ஜீ தமிழ் நீதானே பொன்வசந்தம் சீரியல் கதாநாயகியா இது? ஆளே அடையாளம் தெரியலையே! கணவர் இந்த பிரபலம்!
சென்னை : ஜீ தமிழில் ஒளிபரப்பான நீதானே என் பொன்வசந்தம் சீரியல் மூலமாக பலருடைய மனதை கவர்ந்த தர்ஷனா அசோகன் (serial actress Darshana Ashokan) திருமணத்திற்கு பிறகு ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். அவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையோடு எடுத்த புகைப்படங்களை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பொதுவாக சிலர் தான் படித்ததற்கு சம்மந்தமே இல்லாத வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்கள், அதுபோல ஒருவர்தான் நடிகை தர்ஷனாவும். தர்ஷனாவின் குடும்பத்தில் எல்லோருமே டாக்டர் அதனால் அவருடைய சின்ன வயதிலிருந்தே இவரை எப்படியாவது டாக்டர் ஆக்க வேண்டும் என்று குடும்பத்தினர் முயற்சி செய்து இருந்திருக்கிறார்கள்.

ஜீ தமிழ் சீரியல் நடிகை
ஆனால் தர்ஷனாவுக்கு நாம எப்படியாவது கேமரா முன்பு வரவேண்டும் என்பதுதான் ஆசையாம். ஆனால் வீட்டில் பெற்றோர் நீ டாக்டருக்கு படித்துவிட்டு அப்புறம் உன்னுடைய ஃபேஷனை நோக்கி போய்க்கோ என்று சொல்லி இருக்கிறார்கள். காரணம் சினிமாவை எப்போதும் நம்ப முடியாது, சினிமா கை கொடுக்கவில்லை என்றால் படிப்பு கைகொடுக்கும் என்று நினைத்து இருப்பார்கள் போல.
கனவு நிறைவேறியது
அதனால் தர்ஷனாவும் பெற்றோரின் ஆசைக்காக டாக்டர் படிப்பை முடித்து விட்டார். அவர் பல் டாக்டர் படிப்பை முடித்த கையோடு மாடலின் மூலமாக சின்னத்திரையிலும் அறிமுகமானார். அதிலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான நீதானே என் பொன்வசந்தம் சீரியல்தான் இவருக்கு முதல் சீரியலாக கிடைத்தது.
அந்த சீரியலில் கதாநாயகன் ஹீரோயினியை விட அதிகமான வயதுடையவராக இருப்பார். அவருக்கும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதல், மோதல், கல்யாணம் என்பதை வைத்துதான் கதை போனது. இது ஏற்கனவே பல சீரியல்களில் காப்பியடிக்கப்பட்ட கதையாக இருந்தாலும் இந்த சீரியல் மூலமாக பல குடும்ப பெண்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவ்
அந்த நேரத்தில் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருந்தார். அப்போது சீரியல் திடீரென முடிவுக்கு வந்தது. நீதானே பொன்வசந்தம் முடிவுக்கு வந்த கையோடு தர்ஷனாவுக்கு ஜீ தமிழிலேயே கனா என்ற சீரியலிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் விளையாட்டு வீராங்கனை ஆக நடித்திருந்தார். அந்த சீரியலில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

சீரியலை விட்டு விலகல்
தர்ஷனாவின் கணவரும் டாக்டர் தான். திருமணத்திற்கு பிறகு கனா சீரியலை விட்டு தர்ஷனா விலகி விட்டார். தன்னுடைய முதல் திருமண நாளில் தான் கர்ப்பமாக இருப்பதையும் பகிர்ந்து இருந்தார். அதற்கு பிறகு இப்போது தன்னுடைய குழந்தை மற்றும் கணவரோடு எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

ரசிகர்கள் கமெண்ட்
இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்ட ஃபேமிலி போட்டோஸ் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தர்ஷனாவா இது? இப்ப கொஞ்சம் வெயிட் போட்டுட்டாங்களே என்று சிலர் கமெண்ட் கொடுத்திருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் தர்ஷனா நீங்க மீண்டும் நடிக்க வருவீங்களா? நாங்க வெயிட் பண்றோம்.. என்றும் கமெண்ட் கொடுத்திருக்கின்றனர். அதோடு இன்னும் சிலர் தர்ஷனாவின் குழந்தை அழகை வர்ணித்தும் வருகின்றனர். என்னதான் நடிப்பு கனவாக இருந்தாலும் இப்போது குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் தர்ஷனாவுக்கு வாழ்த்துக்கள் குவிக்கிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications