விஜய் டிவியில் இருந்து வெளிவந்த காரணம் இதுதான்! அவங்களோடு கருத்து வேறுபாடு.. வெங்கடேஷ் பட் ஓப்பன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் எதற்காக தான் வெளியேறி சன் டிவியில் டாப்பு குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் இணைந்தேன் என்று முதல் முறையாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பெரிய அளவில் சர்ச்சைகளை சந்தித்தது. நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியை தயாரித்து வந்த மீடியா மேஷன்ஸ் நிறுவனம் ஐந்தாவது சீசனில் இருந்து வெளியேறப் போகிறேன் என்று சொன்னதை தொடர்ந்து இதன் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் நானும் வெளியேறப் போகிறேன் என்று கூறியிருந்தார். ஆனால் எதற்காக வெளியேறுகிறார் என்று வெளியே தெரியாமலேயே இருந்து வந்தது இந்த நிலையில் முதல் முறையாக சாய் வித் சித்ரா என்ற சேனலில் வெங்கடேஷ் பட் இது பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதில் அவர் கூறுகையில் நான் விஜய் டிவியில் 24 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு மீடியா என்பது ரொம்பவே புதுசு. சமையல் சமையல், சமையல் சமையல் வெங்கடேஷ் பட், கிச்சன் சூப்பர் ஸ்டார், கிச்சன் சூப்பர் ஸ்டார் ஜூனியர், குக் வித் கோமாளி என்று இந்த ஐந்து நிகழ்ச்சிகளையும் நான் ஒரு 15 சீசனாக விஜய் டிவியில் நடத்திக் கொண்டிருந்தேன்.
ஆரம்பத்தில் இந்த டிவியில் நான் நிகழ்ச்சிக்கு வந்ததும் பல சேனல்களில் இருந்து வாய்ப்பு வந்தது. ஆனால் என்னுடைய நண்பர்கள் மற்றும் சேனல் தரப்பில் இருந்து எல்லாரும் சொன்னது நீங்கள் ஒரே ஒரு இடத்தில் தனித்தன்மையா இருங்க என்று சொன்னாங்க. அதனாலையே நானும் சரி என்று 24 வருடங்களாக விஜய் டிவியில் இருந்து விட்டேன். நான் ஐந்து நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் அடுத்தடுத்த சீசனுக்க பண்ணி இருக்கிறேன்.
ஆனால் எல்லாமே மீடியா மெஷன்ஸ் நிறுவனம் தான் அதை தயாரித்தது. விஜய் டிவியில் பல மாற்றங்கள் வந்திருக்கிறது. ஆனால் மீடியா மேஷன்ஸ் நிறுவனத்தில் என்னோடு ஆரம்பத்தில் இருந்தவர்கள் இப்போது வரைக்கும் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே அதிலிருந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் எல்லோருமே எனக்கு முழு சுதந்திரம் தந்தார்கள். நான் விஜய் டிவியில் இத்தனை வருடமாக சுதந்திரமா வேலை செய்வதற்கு காரணமாக இருந்தது மீடியா மெஷன்ஸ் நிறுவனம் தான்.
ஒரு கட்டத்தில் அவர்களுக்கும் விஜய் டிவிக்கும் சின்ன கருத்து வேறுபாடு வந்தது. அதனால் அவங்க அதிலிருந்து வெளியே வந்தாங்க. எனக்கு இவங்க தான் கம்போர்ட் சோன் அதனால் நானும் இவர்களோடு வரவேண்டிய சூழ்நிலை. அதனால் தான் நானும் வெளியே வந்தேன். நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கும் போது செஃப் உங்களை பற்றி புகழ் பேசிக் கொண்டு இருக்கிறான் என்று சொல்லுவார்கள். நானும் அங்கே போய் புகழிடம் பேசுவேன்.
ஆனால் புகழிடம் நீங்கள் இதைத்தான் பேசணும் அவன் உங்களிடம் இது தான் பேசணும் என்று எதையுமே சொன்னது கிடையாது. எனக்கு முழு சுதந்திர மீடியா மெஷனில் கிடைத்தது. அதனால் அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் வந்து விட்டேன் என்று வெங்கடேஷ் பட் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதுபோல நான் விஜய் டிவியில் இருந்து விலகவில்லை எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது நான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மட்டும்தான் வெளியே வந்திருக்கிறேன் என்று வெங்கடேஷ் பட் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications