மணிமேகலை நல்ல பொண்ணு.. நான் சாரி கேட்டேன்.. ஆனா பிரியங்கா இப்படித்தான்! வெங்கடேஷ் பட் ஓபன்
சென்னை: வெங்கடேஷ் பட் பேட்டி ஒன்றில் மணிமேகலை மற்றும் பிரியங்கா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை பட்ட கஷ்டங்கள் குறித்தும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.
கடந்த வார சனிக்கிழமை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை தான் விலகியதாக திடீர் போஸ்ட் போட்டிருந்தார். அதில் தான் விலகியதற்கு காரணம் பிரியங்கா தான் என்று மறைமுகமாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து பிரியங்காவை இணையத்தில் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் விஜய் டிவியில் பிரபலங்கள் பலரும் பிரியங்காவிற்கு ஆதரவாக வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் தொகுப்பாளராக வந்த மணிமேகலை தனக்கு அந்த சீசனில் ஆரம்பத்திலிருந்து போட்டியாளராக வந்த தொகுப்பாளர் என்னுடைய வேலையை செய்ய விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே இந்த சீசனில் தொகுப்பாளர் யார் என்று இணையத்தில் ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்து கிண்டல் செய்து வந்தனர். அந்த அளவிற்கு பிரியங்கா மணிமேகலையை பேசவிடாமல் பேசிக் கொண்டிருந்தார்.
ஆனால் மணிமேகலை கோபப்பட்டு வெளியே வந்த நாளன்று திவ்யா துரைசாமி எலிமினேஷன் என்று அறிவிக்கப்பட்டதும் எல்லா போட்டியாளர்கள் பற்றியும் அவர் பேசியதும் பிரியங்கா அவரைப்பற்றி பேசும்போது மணிமேகலை தடுத்து நிறுத்தி, நீங்கள் இதுவெல்லாம் பேசக்கூடாது ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர் யார் என்று மக்கள் கேட்கிறார்கள்.
நீங்கள் பேசுவதை மட்டும்தான் சேனலில் ஒளிபரப்புகிறார்கள்.. அப்போ நான் இங்கே... எதற்கு என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனால் பிரியங்கா கோபப்பட்டதாகவும் பிறகு மணிமேகலையை இதுகுறித்து மன்னிப்பு கேட்பது போல விளக்கம் கொடுக்க சொன்ன நிலையில் அதற்கு அப்படி செய்ய முடியாது என்று நிகழ்ச்சியில் இருந்து வந்துவிட்டார் என்று தொடர்ச்சியாக பிரபலங்கள் பலரும் கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களாக நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் இதுகுறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் மணிமேகலையை பொறுத்த வரை அவங்க ரொம்ப நல்ல பொண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆரம்பத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு தான் இன்றைய இந்த நிலைக்கு வந்திருக்கிறாங்க
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் போட்ட வேஷங்கள் எல்லாம் அவ்வளவு அழகாக இருக்கும். எல்லா அவர் அவருக்கு கொடுத்த வேலைகளை சிறப்பாக செய்து கொண்டிருந்தார். அதிலும் சோட்டா பீம் போல போட்ட வேஷத்தை என்னால் மறக்கவே முடியாது. ஒரு எபிசோடில் மணிமேகலை நடந்து கொண்டு வந்திருக்கும்போது நான் ஒரு பந்தை எட்டி உதைத்தேன். அந்த பந்து மணிமேகலை மீது விழுந்து மணிமேகலை கீழே விழுந்து விட்டாள்.
அப்ப கூட அவள் அதை பெரிசாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜாலியாகத்தான் எடுத்துக் கொண்டாள். ஆனால் நான் அவரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டேன். பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஒரு மாதிரி தோன்றும் உடனே அவரிடம் மன்னிப்பு கேட்பேன். அவள் சிரித்துக் கொண்டுதான் இருப்பார். அதுபோல பிரியங்காவும் ரொம்பவும் ஜாலியான கேரக்டர். அவருக்குரிய வேலையில் அவர் தனித்து நிற்கணும் என்று நினைப்பவர்.
நான் பிரியங்கா தொகுத்து வழங்கிய ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சிக்கு கெஸ்ட் ஆக போயிருந்தேன். அப்போது எனக்கு நல்ல மரியாதை கொடுத்து இருந்தார். அதுபோல நான் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருந்தேன். அந்த நிகழ்ச்சியில் பிரியங்கா போட்டியாளராக வந்திருந்தார். அவருடைய வேலையை அவர் கரெக்டாக பார்ப்பார்.
ஆனால் தனக்குள்ள வேலையில் தான் கவனம் சிதறக் கூடாது என்று ரொம்பவும் கவனமாகவும் இருப்பார். பிரியங்காவிற்கு எந்த ஷூட்டிங் என்றாலும் அங்கே சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைத்தால் போதும். சமையல் நிகழ்ச்சிக்கு பிரியங்கா வந்திருந்த போது கூட அங்கிருக்கும் கேரட் தக்காளியை சாப்பிட்டு விட்டு ஜாலியாக சுற்றி கொண்டிருப்பார்.இப்போது இவர்கள் இருவருக்குள் உள்ள பிரச்சனையை வைத்து சிலர் ஆதாயம் பார்த்து வருகிறார்கள் என்று அந்த பேட்டியில் வெங்கடேஷ் பட் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications