒரு காட்சியில் ஹீரோ பின்னாடி நின்னாலும் சரி, கூட்டத்தில் நின்னாலும் சரி, நான் அந்த காட்சியில் இருக்கிறேன் என்பது தெரிந்தாக வேண்டும்.
ஆனால் அது மற்றவரை டம்மி பண்ணுவது போல இருக்கக் கூடாது. அந்த சூழ்நிலைக்கு உயிர் கொடுப்பது போல இருக்கணும் என்று ஸ்கிரிப்ட் படிக்கும் போதே நான் முடிவு செய்து விடுவேன்" என்று அவர் கூறிய விதம், ஒரு துணை கதாபாத்திரம் கூட எவ்வளவு கவனத்துடன் உருவாகிறது என்பதை வெளிப்படுத்தியது.
அதே பேட்டியில் அவர் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணன் உடன் ஒரு சீரியலில் நடித்தபோது, ஒரு முக்கியமான காட்சியில் அவருக்கு பின்னால் நின்று ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார். அந்த காட்சி ஒளிபரப்பான பிறகு ரம்யா கிருஷ்ணனின் தங்கச்சி வந்து "அக்காவை விட உங்களுடைய ரியாக்ஷனை தான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று சொன்னாராம்.
அதை கேட்டதும் "மேடம் என்ன சொன்னாங்க?" என்று பதட்டமாக கேட்டபோது, ரம்யா கிருஷ்ணனும் உங்களுடைய நடிப்பை ரசித்தாங்க என்று சொன்னாராம். பெரிய நடிகைகள் பொதுவாக இப்படிச் சொல்ல மாட்டார்கள், ஆனால் அந்த நாளில் அவர் கொடுத்த அந்த ஆதரவு தான் இன்று வரை நான் ஒவ்வொரு சீரியலிலும் இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று நினைக்க வைத்துக் கொண்டிருக்கிறது என்று ஊர்வம்பு லட்சுமி மிகவும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக தொலைக்காட்சி துறையில் பயணம் செய்து வரும் ஊர்வம்பு லட்சுமி, ஆரம்ப காலங்களில் கூட்டத்தில் நிற்கும் கதாபாத்திரங்களிலிருந்து தனது பயணத்தை தொடங்கி இன்று நினைவில் நிற்கும் துணை வேடங்களின் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். குடும்ப கதைகளை மையமாகக் கொண்ட பல சீரியலில் அம்மா, அத்தை, சித்தி போன்ற கதாபாத்திரங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஜீ தமிழ் நீதானே பொன்வசந்தம் சீரியல் கதாநாயகியா இது? ஆளே அடையாளம் தெரியலையே! கணவர் இந்த பிரபலம்!
அவருடைய முகபாவனைகளும், பேசும் விதமும், காட்சிக்கேற்ற உடல் மொழியும் தான் அவரை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்துகிறது என்று இயக்குநர்களே பல முறை கூறியிருக்கிறார்கள். அவர் நடித்த தொலைக்காட்சி தொடர்களில் வீரா மட்டுமல்லாமல், பல குடும்பத் சீரியல்களில் முக்கியமான துணை வேடங்களில் நடித்துள்ளார்; குறிப்பாக மிடில் கிளாஸ் குடும்ப பின்னணியிலான கதைகளில் அவர் நடித்த பாத்திரங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவை. ஒவ்வொரு தொடரிலும் குறைந்த நேரமே வந்தாலும் அந்த காட்சியை நிஜமாக உணர வைத்துவிடும் திறமை தான் அவருடைய பலமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் இதே ஜீ தமிழில் சில வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் இவர் வில்லியாக நடித்திருந்தார். அதேபோல சன் டிவியில் பல சீரியல்களில் இவர் வில்லியாக நடித்திருந்தார். இப்போது இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவது ரசிகர்களுக்கு பேவரைட் ஆக மாறி இருக்கிறது.
இன்று சீரியல் ரசிகர்கள் "அந்த அத்தை வர்ற சீன் ரொம்ப நிஜமா இருக்கும்" என்று சொல்வதற்குக் காரணம், அவர் காட்டும் அந்த இயல்பான ரியாக்ஷன்கள்தான். ஹீரோயின் அல்ல, வில்லி அல்ல, ஆனால் காட்சிக்கு உயிர் கொடுக்கும் ஒரு நடிகை என்ற இடத்தை அவர் பெற்றிருக்கிறார். ஒரு காட்சியில் கூட தெரிந்தாக வேண்டும் என்ற அவசரத்தால் அல்ல, அந்த கதையின் சூழ்நிலையை உண்மையாக்க வேண்டும் என்ற எண்ணத்தால்தான் அவர் நடிப்பதாக கூறியிருப்பது, அவரது தொழில்முறை அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
பெரிய நடிகையிடம் இருந்து கிடைத்த ஒரு சிறிய பாராட்டு தான் இன்று வரை தன்னுடைய பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்கிறது என்று அவர் கூறியிருப்பது, இந்த துறையில் உழைக்கும் பல துணை நடிகர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாகவே பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications